பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உலகப் புகழ் பெற்ற ‘இரும்பு பெண்’ என அழைக்கப்படும் ‘ஈபிள் டவர்’ கட்டுமானம் 1887ல் துவங்கப்பட்டு 1889ல் முடிக்கப்பட்டது. முழுவதும் இரும்பினால் கட்டப்பட்ட இதன் ஒட்டுமொத்த உயரம் 324 மீட்டர்கள் ஆகும். 1983ல் ‘லிப்ட்’ வசதி செய்யப்பட்டதால், இரும்பிலான படிக்கட்டுகள் 24 பகுதிகளாக வெட்டி எடுக்கப்பட்டு பாரிசில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. அவை 1983-ஆம் ஆண்டில் இருந்து ஏலம் விடப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்த ஏலத்தில் இதன் 14 இரும்பு படிக்கட்டுகள் ரூ. 3.80 கோடிக்கு ஏலம் விடப்பட்டது. ஏலத்தை ...
Read More »குமரன்
அமீர்கான் படம் தமிழில் வெளியாகிறது
இந்திபட உலகில் அடுத்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம் ‘தங்கல்’. அமீர்கான் நடித்துள்ள இந்த படத்தை தமிழில் ‘டப்’ செய்து வெளியிட ஏற்பாடு நடக்கிறது. இந்திபட உலகில் அடுத்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம் ‘தங்கல்’. அமீர்கான் நடித்துள்ள இந்த படத்தை நிதீஷ்திவாரி இயக்கி இருக்கிறார். டிஷ்னிவோல்டு சினிமாவுடன் அமீர்கானும் சேர்ந்து இதை தயாரிக்கிறார். இது பிரபல குத்துச்சண்டை வீரர் மகாவீர்சிங் போகத் வாழ்க்கை வரலாறை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. அமீர்கான் நடித்த ‘பிகே’ படம் தமிழில் வெளியாகி நன்றாக ஓடியது. ‘தோனி’ படமும் தமிழில் ...
Read More »அவுஸ்ரேலியா வில் 2 சோலார் மின்னுற்பத்தி ஆலை கட்டுகிறது அதானி குழுமம்
இந்திய தொழிலதிபர் அதானியின் எரிசக்தி நிறுவனமானது, அவுஸ்ரேலியாவில் இரண்டு சோலார் மின்னுற்பத்தி ஆலையை கட்டுகிறது.இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தை மையமாக கொண்டு செயல்படுகிறது அதானி குழுமம். இது ஒரு பன்னாட்டு குழும நிறுவனமாகும். இதன் நிறுவனர் கவுதம் அதானி. இந்நிலையில், இந்திய தொழிலதிபர் அதானியின் நிறுவனமானது அவுஸ்ரேலியாவில் இரண்டு சோலார் மின்னுற்பத்தி ஆலையை கட்டுகிறது. இது ரூ.2053 கோடி மதிப்பிலான திட்டம் ஆகும். அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லேண்ட் மாநிலம் கலீலி பள்ளத்தாக்கு பகுதியில் அதானி குழுமம் அமைக்கவுள்ள மிகப் பெரிய நிலக்கரி சுரங்க பணிக்கு எதிராக ...
Read More »நல்லெண்ண பயணமாக கோவா பயணமான அவுஸ்ரேலிய கடற்படை கப்பல்
அவுஸ்ரேலியா நாட்டின் கடற்படை கப்பல் ‘எச்.எம்.ஏ.எஸ். அருந்தா’ நல்லெண்ண பயணமாக கோவா மாநிலத்திற்கு வந்துள்ளது. அவுஸ்ரேலியா நாட்டின் கடற்படை கப்பலான ‘எச்.எம்.ஏ.எஸ். அருந்தா’ நல்லெண்ண பயணமாக கோவா மாநிலத்திற்கு வந்துள்ளது. நவம்பர் 23-ம் தேதி வந்த இக்கப்பல் 27-ம்திகதி வரை கோவாவில் நிறுத்தப்பட்டிருக்கும். தற்போது மோர்முகாவ் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அவுஸ்ரேலிய கப்பலில் கட்டளை அதிகாரி கேமரான் ஸ்டீல் தலைமையிலான ஆஸதிரேலிய கடற்படையினர் வந்துள்ளனர். 118 மீட்டர் நீளமுள்ள இக்கப்பலில் 26 அதிகாரிகள் மற்றும் 160 மாலுமிகள் என ...
Read More »யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர்களை நினைவு கூரும் சுவரொட்டிகள்!
யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் தமிழீழ மாவீரர் தினத்தை நினைவு கூரும் சுவரொட்டிகள் மீண்டும் ஒட்டப்பட்டுள்ளன. தமிழீழ மாவீரர் தினம் கடுமையான நெருக்குவாரங்களுக்கு மத்தியில் யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்களால் ஆண்டு தோறும் நினைவு கூரப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர்ச்சியாக இவ்வாண்டும் மாவீரர் தினத்தை ஒட்டியதான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அத்தோடு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்தும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
Read More »ஆஸ்த்துமாவால் அவதிப்படும் அவுஸ்ரேலியர்கள்
அவஸ்ரேலியாவின் மெல்பர்ன் நகரில் மகரந்த ஒவ்வாமையால் பலருக்கு ஆஸ்த்துமா நோய் ஏற்பட்டுள்ளது. அதில் நான்கு பேர் இறந்துள்ளனர். அந்தச் சம்பவம் காலவரையற்ற அவசர நிலை என பதிவாகியுள்ளது. கடந்த திங்கட்கிழமை விக்டோரியா மாநிலத்தில் பெய்த கடும் மழையாலும் காற்றாலும் ஏற்பட்ட ஈரத்தை புல்லரிசி பூஞ்சருகுகள் (Rye Grass Pollen) உள்வாங்கின. அதன் பின் அவை ஆயிரக்கணக்கில் சிறிய துகள்களாய் மாறின. எண்ணாயிரத்து ஐநூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு மெல்பர்ன் மருத்துவமனைகள் சிகிச்சையளித்து வருகின்றன.
Read More »செவ்வாய் கிரகத்தில் புதிய நீர்த்தேக்கம் கண்டுபிடிப்பு
அமெரிக்கா, ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆராய்ச்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த கிரகத்தில் தற்போது மிகப்பெரிய நீர்த்தேக்கம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மனிதர்கள், 2030-ல் செவ்வாய் கிரகத்தில், வசிக்கலாம் என அமெரிக்க விண்வெளி அமைப்பான ‘நாசா’ அறிவித்திருந்தது. அண்மையில் நாசா செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை இறக்கி சோதனை செய்தது. விண்கலம் நடத்திய ஆய்வின் முடிவில், செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ அனைத்து ...
Read More »அவுஸ்ரேலியாவுக்கு செல்வது இலகுவாக்கப்பட்டுள்ளது
இம்மாதம் முதல்அவுஸ்ரேலியாவுக்கான தற்காலிக வேலை விசாவுக்கு விண்ணப்பிப்பது இலகுவானதாகவும் செலவு குறைந்ததாகவும் மாற்றப்பட்டுள்ளதுஎன தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு ஊடகங்கள் இதனை சுட்டிக்காட்டியுள்ளன . கடந்த 19ம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் விசா விண்ணப்ப நடைமுறையை மிகவும் இலகுவாக்கும் என அவுஸ்ரேலிய குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி ஏற்கனவே இருந்த 7 விசா உபபிரிவுகள் புதிய 4 பிரிவுகளின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன ஆகியனவே இப்புதிய 4 பிரிவுகளில் அடங்குகின்றன. குடிவரவுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட அடிப்படையிலேயே இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதாக அந்நாட்டு குடிவரவுத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுவரை ...
Read More »நான் திருமணத்துக்கு முன்பு நடித்ததை விட இப்போது சிறப்பாக நடிப்பதாக உணர்கிறேன்
தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் 10 வருடங்களுக்கு மேல் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஜெனிலியா. இவருக்கும் இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்குக்கும் 2012-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன. திருமணத்துக்கு பிறகு ஜெனிலியா சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். நிறைய வாய்ப்புகள் வந்தும் ஏற்கவில்லை. இந்த நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெனிலியா தற்போது மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார். இந்தியில் ‘போர்ஸ்-2’ என்ற படத்தில் கவுரவ வேடத்தில் தோன்றினார். தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கவும் கதை கேட்டு ...
Read More »அவுஸ்ரேலியாவுக்கு எதிரான கோக்கி இந்திய பெண்கள் அணி வெற்றி
அவுஸ்ரேலியாவுக்கு எதிரான கோக்கி போட்டியில் இந்திய பெண்கள் அணி வெற்றி பெற்றுள்ளது. அவுஸ்ரேலியாவுக்கு எதிரான கோக்கி இந்திய பெண்கள் அணி வெற்றி. இந்திய பெண்கள் கோக்கி அணி, அவுஸ்ரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-அவுஸ்ரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஆக்கி போட்டி மெல்போர்னில் நேற்று நடந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் உலக தர வரிசையில் 12-வது இடம் வகிக்கும் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் 4-வது இடத்தில் இருக்கும்அவுஸ்ரேலியா வீழ்த்தியது. 21-வது ...
Read More »
Eelamurasu Australia Online News Portal