பட்ஜெட் விலையில் சியோமி ரெட்மி நோட் 5A

சியோமி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் ரெட்மி நோட் 4 மாடலைத் தொடர்ந்து ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரெட்மி நோட் 5A சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் அமோக வரவேற்பை பெற்ற ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனினை 50 லட்சத்திற்கும் அதிகமானோர் வாங்கி பயன்படுத்தி வரும் நிலையில் சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சியோமியின் ரெட்மி நோட் 5A ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சிறியதாகவும், விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு, எல்இடி பிளாஷ் கொண்ட பிரைமரி கேமரா கொண்டிருக்கும்,  எனினும் கைரேகை ஸ்கேனர் போனின் பின்புறத்தில் வழங்கப்படவில்லை. யுஎஸ்பி போர்ட் மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக், வால்யூம் பட்டன்கள் போனின் வலதுபுறத்தில் காணப்படுகிறது.
சியோமி ரெட்மி நோட் 5A ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் எச்டி டிஸ்ப்ளே 720×1280 பிக்சல் டிஸ்ப்ளே, 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட், 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்கும் என்றும் 3080 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய ரெட்மி நோட் 5A ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போன்களின் வெளியீடு சார்ந்து எவ்வித தகவலும் இல்லை என்றாலும், இவை அடுத்த ஆண்டின் துவக்கத்தில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் சியோமி நிறுவனம் தனது முதல் டூயல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை இந்தியாவில் வெளியிட தயாராகி வருகிறது என கூறப்படுகிறது. முன்னதாக சீனாவில் வெளியிடப்பட்ட Mi 5X ஸ்மார்ட்போன் RMB 1,499 அதாவது இந்திய மதிப்பில் ரூ.15,000 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தியாவில் வெளியிடப்படும் பட்சத்தில் சியோமி Mi 5X ஸ்மார்ட்போன் ஹானர் 6X, கூல்பேட் கூல் 1 மற்றும் எல்ஜி X கேம் மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.