குமரன்

சீனர்களுக்கும் சீனா வழியாக பயணிப்பவர்களுக்கும் ஆஸ்திரேலியாவில் நுழைய தடை!

சீனாவில் ஏற்பட்ட கொரோனோ வைரஸ் குறித்த அச்சம் உலகெங்கும் பரவியுள்ள நிலையில், கடந்த பிப்ரவரி 1 முதல் சீனர்களுக்கும் சீனா வழியாக பயணிப்பவர்களுக்கும் ஆஸ்திரேலியாவில் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலை கட்டுப்படுத்தவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அரசு, ஆஸ்திரேலிய சமூகத்தின் சுகாதாரமும் நலனும் முதன்மையானது எனக் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம், ஆஸ்திரேலியர்கள் மற்றும் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிப்பதற்கான உரிமைப் பெற்றவர்கள் தவிர எவரும் சீனாவிலிருந்தோ சீனா வழியாக பயணித்தோ ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாது. ஆஸ்திரேலியாவின் இத்தீவிர எல்லைக்கட்டுப்பாட்டு ...

Read More »

பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்கை ஹெக் செய்து 30 மில்லியன் ரூபா கொள்ளை!

ஹோமாகமவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்கிலிருந்து 30 மில்லியன் ரூபாவை சட்டவிரோதமாக தங்கள் கணக்கிற்கு மாற்றிமைக்காகவும், அதே பல்கலைக்கழகத்திலிருந்து மேலும் 100 மில்லியன் ரூபாவையும் தங்கள் கணக்குகளுக்கு மாற்ற முயற்சித்த குற்றச்சாட்டிற்காகவும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள் இரண்டு வெளிநாட்டினர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். பிரதான சந்தேக நபர் கம்பளையில் வசிப்பவர் ஆவர். அவர் பல்கலைக்கழகத்தின் தரவுகளை ஹெக் செய்து, அந்த நிதியை வெளிநாட்டினர் இருவரின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளதாகவும் சிறிலங்கா  காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந் நிலையில் வெளிநாட்டு பிரஜைகள் உள்ளடங்கலாக மூவரும் ...

Read More »

புதிய வடிவமைப்பு பெற்ற ட்விட்டர்!

ட்விட்டர் வலைதளத்தின் ஐ.ஒ.எஸ். பதிப்பில் உரையாடல்கள் அம்சத்திற்கான வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளது. ட்விட்டர் தளத்தில் அவ்வப்போது வடிவமைப்பு மாற்றங்கள் செய்யப்படுவது சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. அந்த வரிசையில் ட்விட்டர் உரையாடல்களில் புதிய மாற்றங்கள் அடங்கிய அப்டேட் வழங்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய வடிவமைப்பு கொண்டு பயனர்கள் மிக தெளிவாக பதில் அளிக்க முடியும். இது ரெடிட் தளத்தில் உள்ள அம்சத்தை போன்று காட்சியளிக்கிறது. ட்விட் பதி்ல்கள் இனி லின்க் மூலம் இணைக்கப்பட்டு இருப்பதால், பயனர்கள் உரையாடல்களை மிக தெளிவாக பார்க்க முடியும். புதிய வடிவமைப்பு சில ...

Read More »

ஹாலிவுட்டில் களமிறங்கிய ஜி.வி.பிரகாஷ்

தமிழில் இசையமைப்பாளர், நடிகர், பாடகர் என்று வலம் வந்துக் கொண்டிருக்கும் ஜி.வி.பிரகாஷ், தற்போது ஹாலிவுட்டில் களமிறங்கி இருக்கிறார். தமிழ் திரையுலகில் கிழக்குச் சீமையிலே, சீவலப்பேரி பாண்டி போன்ற பல வெற்றி படங்களை கொடுத்து தனக்கென்று ஓர் இடத்தை பிடித்து வைத்திருக்கும் நடிகர் நெப்போலியன் முதல்முறையாக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும் சிறந்த இசையமைப்பாளருமான ஜிவி.பிரகாஷுடன் இணைந்து ஹாலிவுட்டில் ஒரு ஆங்கில படத்தில் நடித்துள்ளார். இப்படத்துக்கு ட்ராப் சிட்டி (Trap City) என பெயர் சூட்டி உள்ளார்கள். சர்வதேச தரத்தில் இருக்கும் இப்படத்தை கைபா பிலிம்ஸ் ...

Read More »

மன்னாரில் ஒரு கோடி ரூபாவுக்கு மேல் பெறுமதியான அமெரிக்க டொலர்கள் மீட்பு!

தலைமன்னார் மன்னார் பிரதான வீதியில் தலைமன்னாரிலிருந்து மன்னாருக்கு மோட்டர் சைக்கிளில் பயணித்த நபரை தாராபுரம் இராணுவ சோதனை சாவடியில் சோதனையிட்டபோது ஒரு கோடி ரூபாவுக்கு மேற்பட்ட அமெரிக்க டொலர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று சுதந்திரத் தினத்தன்று (04.02.2020) தலைமன்னார் கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் நண்பகல் தலைமன்னாரிலிருந்து மன்னாரை நோக்கி ஒரு மோட்டர் சைக்கிளில் பயணித்துள்ளார். அப்பொழுது தாராபுரத்திலுள்ள இராணுவ சோதனை சாவடியிலுள்ள பாதுகாப்புப் படையினர் சந்தேகத்தின் பேரில் குறித்த நபரையும் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளையும் சோதனையிட்டுள்ளனர். அப்பொழுது மோட்டர் சைக்கிள் இருக்கையின் அடியில் ...

Read More »

தர்ஷன் மீது சனம் ஷெட்டி மீண்டும் புகார்!

என்னுடன் நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு, தர்ஷன் திருமணம் செய்ய மறுப்பதாக கூறிய சனம் ஷெட்டி மீண்டும் அவர் மீது புகார் கூறியுள்ளார். நடிகர் தர்ஷனுடன் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்தது என்றும், இப்போது என்னை அவர் திருமணம் செய்ய மறுக்கிறார் என்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை சனம் ஷெட்டி புகார் அளித்தார். இதற்கு பதில் அளித்த தர்ஷன் முன்னாள் காதலருடன் சனம் ஷெட்டி இருந்ததை பார்த்த பிறகு அவர் வேண்டாம் என்று விலகி விட்டேன் என்றார். இதற்கு பதில் அளித்த சனம் ஷெட்டி கூறியிருப்பதாவது:- ...

Read More »

‘கொரோனா’ வைரசை கண்டுபிடித்த வைத்தியரை நோய் தாக்கியது!

கொரோனா’ வைரசை கண்டுபிடித்த வைத்தியரை நோய் தாக்கி உள்ளது. காய்ச்சல் பாதிப்பு காரணமாக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீனாவில் பரவி வரும் ‘கொரோனா’ வைரசால் இதுவரை 490-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியாமல் சீன அரசு திணறி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலை சீனாவை சேர்ந்த லீ வென்லியாங் என்ற வைத்தியர் கடந்த டிசம்பர் மாத தொடக்கத்திலேயே கண்டு பிடித்து விட்டார். சீனாவில் வுகான் மாகாணத்தில் உள்ள மத்திய மருத்துவமனையில் ...

Read More »

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் சீனாவுக்கு எனது நிர்வாகம் உதவும்!

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த எனது நிர்வாகம் சீன அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்து செயல்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சீனாவில் பரவி வரும் கரோனா வைரஸ் நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 490 ஆக அதிகரித்துள்ளது. அதிகம் பாதிக்கபட்ட ஹுபே மாகாணத்தில் மேலும் 65 பேர் பலியானதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், சீனாவை அச்சுறுத்தும் கரோனா வைரஸுக்கு 20,485 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் சீனா இறங்கியுள்ளது. இந்த நிலையில் இவ்விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சீனா உதவும் ...

Read More »

ஏப்பமிடப்படும் ஏகபிரதிநிதித்துவம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக ஏற்று, அவர்களுடன் மட்டும்தான் பேச்சு நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில், அரசாங்கம் இல்லை. மாறாக, வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்துத் தரப்பினருடனும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த, அரசாங்கம் தயாராக இருக்கின்றது என, அரசாங்கத்தின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்து உள்ளார். இன்று, இலங்கை, தனது விடிவு தினமான (72வது) சுதந்திர தினத்தைக் கொண்டாடுகையில், நாட்டின் ஒரு பகுதி மக்கள், தாங்கள் இன்னமும் இருட்டுக்குள் வாழ்ந்து வருவதாவே உணர்கின்றனர். ...

Read More »

ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் பலியானவர்களுக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல்!

ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் பலியானவர்களுக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் பலியானவர்களுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரங்கல் தெரிவித்தனர். இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறும்போது, “காட்டுத் தீ நமக்கு கருப்புக் கோடைகாலம். இந்தத் தீ இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆபத்து இன்னும் பல இடங்களில் நமக்கு முன்னால் உள்ளது. இந்தக் காட்டுத் தீயில் பலியானவர்களைக் கவுரவிப்பதற்காக நாம் ஒன்று கூடி இருக்கிறோம். தொடர்ந்து இந்த கருப்புக் கோடை காலத்திலிருந்து நாங்கள் பாடம் கற்றுக் ...

Read More »