அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஈழத்தைச் சேர்ந்த தமிழ் அகதி ஒருவர் பாதிப்படைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
மெல்பேர்னிலுள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஈழ அகதி ஒருவர் காயமடைந்துள்ளார்.
ஈழத்தைச் சேர்ந்த விக்னேஷ் வரதராஜா என்ற அகதியே இந்த நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளார். ஆபத்தான நிலைக்குள்ளான விக்னேஷ் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட விக்னேஷின் மருத்துவ செலவிற்காக 13,000 டொலருக்கும் அதிக பணம் புலம்பெயர் தொழிலாளர்களால் சேகரிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை இடம்பெற்ற இந்த தீவிபத்தில் தொழிற்சாலையின் பெரும்பகுதி சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தீயை கட்டுப்படுத்துவதற்கு 30 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 11 தீயணைப்பு வாகனங்கள் அங்கு கொண்டு வரப்பட்டுள்ளது. உள்நாட்டு யுத்தம் காரணமாக அவுஸ்திரேலியா சென்ற விக்னேஷ், அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal