முகமாலை தெற்கு, கோவானம் காட்டுப்பகுதிக்குச் சென்ற மாணவர் ஒருவர் மர்மப் பொருள் ஒன்று வெடித்ததில் தனது கையின் பின்பகுதியை இழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தெடர்பாக மேலும் தெரியவருவதாவது,
எழுதுமட்டுவாளை சேர்ந்த ஜெயபாலன் நிதர்சன் 18 வயது மாணவனே நேற்று காலை 11.00 மணிக்கு முகமாலை தெற்கு கோவானம் காட்டுப்பதிக்குள் வேலி அடைப்பதற்காக கட்டை தறிக்க சென்ற போது மர்மப் பொருள் வெடித்ததில் கையை இழந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த அனர்த்தத்தினால் மாணவனின் இடது கை மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக வைத்திய சிகிச்சைக்காக யாழ். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணகைளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Eelamurasu Australia Online News Portal