நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் நாடாளுமன்றப் பதவி முத்திரை மற்றும் நாடாளுமன்றக் கடிதத் தலைப்பு போன்றவற்றை மோசடியான முறையில் பயன்படுத்தினார் எனக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலயத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து அந்த விசாரணைகள் குற்றத்தடுப்புப்பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன எனக் கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது பதவிமுத்திரை மற்றும் நாடாளுமன்றக் கடிதத் தலைப்பு போன்றவை களவாடப்பட்டுத் தவறானமுறையில் பயன்படுத்தப்பட்டுள்ளன எனத் தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கடந்த ஜூன் மாதம் கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார். அந்த முறைப்பாட்டை அடுத்து ...
Read More »குமரன்
அவுஸ்ரேலியாவில் விமான விபத்து!
அவுஸ்ரேலியாவில் சிறிய ரக விமானமொன்று விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கலோந்திரா விமான நிலையத்திலேயே நேற்று ( 12-சனிக்கிழமை) இந்த விபத்துச் சம்பவித்துள்ளது. இந்த விமானம் தரையிறங்க முற்பட்ட வேளையில், ஓடு பாதையில் விபத்துக்குள்ளானதாகவும், இந்த விமான விபத்தில் விமானி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை இந்த விமானத்தில் பயணித்த நான்கு பயணிகளும் விமானத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, காப்பாற்றப்பட்டுள்ளனர்.
Read More »பட்ஜெட் விலையில் சியோமி ரெட்மி நோட் 5A
சியோமி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் ரெட்மி நோட் 4 மாடலைத் தொடர்ந்து ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரெட்மி நோட் 5A சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் அமோக வரவேற்பை பெற்ற ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனினை 50 லட்சத்திற்கும் அதிகமானோர் வாங்கி பயன்படுத்தி வரும் நிலையில் சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சியோமியின் ரெட்மி நோட் 5A ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சிறியதாகவும், விலை ...
Read More »நடிகை ஓவியாவுக்கு ‘சம்மன்’
தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த போது நடிகை ஓவியா தற்கொலை முயற்சி செய்ததாக வெளியான தகவலை அடுத்து ஓவியா நேரில் ஆஜராக வேண்டும் என்று காவல் துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நடிகை ஓவியா தற்கொலை முயற்சி தொடர்பான விசாரணைக்கு போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது. தனியார் தொலைக்காட்சி யில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடிகர் கமல்ஹாசன் இதனை தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களின் பேச்சும், நடவடிக்கைகளும் சர்ச்சைக்குள்ளாகி ...
Read More »எம்.எச்.370 – மலேசிய விமானத்தின் தேடும் பணியில் அவுஸ்ரேலியா!
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நடுவானில் காணாமல்போன எம்.எச்.370 என்ற மலேசிய விமானத்தின் தேடுதல் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் கடற்படுகை நிறுவனம் முன்வந்துள்ளது. மலேசியன் எயார்லைன்ஸ் விமானம் எம்.எச். 370, கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத்தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்டு சென்றபோது, நடுவானில் திடீரென மாயமானது. இந்த விமானத்தை தேடும் பணியை மலேசியா, அவுஸ்திரேலியா, சீனா ஆகிய நாடுகள் இணைந்து கடந்த மூன்று ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தன. இந்தியப் பெருங்கடலில் ...
Read More »வடக்கில் மீண்டும் இராணுவப்பதிவுகள்!
புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகள் ஆமை வேகத்தினை அடைந்திருப்பதாக சபையில் சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வடக்கில் மீண்டும் இராணுவப்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார் பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கியின் 2016ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை குறித்த சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், ஊழல் மோசடிகள் குறித்து தற்போது பேசப்படுகின்றது. கடந்த ஆட்சியாளர் தற்போதுள்ளவர்களையும், தற்போதைய ஆட்சியாளர்கள் கடந்த ஆட்சியாளர்களையும் சுட்டிக்காட்டும் படலம் தொடர்ந்தவண்ணமுள்ளது. புதிய ...
Read More »இன்ஃபினிட்டி டிஸ்ப்ளேவுடன் முதல் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் வெளியாகிறது
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 22-ம் திகதி வெளியாக இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மைக்ரோமேக்ஸ் புதிய ஸ்மார்ட்போன் வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, டாப் பெசலில் சென்சார்கள், இயர்போன் மற்றும் முன்பக்க கேமரா வழங்கப்படுகிறது. சமீபத்தில் இணையத்தில் வெளியான தகவல்களில் புதிய ஸ்மார்ட்போன் 5.7 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்பட்டது. சமீபத்தில் மைக்ரோமேக்ஸ் இந்தியா ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்ட வீடியோவில் எவோக் டூயல் நோட் ஸ்மார்ட்போன் விரைவில் வெளியிடப்படும் ...
Read More »உலகின் அதிக வயது தாத்தா மரணம்
கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த உலகின் அதிக வயதான முதியவர் கிறிஸ்டல், தனது 113 வயதில் காலமானார். இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டல், உலகின் அதிக வயதான நபராக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்றவர். கிறிஸ்டல், தனது 113 வயதில் காலமானார். 1903-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி பிறந்த அவர், 114-வது பிறந்தநாளை கொண்டாட இன்னும் ஒரு மாத காலம் மட்டுமே உள்ள நிலையில் கிறிஸ்டல் உயிரிழந்துள்ளார். இஸ்ரேல் நாட்டின் ஹாய்பா நகரின் ஜர்னோவ் ...
Read More »என் வாழ்க்கையே போராட்டம் தான்: கங்கனா ரணாவத்
என் வாழ்க்கை முழுவதுமே போராட்டம் தான் என்று பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் சமீபத்தில் நடைபெற்ற பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். இந்தி நடிகை கங்கனா ரணாவத் படங்களில் பிசியாக நடித்து வருகிறார் ‘மனிகர்னிகா’ படத்தில் நடித்த போது காயம் ஏற்பட்டது. இதனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற வந்த அவர் சமீபத்தில் வீடு திரும்பினார். இவர் நடிக்கும் மற்றொரு படமான ‘சிம்ரன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். “எனது சினிமா பாதையும், அதன் பயணமும் வித்தியாசமானது. இந்த விழாவுக்கு விமானத்தில் வந்த போது எனக்கு ...
Read More »டிரம்பை கேலி செய்து வெள்ளை மாளிகை முன்பு வைக்கப்பட்ட கோழி பொம்மை
அமெரிக்க அதிபர் டிரம்பை திறமை இல்லாதவர் என சித்தரிக்கும் வகையில் வெள்ளை மாளிகை முன்பு காற்றடைத்த கோழி பொம்மை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு சர்ச்சைக்குரிய பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டார். 6 முஸ்லிம் நாடுகளுக்கு விசா கட்டுப்பாடுகள், மெக்சிகோ- அமெரிக்கா எல்லையில் சுவர் எழுப்புதல் போன்ற அறிவிப்புகளால் நாட்டில் குழப்பம் ஏற்பட்டது. தற்போது அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வாஷிங்டன் அதிபரின் அதிகாரபூர்வ இல்லமான வெள்ளை மாளிகைக்கு அருகே காற்றடைத்த கோழி பொம்மை ...
Read More »
Eelamurasu Australia Online News Portal