குமரன்

வவுனியா சிறைச்சாலைக்கு ஐ. நா அதிகாரிகள் விஜயம்!

வவுனியா சிறைச்சாலைக்கு ஐ. நா. அதிகாரிகள் இன்று (07.04) விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.   வவுனியா சிறைச்சாலைக்கு சென்ற  ஐ.நா அதிகாரிகள் 5 பேர் சிறைச்சாலையில் உள்ள கைதிகளுடனும் சந்திப்பை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 1 மணி நேரம் சிறைச்சாலைக்குள் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் குறித்த ஐ. நா அதிகாரிகள் குழு அங்கிருந்து சென்றிருந்தது. குறித்த விஜயம் தொடர்பாக ஐ. நா அதிகாரிகளிடம் ஊடகவியலாளர்கள் கேட்டபோது எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்காத ஐ. நா. அதிகாரிகள் தமது விஜயம் தொடர்பாக செய்திகளை வெளியிட வேண்டாம் எனவும் ...

Read More »

பாகிஸ்தான் பிரதமர் வீடு அருகே துப்பாக்கி குண்டுகள் கண்டுபிடிப்பு!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வீடு அருகே அரை கிலோ மீட்டர் தூரத்தில் துப்பாக்கி குண்டுகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் புறநகரில் பிரதமர் இம்ரான்கானின் ‘பான்காலா’ என்ற அவரது வீடு உள்ளது. பிரதமராவதற்கு முன்பு அந்த வீட்டில்தான் அவர் தங்கியிருந்தார். அவரது இந்த வீட்டிற்கு அருகே அரை கிலோ மீட்டர் தூரத்தில் 18 துப்பாக்கி குண்டுகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்பு படை, குற்றப்புலனாய்வு பிரிவு, வெடிகுண்டு செயல் இழப்பு பிரிவு ...

Read More »

குழந்தைகளுக்கான படத்தில் ஜி.வி.பிரகாஷ்!

விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் – சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் வாட்ச்மேன் படம் குழந்தைகளும் ரசிக்கும்படியாக உருவாகி இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படங்கள் சமீபகாலத்தில் குறைந்துவிட்டன. ஜீவி.பிரகாஷ், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் வாட்ச்மேன் படம் அதை பூர்த்தி செய்யும் என்று படக்குழு கூறுகிறது. விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சாயிஷா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். நாய் ஒன்று முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. பழம்பெரும் நடிகை மனோரமா ...

Read More »

அவுஸ்திரேலியாவில் தீ விபத்து! ஈழத் தமிழ் அகதி காயம்!

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஈழத்தைச் சேர்ந்த தமிழ் அகதி ஒருவர் பாதிப்படைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மெல்பேர்னிலுள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஈழ அகதி ஒருவர் காயமடைந்துள்ளார். ஈழத்தைச் சேர்ந்த விக்னேஷ் வரதராஜா என்ற அகதியே இந்த நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளார். ஆபத்தான நிலைக்குள்ளான விக்னேஷ் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட விக்னேஷின் மருத்துவ செலவிற்காக 13,000 டொலருக்கும் அதிக பணம் புலம்பெயர் தொழிலாளர்களால் சேகரிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை இடம்பெற்ற இந்த தீவிபத்தில் தொழிற்சாலையின் பெரும்பகுதி சேதமடைந்துள்ளதாக ...

Read More »

வாள்வெட்டு -பிணை வழங்குவது சமூகத்துக்கு அச்சுறுத்தல்!

வாள்வெட்டு வன்முறைகள் பாரதூரமானவை அவை சமூகத்தை பீதிக்குள்ளாக்குபவை. அவற்றில் ஈடுபடுவோருக்கு பிணை வழங்குவது சமூகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகவே அமையும் என சுட்டிக்காட்டிய யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் வன்முறையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் சார்பான பிணை விண்ணப்பத்தை நிராகரித்துள்ளார். யாழ்ப்பாணம் கொக்குவில் கருவப்புலம் வீதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், வீட்டின் முன் பக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. இந்தச் சம்பவம் கடந்த பெப்ரவரி  மாதம் 19ஆம் திகதி மாலை இடம்பெற்றது. வன்முறையை ...

Read More »

கதிர்காம ஆடிவேல் திருவிழா தொடர்பில் குழப்பம்!

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் திருவிழா நடைபெறும் உற்சவ காலம் தொடர்பாக வேறுபட்ட தினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதால் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனையடுத்து அதனை தீர்த்துவைத்து உரிய சரியான காலத்தை அறிவிக்குமாறு கதிர்காம பாதயாத்திரீகர்கள் சங்கம் மொனராகலை அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இரு மாதகாலத்திற்கு முன்னரே யாழ்ப்பாணத்திலிருந்து பாதயாத்திரையை மேற்கொள்ளும் வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரைச் சங்கத்தினர் இவ்வேண்டுகோளை எழுத்து மூலம் விடுத்துள்ளனர்.   சங்கத்தலைவர் வேல்சாமி மகேஸ்வரன் மொனராகலை அரச அதிபருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாம் வருடாந்தம் யாழ். செல்வச்சந்நதி ...

Read More »

அவுஸ்திரேலியாவில் 5 மாநில மக்களுக்கு காத்திருக்கும் “பரிசு”!

அவுஸ்திரேலியாவின் பெரும்பாலான மாநிலங்களில் Daylight saving நேரமாற்றம் அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளை அதிகாலை இந்த நடவடிக்கை அமுலுக்கு வரவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த நேரமாற்றத்தின் மூலம் பலர் வழக்கமாக உறங்கும் நேரத்துடன் ஒரு மணி நேரம் அதிகமான தூக்கத்தைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர். வருடத்தின் ஏப்ரல் மற்றும் ஒக்டோர் மாதங்களில் மேற்கொள்ளப்படுகின்ற இந்த நேரமாற்றம் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூன்று மணியளவில் இடம்பெறவுள்ளது. இந்த மாற்றத்தின் பிரகாரம், நியூசவுத் வேல்ஸ், விக்டோரியா, தெற்கு அவுஸ்திரேலியா, டஸ்மேனியா மற்றும் கன்பரா மாநில கடிகாரங்கள் ஏழாம் திகதி ...

Read More »

ரூ.800 கோடியில் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன்!

மணிரத்தினத்தின்   கனவுப் படமான பொன்னியின் செல்வன் ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ‘பொன்னியின் செல்வன்’. அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம். பொன்னியின் செல்வன் என்ற பெயரிலேயே இதை படமாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார் மணிரத்னம். நட்சத்திர அந்தஸ்துள்ள பெரிய நடிகர், நடிகைகள் இதில் நடிக்க உள்ளனர். படத்தில் சுந்தர சோழராக அமிதாப்பச்சனும், ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், அருள்மொழி வர்மனாக ...

Read More »

சீனாவின் ‘பட்டுப் பாதை’யால் படபடக்கும் நாடுகள்!

சீனாவின் பெரிய கனவுத் திட்டமான புதிய பட்டுப் பாதை திட்டத்தில் சமீபத்தில் இத்தாலி இணைந்தது. பட்டுப் பாதை திட்டத்தில் சமீபத்தில் இத்தாலி இணைந்தது. இத்திட்டத்தை சில நாடுகள் வரவேற்றபோதிலும், பல நாடுகள் படபடப்பு அடைந்திருக்கின்றன. பட்டு உற்பத்தியில் புகழ்பெற்றுத் திகழ்ந்த சீனா, அதன் வணிகத்துக்காக உருவாக்கிய பண்டைய பாதைதான், பட்டுப் பாதை. அதேபோன்று ஒரு நவீன தடத்தை அந்நாடு உருவாக்க முயல்கிறது. அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் டமாரா சின், ‘தி இன்வென்ஷன் ஆப் சில்க் ரோடு’ (பட்டுப் பாதை கண்டுபிடிப்பு) என்ற நூலை ...

Read More »

104 வயது பாட்டியின் விசித்திர ஆசை!

முதியோர் விடுதியில் தங்கியிருந்த 104 வயது பாட்டியின் விசித்திர ஆசை. இங்கிலாந்தில் முதியோர் விடுதியில் தங்கியிருந்த 104 வயது பாட்டியின் விசித்திர ஆசையை நிறைவேற்றும்விதமாக, அவரை கைது செய்து நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இங்கிலாந்தின் பிரிஸ்டல் பகுதியில் முதியோர் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தக் காப்பகத்தில் வசிப்பவர் களின் ஆசையை நிறைவேற்ற இங்கிலாந்து தொண்டு நிறுவனம் ஒன்று முடிவு செய்தது. இதையடுத்து முதியவர்கள் தங்கள் ஆசைகளை ஒரு துண்டுச்சீட்டில் எழுதி, அதற்கென தொண்டு நிறுவனம் வைத்திருந்த பெட்டியில் போட்டுள்ளனர். அதில் ஆன் புரோக்கன்புரோ ...

Read More »