சிட்னியின் தென் மேற்கு பகுதியில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தியதாகவும், கொலை செய்ய முயற்சித்ததாவும் 22 வயதான ஒருவர் மீது ஆஸ்திரேலிய காவல் துறையினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த நபர் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினரால் தூண்டப்பட்டவர் என்று அவர்கள் கூறுகின்றனர்.
புறநகர் பூங்கா ஒன்றில் வைத்து 59 வயதான ஒருவரை இந்த நபர் பல முறை கத்தியால் குத்தியதாகவும், கைது செய்ய சென்ற காவல் துறையினரை தாக்க முயற்சித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட இருக்கும் இந்த குற்றம் சாட்டப்படுபவரிடம் இருந்து பெரியதொரு கத்தியை காவல்துறை கைப்பற்றியிருக்கிறது,
Eelamurasu Australia Online News Portal