ஆப்பில் நிறுவனம் ஐபோன் மற்றும் ஐபேட்களில் சூப்பர் மரியோ ரன் கேம் அறிமுகப்படுத்தியுள்ளது.
சர்வதேச அளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐஃபோன் 7 மற்றும் 7 பிளஸ் ஆப்பிள் நிறுவனம் சான்பிரான்சிஸ்கோவில் அறிமுகப்படுத்தியது. இதில் அனைத்து அம்சங்களும் அடங்கியுள்ளது. மேலும் கூடுதல் சிறப்பம்சமாக இதில் உலகில் பிரபலமான மரியோ கேம் அறிமுகமாகிறது.மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆப்பிள் ஐ.ஓ.எஸ் சாதனங்கள் அனைத்திலும் சூப்பர் மரியோ ரன் கேம் வரும் என சான் பிரான்சிஸ்கோ நிகழ்வில் தெரிவித்துள்ளது.
சூப்பர் மரியோ ரன் கேம் விளையாடுவதற்கு ஒருவர் மட்டும் போதாது. நீங்கள் விளையாடிக்கொண்டு இருக்கும் போது உலகில் உள்ள புதிய நண்பர்களையும் அழைக்க முடியும். சமீபத்தில் வெளியாகி உலகம் முழுக்க பிரபலம் அடைந்த போக்கிமான் கோ போன்றே இதுவும் மிக பிரபலம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Eelamurasu Australia Online News Portal