ட்விட்டர் வலைதளத்தின் ஐ.ஒ.எஸ். பதிப்பில் உரையாடல்கள் அம்சத்திற்கான வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளது.
ட்விட்டர் தளத்தில் அவ்வப்போது வடிவமைப்பு மாற்றங்கள் செய்யப்படுவது சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. அந்த வரிசையில் ட்விட்டர் உரையாடல்களில் புதிய மாற்றங்கள் அடங்கிய அப்டேட் வழங்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
புதிய வடிவமைப்பு கொண்டு பயனர்கள் மிக தெளிவாக பதில் அளிக்க முடியும். இது ரெடிட் தளத்தில் உள்ள அம்சத்தை போன்று காட்சியளிக்கிறது. ட்விட் பதி்ல்கள் இனி லின்க் மூலம் இணைக்கப்பட்டு இருப்பதால், பயனர்கள் உரையாடல்களை மிக தெளிவாக பார்க்க முடியும்.

புதிய வடிவமைப்பு சில மாதங்களாக சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்சமயம் இதற்கான அப்டேட் வழங்கப்படுகிறது. முன்னதாக இதே அம்சம் ட்விட்டர் ப்ரோடோடைப் செயலியான Twttr-ல் வழங்கப்பட்டு இருந்தது. ட்விட்டர் ரிவர்ஸ் என்ஜினியரான ஜேன் மன்சுன் வொங் உரையாடல்களில் புதிய வடிவமைப்பை சோதனை செய்து வந்தார்.
அந்த வகையில் சோதனையின் அடுத்தக்கட்டமாக இந்த புதிய வடிவமைப்பு ட்விட்டர் ஐ.ஒ.எஸ். பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. புதிய வடிவமைப்பு ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வழங்குவது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
Eelamurasu Australia Online News Portal