ராணுவ வீரர்களுக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் எழுதிய கவிதை

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான். ‘‘எனக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம்; இருந்தாலும் தீபாவளிப் பரிசாக இதை அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்’’ என்று தனது ட்விட்டர் அக்கவுன்ட்டில் இந்த ஆங்கிலக் கவிதையை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார்.

‘‘நமது பாதங்கள் தரை விரிப்பில்

அவர்கள் பாதங்களோ 

தரையில்

 

நமது நாட்கள் வலிமையானவை

அவர்களுடையது

சவாலானவை

 

நமது இரவுகள் ஆசீர்வதிக்கப்பட்டவை

அவர்களுடையது

பதற்றமானவை

 

நமது வாழ்க்கை வாழ்வதற்கு

அவர்களுடையது

கொடுப்பதற்கு

 

இந்தக் கதாநாயகர்கள்

பாடப்படாமல் மறக்கப்படக் கூடியவர்கள் கிடையாது

அவர்கள் மன வலிமையை

தினச் சிக்கலை

நம்மால் கற்பனை செய்துகூடப்

பார்க்க முடியாது

 

அவர்கள் சண்டையிட்டு

நம்மை வலிமையானவர்களாக

மாற்றுகிறார்கள்’’