அவுஸ்திரேலியாவில் கல்வி கற்க வழங்கப்பட்ட விசாக்கள் ரத்து!

அவுஸ்திரேலியாவில் கடந்த 7 ஆண்டுகளில் 96,542 மாணவர் விசாக்கள் ரத்து செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் கல்வி பயிலுவதற்கென வழங்கப்பட்ட மாணவர் விசாக்களே இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2017 டிசம்பர் வரையான காலப் பகுதியிலேயே இவ்விசாக்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

போதைப்பொருள், கொள்ளை, பாலியல், ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபட்டு அவர்கள் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்ட மாணவர்களின் விசாக்களே இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை Character and General Visa Cancellation சட்டமூலம் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதன்படி குறித்த விசாக்கள் ரத்து செய்யப்பட்டதாக தெரிகிறது.