அவுஸ்திரேலியாவின் பெரும்பாலான மாநிலங்களில் Daylight saving நேரமாற்றம் அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாளை அதிகாலை இந்த நடவடிக்கை அமுலுக்கு வரவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த நேரமாற்றத்தின் மூலம் பலர் வழக்கமாக உறங்கும் நேரத்துடன் ஒரு மணி நேரம் அதிகமான தூக்கத்தைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
வருடத்தின் ஏப்ரல் மற்றும் ஒக்டோர் மாதங்களில் மேற்கொள்ளப்படுகின்ற இந்த நேரமாற்றம் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூன்று மணியளவில் இடம்பெறவுள்ளது.
இந்த மாற்றத்தின் பிரகாரம், நியூசவுத் வேல்ஸ், விக்டோரியா, தெற்கு அவுஸ்திரேலியா, டஸ்மேனியா மற்றும் கன்பரா மாநில கடிகாரங்கள் ஏழாம் திகதி அதிகாலை மூன்று மணிக்கு நேரமாற்றம் செய்யப்பட்டு இரண்டு மணியாக பின் நகர்த்தப்படும்.
அடுத்த நேரமாற்றம் எதிர்வரும் ஒக்டோர் மாதம் ஆறாம் திகதி அதிகாலை இரண்டு மணிக்கு இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
குயின்ஸ்லாந்து, Northern Territory மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா ஆகிய மாநிலங்கள் இந்நேரமாற்றத்தில் பங்கெடுப்பதில்லை.
Eelamurasu Australia Online News Portal