பிரபல பாலிவுட் நடிகையான அலியா பட், தற்போது ஆர்.ஆர்.ஆர். படத்தை இயக்கி வரும் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலியின் அறிவுரையை ஏற்றிருக்கிறார். உடலை பிட்டாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நடிகைகளிடம் அதிகரித்திருக்கிறது. சமந்தா, ரகுல் பிரீத் சிங், ஸ்ரேயா, தீபிகா படுகோனே உள்ளிட்ட பல நடிகைகள் கடினமான உடற்பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர். அந்த பட்டியலில் நடிகை அலியாபட் இணைந்திருக்கிறார். பாகுபலி படத்தையடுத்து ராஜமவுலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் சரித்திர படம் உருவாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிக்கின்றனர். ...
Read More »குமரன்
ரணிலுக்கு எதிரான மூன்றாவது உட்கட்சிக் கிளர்ச்சி!
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக, ஐக்கிய தேசிய கட்சிக்குள் உருவாகியிருக்கும் சர்ச்சை, மிகவும் மோசமான நிலையை அடைந்து உள்ளதாகவே தெரிகின்றது. ‘தாமே கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக வேண்டும் என்பதில், ஐ.தே.க பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ உறுதியாக இருக்கிறார். அதேவேளை, அவருக்கு அதற்கு இடமளிப்பதில்லை என்பதில், கட்சித் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவும் உறுதியாக இருக்கிறார். இதற்கு முன்னர் ஒருபோதும் இல்லாதவாறு, சஜித்துக்கு ஆதரவாகக் கட்சித் தலைமையை எதிர்த்துக் குரல் கொடுக்கக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதற்கு முன்னர், ஐ.தே.கவுக்குள் தலைமைத்துவப் ...
Read More »முகாம்களை தகர்த்து ஐஎஸ் உறுப்பினர்களின் குடும்பத்தவர்களை விடுவியுங்கள்!
ஈராக்கிலும் சிரியாவிலும் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐஎஸ் அமைப்பின் குடும்ப உறுப்பினர்களை விடுவிப்பதற்கான தாக்குதல்களை மேற்கொள்ளுமாறு அமைப்பின் தலைவர் அல் பக்தாதி தனது உறுப்பினர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.. திங்கட்கிழமை வெளியாகியுள்ள ஒலிநாட பதிவொன்றில் அவரது இந்த வேண்டுகோள் இடம்பெற்றுள்ளது. உங்கள் சகோதர சகோதரிகளை விடுவிப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்,அவர்களை அடைத்து வைத்துள்ள சுவர்களை இடித்து நொருக்கி அவர்களை காப்பாற்றுங்கள் என அல்பக்தாதி தனது அமைப்பின் உறுப்பினர்களை கேட்டுக்கொண்டுள்ளார். சிலுவை போரில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் அவர்களது சியா ஆதரவாளர்களால் முஸ்லீம் பெண்கள் அவமானசிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் முஸ்லீம்களால் ...
Read More »பிரியா நடேஸ் குடும்பத்தை நாடு கடத்துவதற்கு நீதிமன்றம் நாளை வரை தடை!
ஈழ தமிழ் அகதிகள் குடும்பத்தை நாடு கடத்துவதை தடுக்கும் உத்தரவை அவுஸ்திரேலிய நீதிமன்றம் நாளைவரை நீடித்துள்ளது. பிரியா நடேஸ் தம்பதியினரையும் குழந்தைகளையும் நாடு கடத்துவதை தடுத்து நீதிமன்றம் விதித்த உத்தரவு இன்றுடன் முடிவடையிருந்த நிலையிலேயே நீதிமன்றம் தடை உத்தரவை நாளை வரை நீடித்துள்ளது. தனது முடிவு குறித்து தீர்மானிப்பதற்கு மேலும் கால அவகாசம் அவசியம் என்பதால் தடை உத்தரவை நாளை வரை நீடித்துள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் கடும் விவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
Read More »சஹ்ரானின் சகாவின் வாக்கு மூலம்!- பாலமுனையில் ஆயுதங்கள் மீட்பு!
பயங்கரவாதி சஹ்ரானின் கல்முனைப் பகுதி செயற்பாட்டாளராக இருந்து தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் கல்முனை சியாமிடமிருந்து பெறப்பட்ட தகவலை அடிப்படையாகக் கொண்டு இன்று(18) பாலமுனைப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது காணியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி உள்ளிட்ட குண்டுகள் தயாரிக்கும் வெடிபொருட்களை காவல் துறையினர் மீட்டுள்ளனர். தேசிய அரச புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த தகவலை அடிப்படையாகக் கொண்டு அம்பாறை சிரேஷ்ட காவல் துறை அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலின் போது இவ் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் அம்பாறை ...
Read More »புதிய சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் !
சர்வதேச பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்கும் வகையிலான புதிய சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. புதிய வடிவமைப்பில் தோன்றும் பயங்கரவாதத்தை தடுப்பதற்காக தற்காலிகமாக வரையறுக்கும் உத்தரவு பல்வேறு வகையில் பயங்கரவாதம் ஊக்குவிக்கப்படுவதை தடைசெய்தல் மற்றும் பெயர் குறிப்பிடப்படும் வெளிநாட்டில் இருப்பது மற்றும் உயிரியல் ரீதியில் கட்டுப்பாட்டை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட துறைகளினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைக்கு அமைவான தற்போதுள்ள சட்டத்தில் திருத்த சட்டமூலத்தை மேற்கொள்வதற்கு அல்லது பொருத்தமான புதிய சட்ட திருத்தத்தை மேற்கொள்வதற்காக சட்ட திருத்த தயாரிப்பு பிரிவிடம் சமர்ப்பிப்பதற்காக பிரதமரும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரும் கூட்டாக சமர்ப்பித்த ...
Read More »விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி?
விஜய்யின் அடுத்த படத்தில், அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அட்லீ இயக்கிவரும் ‘பிகில்’ படத்தில் தன் பணிகளை முடித்துவிட்டு, லோகேஷ் கனகராஜ் படத்துக்காகத் தயாராகி வருகிறார் விஜய். இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அக்டோபர் முதல் வாரம் படப்பிடிப்பு என்பதால், நடிகர்கள் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க கியாரா அத்வானியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், கால்ஷீட் தேதிகள் பிரச்சினையால் யார் நாயகி என்பது இன்னும் முடிவாகவில்லை. இதனிடையே இந்தப் ...
Read More »கோணாவில் பாடசாலையை எரித்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்!
மனித இனத்தின் அறிவுக்கண்ணைத் திறப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இடமாக பாடசாலையே காணப்படுகின்றது. ஒரு மனிதனுக்கு அறிவு, திறன் ஆகியவற்றை வழங்கி அவனது மனப்பாங்கில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி அவனை மனிதனாக்கி வாழ வைப்பதற்குரிய முக்கிய பணியை பாடசலைகளே ஆற்றுகின்றன. இதனால்தான் பாடசாலைகள் இறைவழிபாட்டுத் தலங்களை விட மேலானவையாகப் போற்றப்படுகின்றன. அறிவுக்கண்ணைத் திறந்து மனிதனை மனிதனாக்கி மனிதனாக வாழவைக்கும் மிகமுக்கிய பணியைச் ஆற்றும் பாடசாலைக்குத் தீ வைத்து எரித்தல் என்பது மனிதன் தனக்குத் தானே தீ மூட்டி தன்னை எரித்துக்கொள்வதுடன் தனது இனத்தையே எரித்து ...
Read More »இந்தோனேசிய காட்டுத் தீ: சட்டவிரோதமாக காடுகள் எரிப்பா?
காட்டுத் தீ தொடர்பாக மலேசியாவும், இந்தோனேசியாவும் மாறிமாறி குற்றஞ்சாட்டி வந்த நிலையில் இது தொடர்பாக 200 பேரை இந்தோனேசியா கைது செய்துள்ளது இதுகுறித்து இந்தோனேசிய போலீஸார் போலீஸார் தரப்பில், ‘ இந்தோனேசியாவின் மழைக் காடுகளில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக சுமார் 200 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் காட்டுத் தீ விபத்து விவசாயத்திற்காக காடுகளை சட்டவிரோதமாக எரிப்பதனால் ஏற்படுகிறது. தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளனர். இந்தோனேசியாவில் மழைக் காடுகள் அமைந்துள்ள சுமத்ரா மற்றும் போர்னியோவில் கடந்த ...
Read More »முஸ்லீம்களின் ஆடை பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும்!
முஸ்லீம்களின் ஆடை பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வினை இந்த அரசு பெற்றுத் தர வேண்டும் என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம். மஹ்தி கோரிக்கை விடுத்துள்ளார். சபையின் 17 வது அமர்வு இடம்பெற்ற போதே அவர் இக்கோரிக்கையினை முன்வைத்தார். தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில் பல்லின சமூகம் வாழும் இந்த நாட்டிலே ஆடை சுதந்திரம் என்பது சட்டத்தால் தெளிவாக வரையறை செய்யப்பட்டிருந்தாலும் ஆங்காங்கு சில கசப்பான சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. சட்டமானது சுற்றறிக்கை , வர்த்தமானி அறிவித்தல்கள் ஊடாக காலத்திற்கு காலம் தெளிவு படுத்தப் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal