பறக்கும் செல்ஃபி கமரா!

ஹோவர் நிறுவனத்தின் பறக்கும் கமரா சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கையடக்க கருவியின் மூலம் 12 எம்பி தரத்திலான புகைப்படங்களையும் 4கே தரத்திலான வீடியோக்களையும் எடுக்கமுடியும்.

நமது புகைப்படத்தை ஒருமுறை பதிவு செய்வதன் மூலம் வெளியிடங்களில் நம்மை சரியாக அடையாளம் கண்டுகொண்டு ஃபோட்டோ மற்றும் வீடியோ எடுக்கும் திறன் கொண்டது.

தலைக்கு மேலே 20 மீட்டர்வரை பறக்கக்கூடியது. 242 கிராம் எடை கொண்ட இந்த கமராவுக்கு ஹோவர் கமரா பாஸ்போர்ட் ட்ரோன் என்று பெயரிடப்பட்டுள்ளது