மெல்பேர்ணில் தமிழ் பெண்மணி ஒருவரை 8 ஆண்டுகளாக தமது வீட்டில் அடிமை போல வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் தமிழ் தம்பதியர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கினறன. இலங்கைப் பின்னணி கொண்ட தமிழ் தம்பதியரின் வீட்டில் 2007ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை பணிபுரிந்த குறித்த பெண் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காவல்துறையினருடனும் எல்லைப் பாதுகாப்புப் பிரிவினருடனும் சந்திப்பொன்றினை மேற்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதைத்தொடர்ந்து இச்சம்பவம் மீதான வழக்கு விசாரணை சில தினங்களுக்கு முன்னர் மெல்பேர்ண் மஜிஸ்திரேட் நீதிமன்றில் நடைபெற்றிருந்த நிலையில் இதன் ...
Read More »குமரன்
சிறீலங்காவை புரட்டியெடுத்த அவுஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்
சிறீலங்காவை அணிக்கு எதிரான டி20 தொடரில் அதிரடி காட்டிய அவுஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் ஐசிசி டி20 ஆல்ரவுண்டர் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். சிறீலங்கா – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இதில் முதல் டி20 போட்டியில் 145 ஓட்டங்கள் விளாசி அணிக்கு சாதனை வெற்றியைத் தேடித்தந்த மேக்ஸ்வெல், 2வது போட்டியிலும் 66 ஓட்டங்கள் அடித்து அவுஸ்திரேலிய அணியை வெற்றி பெற வைத்தார். இதனால் அவுஸ்திரேலிய அணி 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என முழுமையாக ...
Read More »ஐபோன், ஐபேட்களில் சூப்பர் மரியோ ரன் கேம்
ஆப்பில் நிறுவனம் ஐபோன் மற்றும் ஐபேட்களில் சூப்பர் மரியோ ரன் கேம் அறிமுகப்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐஃபோன் 7 மற்றும் 7 பிளஸ் ஆப்பிள் நிறுவனம் சான்பிரான்சிஸ்கோவில் அறிமுகப்படுத்தியது. இதில் அனைத்து அம்சங்களும் அடங்கியுள்ளது. மேலும் கூடுதல் சிறப்பம்சமாக இதில் உலகில் பிரபலமான மரியோ கேம் அறிமுகமாகிறது.மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆப்பிள் ஐ.ஓ.எஸ் சாதனங்கள் அனைத்திலும் சூப்பர் மரியோ ரன் கேம் வரும் என சான் பிரான்சிஸ்கோ நிகழ்வில் தெரிவித்துள்ளது. சூப்பர் மரியோ ரன் கேம் விளையாடுவதற்கு ஒருவர் மட்டும் ...
Read More »திரைக்குப் பின்னால் வாசுகி பாஸ்கர்
பெண்களுக்கு ஆடை வடிவமைப்பில் ஆர்வம் அதிகம். திரையுலகில் ஆடை வடிவமைப்பு மிக முக்கியமான துறை. தமிழ்த் திரையுலகில் ஓர் ஆடை வடிவமைப்பாளராகத் தனி முத்திரை பதித்துவருகிறார் வாசுகி பாஸ்கர். இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் அண்ணன் ஆர்.டி. பாஸ்கரின் மகள். எப்படி ஆடை வடிவமைப்பு துறைக்குள் வந்தீர்கள்? தனியாக ஃபேஷன் டிசைனிங் செய்யலாம் என்றுதான் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது பாரதிராஜா சார் ‘கண்களால் கைது செய்’ படத்துக்குப் பணியாற்ற அழைத்தார். அப்படித்தான் சினிமா துறைக்குள் வந்தேன். அதற்குப் பிறகு அப்படியே வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. இப்போது ‘சென்னை ...
Read More »அரசியல் கைதி செல்வநாயகம் ஆரூரனின் நாவலுக்கு விருது
செல்வநாயகம் ஆரூரன் என்ற அரசியல் கைதி எழுதிய “யாழிசை” என்ற நாவலுக்கு விருதுகள் கிடைத்துள்ளன. இந் நாவலுக்கு இலண்டன் தமிழ் சங்கம், கொழும்பு தமிழ்ச்சங்கம் விருதினை வழங்கியுள்ளது. இவ் விருதுகளை ஆருரனின் தந்தை செல்வநாயகம் பெற்றுக் கொண்டார். நாவலாசிரியர் ஆருரன் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் கற்ற பொறியிலாளர். 2008 ஆண்டிலிருந்து 08 வருடங்களாக மகசின் சிறை தடுப்பில் உள்ளார். சிறைச்சாலையிலேயே “யாழிசை“ என்ற நாவலை எழுதினார். இந் நாவல் ஒரு பெண்போராளிபற்றியது. அப் பெண் போராளி மனைவி, மாமி, மருமகள், ஒரு சமூகத்தின் அங்கத்துவராக பல பாத்திரங்களை தாங்கி ...
Read More »சிட்னியில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தியதாக ஒருவர் கைது
சிட்னியின் தென் மேற்கு பகுதியில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தியதாகவும், கொலை செய்ய முயற்சித்ததாவும் 22 வயதான ஒருவர் மீது ஆஸ்திரேலிய காவல் துறையினர் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த நபர் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினரால் தூண்டப்பட்டவர் என்று அவர்கள் கூறுகின்றனர். புறநகர் பூங்கா ஒன்றில் வைத்து 59 வயதான ஒருவரை இந்த நபர் பல முறை கத்தியால் குத்தியதாகவும், கைது செய்ய சென்ற காவல் துறையினரை தாக்க முயற்சித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட இருக்கும் ...
Read More »கண்ணுக்குள் அறுவை சிகிச்சை
ஒரு நோயாளியின் கண்ணுக்குள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள, இயந்திர மனிதனை முதல் முறையாக அறுவை சிகிச்சை நிபுணர்கள் பயன்படுத்தி இருக்கின்றனர். பிரிட்டனை சேர்ந்த ஒருவரின் விழித்திரையில் இருந்து ஒரு மில்லி மீட்டரில் நூறில் ஒரு பகுதி தடிமனான மிகவும் மெல்லிய படத்தை, இயந்திர மனிதனை வைத்து உரித்து எடுத்த பிறகு, அந்நபரின் ஒரு கண் பார்வை மீட்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த இயந்திர மனிதரின் கையிலிருக்கும் வடிகட்டிகள், மென்மையான செயல்முறைகளை மிகவும் துல்லியமாக செயல்படுத்தி இந்த அறுவை சிகிச்சையை நிறைவேற்றி இருக்கின்றன. கண் அறுவை சிகிச்சையில் புதிய ...
Read More »இன்று பாரதியின் நினைவு நாள்- செப்டம்பர் 11
பாரதி கவியரசராக மட்டுமே விளங்காமல், மிகச் சிறந்த பத்திரிகையாளராகவும் தன்னிகரற்று விளங்கினார். பாரதியின் பத்திரிகை உலகத் தொடர்புகள் பரந்துபட்டவை; விதந்து பேசுவதற்கும் உரியவை.
Read More »சிறீலங்கா இராணுவத்தின் பாதுகாப்புக்காக வலிகாமம் வடக்கில் 1000 ஏக்கர் காணி தேவையாம்
சிறீலங்காவின் தேசிய பாதுகாப்புக்காக வலிகாமம் வடக்கில் 1000 ஏக்கர் காணி தேவைப்படுவதாகவும் அதனை கையகப்படுத்துவதற்கு காணி அமைச்சரிடம் அனுமதியைக் கோரியுள்ளது இராணுவம். தற்போது இராணுவம் கையகப்படுத்தி வைத்திருக்கும் இந்தக் காணிகளிலேயே அந்த 1000 ஏக்கரும் அடங்கியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். அத்துடன் வலிகாமம் வடக்கில் பொதுமக்களின் 700 ஏக்கர் காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். மேலும், இராணுவத்தினரிடமிருந்த 500 ஏக்கர் காணிகளை தாம் விடுவிக்குமாறு கோரியதற்கிணங்கவே இராணுவத்தினர் 700 ஏக்கர் காணிகளை விடுவிக்க ...
Read More »சன்னி லியோனின் வாழ்க்கை- ஆவணப்படமாக வெளியானது
டொரான்ட்டோ சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை சன்னி லியோனின் வாழ்க்கையை சித்தரிக்கும் ‘மோஸ்ட்லி சன்னி’ என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது. இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை பூர்விகமாக கொண்ட கரஞ்சித் கவுர் வோரா கனடாவில் வசித்துவந்த தனது பெற்றோருடன் வாழ்ந்தபடி, மாடலிங் துறையில் கால் பதிக்க முயன்றார். பூசி மெழுகினாற்போன்ற மேனி, குள்ளமான உருவம் என பல்வேறு புறக்கணிப்புக்குள்ளான அவருக்கு அந்தரங்க காட்சிகளை காசுக்கு விற்கும் ‘நீலப்பட’ உலகம் சிகப்பு கம்பளம் விரித்து, ஒரு புதியபாதைக்கு பச்சைக்கொடி காட்டியது. பாலுறவு காட்சிகளை பாலபாடமாக விளக்கும் நீலப்பட உலகத்துக்காக ...
Read More » Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				 
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			