செல்வநாயகம் ஆரூரன் என்ற அரசியல் கைதி எழுதிய “யாழிசை” என்ற நாவலுக்கு விருதுகள் கிடைத்துள்ளன.
இந் நாவலுக்கு இலண்டன் தமிழ் சங்கம், கொழும்பு தமிழ்ச்சங்கம் விருதினை வழங்கியுள்ளது. இவ் விருதுகளை ஆருரனின் தந்தை செல்வநாயகம் பெற்றுக் கொண்டார்.
நாவலாசிரியர் ஆருரன் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் கற்ற பொறியிலாளர். 2008 ஆண்டிலிருந்து 08 வருடங்களாக மகசின் சிறை தடுப்பில் உள்ளார்.
சிறைச்சாலையிலேயே “யாழிசை“ என்ற நாவலை எழுதினார். இந் நாவல் ஒரு பெண்போராளிபற்றியது. அப் பெண் போராளி மனைவி, மாமி, மருமகள், ஒரு சமூகத்தின் அங்கத்துவராக பல பாத்திரங்களை தாங்கி நிற்கிறாள்.
மேலதிக விபரங்களுக்கு –
http://tamildiplomat.com/tamil-political-prisoner-wins-state-literary-award-tamil-sangam-award-novel-written-prison/
Eelamurasu Australia Online News Portal