குமரன்

பாலியல் சித்ரவதைக்கு உள்ளாகும் சிறுமிகளுக்கு ரூ.2.22 கோடி இழப்பீடு

அவுஸ்ரேலியா நாட்டில் பாலியல் சித்ரவதைக்கு உள்ளாகும் சிறுமிகள் ஒவ்வொருவருக்கும் ரூ.2.22 கோடி இழப்பீடு வழங்கும் புதிய சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவுஸ்ரேலியா சமூகப்பணி துறை அமைச்சரான கிறிஸ்ட்டியன் போர்டர் நேற்று(4) பெர்த் நகரில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது, பாலியல் சித்ரவதைக்கு உள்ளாகும் சிறுமிகளுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்குவது மட்டுமல்லாமல் 1,50,000 டொலர்(2,22,03,000 இலங்கை ரூபாய்) இழப்பீடு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இப்புதிய திட்டம் குறித்து பல மாதங்களாக பிரதமர் ஆலோசித்து வந்ததாகவும், தற்போது இத்திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ...

Read More »

வைரமாக மாற்றப்படும் மனித அஸ்தி

மரணமடைந்த ஒருவரின் அஸ்தியை, நீர்நிலைகளில் கரைப்பது உலக வழக்கம். ஆனால் சிலர், மனித அஸ்தியை ஆபரணமாக்கி, அழகு பார்க்க விரும்புகின்றனர். காரணம் என்ன?  அழகழகாய் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் வைரக் கற்கள்.இவை மண்ணில் விளைந்தவை அல்ல. மனித அஸ்தியைக் கொண்டு தட்டித் தட்டிச் செய்யப்பட்ட வைரக் கற்கள்.மண்ணில் புதையுண்ட கரி வைரமாக மாற பல்லாயிரம் ஆண்டுகள் ஆகலாம். ஆனால் மனித அஸ்தி வைரமாக உருமாற்ற சில வாரங்கள் போதும்.முதலில் மனித அஸ்தியிலிருந்து கரி கவனமாகப் பிரித்தெடுக்கப்படும். பிறகு அது இந்த மின்னுலையில் வைக்கப்படும். 1400 டிகிரி ...

Read More »

அவுஸ்ரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதல்

எல்கர் டுமினி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்கா 52.5-வது ஓவரில் 150-வது ரன்னை தொட்டது. அவுஸ்ரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 242 ரன்னில் ஆல்அவுட் ஆனது. அவுஸ்ரேலியா முதல் இன்னிங்சில் 244 ரன் எடுத்தது. 2 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய தென் ஆப்பிரிக்கா நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 104 ரன் எடுத்து ...

Read More »

ராணுவ வீரர்களுக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் எழுதிய கவிதை

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான். ‘‘எனக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம்; இருந்தாலும் தீபாவளிப் பரிசாக இதை அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்’’ என்று தனது ட்விட்டர் அக்கவுன்ட்டில் இந்த ஆங்கிலக் கவிதையை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார். ‘‘நமது பாதங்கள் தரை விரிப்பில் அவர்கள் பாதங்களோ  தரையில்   நமது நாட்கள் வலிமையானவை அவர்களுடையது சவாலானவை   நமது இரவுகள் ஆசீர்வதிக்கப்பட்டவை அவர்களுடையது பதற்றமானவை   நமது வாழ்க்கை வாழ்வதற்கு அவர்களுடையது கொடுப்பதற்கு   இந்தக் கதாநாயகர்கள் பாடப்படாமல் மறக்கப்படக் கூடியவர்கள் கிடையாது அவர்கள் மன வலிமையை தினச் சிக்கலை ...

Read More »

பண்டைய நாடாளுமன்ற கட்டிடம் ஒன்றில் தீ !

அவுஸ்ரேலிய பண்டைய நாடாளுமன்ற கட்டிடத்தில் தீ பரவியுள்ளது. தீயணைப்பு பிரிவினால் குறித்த தீ பரவல் அணைக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த பண்டைய கட்டிடம் 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ பரவலுக்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என வெளிநாட்டு செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

Read More »

சமூகப்பொறுப்புள்ள இயக்குநர் பவன்குமார்

கிரௌட் பண்டிங் என்ற புதிய முயற்சியில் பலரிடம் பணம் வசூலித்து கன்னடத்தில் லூசியா என் படத்தை இயக்கியவர் கன்னட இயக்குநர் பவன்குமார். இந்திய அளவில் சினிமாத்துறையில் புரட்சியை ஏற்படுத்திய இந்தப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கன்னடத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சித்தார்த் நடிக்க எனக்குள் ஒருவன் என்ற பெயரில் இப்படம் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. லூசியா படத்தை அடுத்து பவன்குமார் இயக்கிய யு டர்ன் என்ற படமும் வெற்றியைப் பெற்றது. விமர்சகர்கள் மத்தியிலும் பெரிய பாராட்டுக்களைப் பெற்றது. இந்தப் படத்தின் தமிழ் ...

Read More »

அவுஸ்ரேலிய உணவு கலை நிபுணரின் கேக்கை அச்சிடும் 3டி இயந்திரம்!

ஸ்டார் டிரெக்’ என்ற அறிவியல் புனை கதைத் தொடரில், விரும்பிய உணவு வகைகளை வார்த்தெடுக்கும் இயந்திரம் அடிக்கடி வரும். அதே போல, ஒரு இயந்திரத்தை அவுஸ்ரேலியாவை சேர்ந்த, உணவு கலை நிபுணர் ரேனால்ட் பொயர்னோமோ உருவாக்கியிருக்கிறார். முப்பரிமாண அச்சியந்திர வகையை சேர்ந்த இந்த இயந்திரம், பிரான்ஸ் நாட்டு திருமணங்கள் மற்றும் விழாக்களில் பரிமாறப்படும், ‘குரோக்வெம்போச்’ என்ற உணவு வகையை மட்டுமே அச்சு அசலாக அச்சிட்டுத் தருகிறது. அடுமனையில் தயாராகும் குரோக்வெம்போச், குட்டி, குட்டி பன்களை ஒன்றின் மேல் ஒன்றாக கூம்பு வடிவில் அடுக்கியது போல் ...

Read More »

பொது இடத்தில் சிறுநீர் கழித்தால் கைது

சிட்னி Royal Botanic Gardensஇல் உள்ள மரம் ஒன்றின் மீது சிறுநீர் கழித்த இரு ஆண்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். 66 வயது மற்றும் 41 வயது சீன சுற்றுலாப்பயணிகளான இவர்களை காவல்துறையினர் கைது செய்வதற்காக நெருங்கியபோது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த இருவரும் அந்த இடத்திலிருந்து அகல முற்பட்டபோது இரு தரப்பினருக்குமிடையில் இழுபறி ஏற்பட்டது. இதனால் 66 வயது நபருக்கு தோள் மற்றும் கால் பகுதியில் காயமேற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பொது இடத்தில் அநாகரிமாக நடந்து கொண்டமை மற்றும் காவல்துறையினருடன் எதிர்த்து நின்றமை உள்ளிட்ட ...

Read More »

IS சந்தேக நபர் சிட்னியில் கைது

சிட்னியின் Birrong பகுதியில் பயங்கரவாத தடுப்புப்பிரிவினரால் நடத்தப்பட்ட சோதனையையடுத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஐஎஸ் அமைப்புடன் சேர்ந்து போரிட்ட மிக ஆபத்தான நபர் என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த நபரால் தாக்குதல் அச்சுறுத்தல் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை என்றாலும் நீண்ட காலம் நடத்தப்பட்ட விசாரணைகளின் முடிவில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை இக் கைதினை அடுத்து பாரிய தேடுதல் நடவடிக்கை காவல்துறையினரால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுகிறது.

Read More »

அவுஸ்ரேலியாவில் குடியேறுவதற்காக விண்ணப்பிப்பவர்களுக்கு புதிய சலுகை

ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான Skilled Migration விசாவின் முக்கிய அம்சம் points test system ஆகும். ஒருவர் Skilled Migration விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது தேவைப்படும் புள்ளிகள் points test system ஊடாக கணக்கிடப்படுவது வழக்கம். இந்த நிலையில் points test system-ல் முக்கிய மாற்றம் அமுல்படுத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதன்படி ஆஸ்திரேலியாவிலுள்ள கல்வி நிறுவனங்களில்  Science, Technology, Engineering Mathematics மற்றும் Information & communication technology ஆகிய துறைகளில் Doctorate மற்றும் Masters படித்தவர்களுக்கு மேலதிகமாக 5 புள்ளிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...

Read More »