இன்ஃபினிட்டி டிஸ்ப்ளேவுடன் முதல் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் வெளியாகிறது

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 22-ம் திகதி வெளியாக இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மைக்ரோமேக்ஸ் புதிய ஸ்மார்ட்போன் வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, டாப் பெசலில் சென்சார்கள், இயர்போன் மற்றும் முன்பக்க கேமரா வழங்கப்படுகிறது. சமீபத்தில் இணையத்தில் வெளியான தகவல்களில் புதிய ஸ்மார்ட்போன் 5.7 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்பட்டது.
சமீபத்தில் மைக்ரோமேக்ஸ் இந்தியா ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்ட வீடியோவில் எவோக் டூயல் நோட் ஸ்மார்ட்போன் விரைவில் வெளியிடப்படும் என்பதை தெரியப்படுத்தியது.
மைக்ரோமேக்ஸ் எவோக் டூயல் நோட் ஸ்மார்ட்போன் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஸ்மார்ட்போனில் மேம்படுத்தப்பட்ட கேமரா வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் டூயல் சிம் கார்டு ஸ்லாட் கொண்ட மைக்ரோமேக்ஸ் எவோக் நோட் ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்ட நிலையில் புதிய எவோக் டூயல் நோட் ஸ்மார்ட்போனில் இரட்டை கேமரா வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் முதல் இரட்டை கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. டூயல் 5 என அழைக்கப்படும் ஸ்மார்ட்போனில் 13 எம்பி இரட்டை பிரைமரி கேமரா மற்றும் 13 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டது.