ஹோமாகமவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்கிலிருந்து 30 மில்லியன் ரூபாவை சட்டவிரோதமாக தங்கள் கணக்கிற்கு மாற்றிமைக்காகவும், அதே பல்கலைக்கழகத்திலிருந்து மேலும் 100 மில்லியன் ரூபாவையும் தங்கள் கணக்குகளுக்கு மாற்ற முயற்சித்த குற்றச்சாட்டிற்காகவும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள் இரண்டு வெளிநாட்டினர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
பிரதான சந்தேக நபர் கம்பளையில் வசிப்பவர் ஆவர். அவர் பல்கலைக்கழகத்தின் தரவுகளை ஹெக் செய்து, அந்த நிதியை வெளிநாட்டினர் இருவரின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளதாகவும் சிறிலங்கா காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில் வெளிநாட்டு பிரஜைகள் உள்ளடங்கலாக மூவரும் கைதுசெய்யப்பட்ட நிலையில், பிரதான சந்தேக நபர் பெப்ரவரி 13 ஆம் திகதி வரை அவருக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளதுடன், கொள்ளுப்பிட்டியில் கைதுசெய்யப்பட்ட இரண்டு வெளிநாட்டு பிரஜைகளுக்கும் இன்று வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டது.