குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் திருத்தச் (சட்டமூலம்) மீதான இரண்டாம் வாசிப்பு, மேலதிக வாக்குகளினால், நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு, 73 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்துக்கு ஆதரவாக 97 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளுமே அளிக்கப்பட்டன.
மூன்றாவது வாசிப்பு, குழுநிலையில் வைத்து, நீதி அமைச்சர் தலதா அத்துகோரளவினால், திருத்தப்படுகின்றது.
திருத்தப்பட்டதன் பின்னர் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், அந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 95 வாக்குகளும் எதிராக 31 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில், 64 மேலதிக வாக்குகளினால் அந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.