ஐ.நாவை நாடுவது என்பது ஜனநாயக விரோதமான செயற்பாடொன்றல்ல. குண்டுத்தாக்குதலின் பின்னரான காலப்பகுதியில் திட்டமிட்ட தாக்குதல்களின் சூத்திரதாரிகள் இன்னமும் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படவில்லை. தண்டிக்கப்படவுமில்லை. இவ்வாறான மோசமான நிலைமை தொடருமாக இருந்தால் நிச்சயமாக ஐ.நாவினை நாடவேண்டிய நிலைமையே ஏற்படும் என கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்ட காலம் இடம்பெயர்ந்துள்ளவர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாத் பதியுதீன் வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போது தெரிவித்தார். அச்செவ்வியின் முழுமையான வடிவம் வருமாறு, ...
Read More »குமரன்
தேர்தலுக்காக கமலா ஹாரிஸ் ரூ.84 கோடி நிதி திரட்டினார்!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்காக கமலா ஹாரிஸ் கடந்த 3 மாதங்களில் 12 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 84 கோடி) நிதி திரட்டி உள்ளார். அடுத்த ஆண்டு அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட பலரும் முனைப்பாக உள்ளனர். அவர்களில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் முன்னணியில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் இந்திய வம்சாவளி செனட் சபை ...
Read More »17 வயது இயக்குநரின் விருது!
ஆதி போட்டோஸ் நிறுவனம் தயாரிக்கும் விருது படத்தை 17 வயதே ஆன இளம் இயக்குனர் ஆதவன் இயக்கியுள்ளார். ஆதி போட்டோஸ் நிறுவனம் சார்பில் ஆதி தயாரிக்கும் படம் “விருது”. இதில் கதாநாயகனாக பதினைந்து வயதே நிரம்பிய அச்சயன் என்கிற புதுமுகம் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக திவ்யதர்ஷினி, அனுஷா, ஐஸ்வர்யா ஆகிய மூன்று அறிமுக நாயகிகள் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு மன்மதராசா புகழ் தீனா இசையமைக்கிறார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் 17 வயது நிரம்பிய ஆதவன். இப்படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது:- “ ...
Read More »காணமல்போனோர் அலுவலகம் செல்லும் சபாநாயகர் தலைமையிலான குழு!
காணமல்போனோர் பற்றி அலுவலகத்திற்கு நாளை திங்கட்கிழமை சபாநாயகர் கருஜயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர் குழுவொன்று செல்லவுள்ளது. காணமல்போனோர் பற்றி அலுவலகத்தின் தலைமையகம் சிராவஸ்தி மாளிகையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இயங்கி வருகின்றது. இந்நிலையில் கடந்த முதலாம் திகதி தினேஸ் குணவர்த்தன, பந்துல குணவர்த்தன தலைமையிலான குழுவொன்று மேற்பார்வை விஜயமொன்றைச்செய்திருந்தது. இவ்வாறான நிலையிலேயே தற்போது சபாநாயகர் தலைமையிலான குழுவினர் அங்கு செல்லவுள்ளனர். சிராவஸ்தி மாளிகையானது பிரேமதாஸவின் ஆட்சிக்காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகமாகவும், ஓய்வு விடுதியாகவும் இருந்தது. பின்னர், மேல்மாகாண முதலமைச்சரின் அலுவலகமும் அங்கு ...
Read More »முல்லைத்தீவில் வெடிபொருட்கள் மீட்பு!
முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் போரின் போது கைவிடப்பட்ட வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் (04.07.19) கேப்பாபுலவு படைத்தலைமையகத்துக்கு அருகில் உள்ள பிரம்படி வயல் பகுதியில் பழைய பாரிய குண்டு ஒன்று வெடித்துள்ளது. இச்சம்பவத்தினை தொடர்ந்து அதனை அண்டிய பகுதியில் காவல் துறை , படையினர் மேற்கொண்ட தேடுதலின் போது நந்திக்கடல் பகுதியில் ஏ.கே 81 வகை துப்பாக்கி ஒன்று இனங்காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட படைத்தலைமையக வாசலின் முன்னால் உள்ள மக்களின் காணி ஒன்றிற்குள் எறிகணை ஒன்றும் மக்களால் இனங்காணப்பட்டுள்ளது. குறித்த ...
Read More »வடகொரியாவால் விடுவிக்கப்பட்ட அவுஸ்திரேலிய மாணவர்!
வடகொரியாவால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட மாணவர் அலெக், தான் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த அலெக் சிங்லே(29) என்ற மாணவர், முதுகலைப் பட்டம் பயில வடகொரியா சென்றுள்ளார். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் காணாமல் போனதாக மாணவரின் பெற்றோர் தெரிவித்தனர். மேலும், அவர் குறித்த எந்த தகவலும் இல்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தனர். இதனைத் தொடர்ந்து, மாணவர் அலெக் சிங்லே கடந்த வியாழக்கிழமை வடகொரிய அரசால் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவர் எதற்காக கைது செய்யப்பட்டார் என்பது தொடர்பாக தெளிவான ...
Read More »மீண்டும் ஏமாற்றம் மாறாத வரலாறு!
தமிழ் மக்கள் மீண்டுமொருமுறை தென்னிலங்கை அதிகாரத்தரப்பினரால் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். வரலாறு முழுவதும் தமிழ் பேசும் மக்கள் தமக்கான அரசியல் அதிகாரங்கள், தீர்வுத்திட்டங்கள் தொடர்பில் எவ்வாறு தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டனரோ அதேபோன்று மீண்டும் ஒருமுறை ஏமாற்றப்பட்டுள்ளனர். நியாயமான அரசியல் தீர்வு ஒன்று கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பிலிருந்த தமிழ் மக்கள் தற்போது நம்பிக்கையிழந்தவர்களாகவும் எதிர்பார்ப்பு அற்றவர்களாகவும் மாறியிருக்கின்றனர். 2015ஆம் ஆண்டு உருவாகிய நல்லாட்சி அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவடையப் போகின்றது. இன்னும் சில மாதங்களில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறப் போகிறது. ஆனால் அதேபோன்று தமிழ் மக்கள் தீர்வுத் திட்டம் தொடர்பில் ...
Read More »புராதன நகராக ஜெய்ப்பூர் தேர்வு – யுனெஸ்கோ அமைப்பு அறிவிப்பு
யுனெஸ்கோ அமைப்பு சார்பில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட புராதன நகரங்களின் பட்டியலில் ஜெய்ப்பூரும் இணைந்துள்ளது. ஐ.நா. சபைக்கான கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான ‘யுனெஸ்கோ’ உலகின் மிகவும் பழமையான நகரங்கள் மற்றும் பாரம்பரிய சின்னங்களையும் புராதன பட்டியலில் இணைத்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியல் இன்று மதியம் அறிவிக்கப்பட்டது. அதில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் நகரம் புராதன சிறப்பு மிக்க நகராக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. யுனெஸ்கோ அமைப்பின் புராதன நகரங்கள் பட்டியலில் ஜெய்ப்பூர் தேர்வு செய்யப்பட்டு ...
Read More »10 இராணுவத்தினர் படுகாயம்!
அட்டாலைசேனை நிந்தவூர் அட்டப்பள்ளம் பகுதியில் இராணுவ வாகனம் ஒன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் 10 இராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த இராணுவ வாகனம் குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் 10 இராணுவத்தினர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் நிந்தவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Read More »தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஐ.தே.க வின் அடிமைகள்!
இனி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஜக்கிய தேசியக் கட்சியின் அடிமைகளாகவே இருப்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இன்று(06) கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி கோவில்வயல் கிராமத்தில் இடம்பெற்ற கிராம சக்தி வேலைத்திட்ட முன்னேற்ற மக்கள் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் யார் ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்களுக்கு நன்மை கிட்டும், தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பதனை கருத்தில் எடுத்து தீர்மானங்களை மேற்கொள்ளும் நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ...
Read More »