எல்கர் டுமினி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்கா 52.5-வது ஓவரில் 150-வது ரன்னை தொட்டது.
அவுஸ்ரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 242 ரன்னில் ஆல்அவுட் ஆனது. அவுஸ்ரேலியா முதல் இன்னிங்சில் 244 ரன் எடுத்தது.
2 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய தென் ஆப்பிரிக்கா நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 104 ரன் எடுத்து இருந்தது. எல்கர் 46 ரன்னும், டுமினி 34 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. இருவரும் தொடர்ந்து விளையாடினார்கள். டுமினி, எல்கர் சிறப்பாக விளையாடி அரை சதத்தை தொட்டனர். எல்கர் 130 பந்துகளில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 50 ரன்னை தொட்டார். டுமினி 90 பந்தில் 50 ரன்னை எடுத்தார். இதில் 10 பவுண்டரிகள் அடங்கும்.
இருவரும் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு 100 ரன்னை (188 பந்து) எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 52.5-வது ஓவரில் தென் ஆப்பிரிக்கா 150-வது ரன்னை தொட்டது.