காணமல்போனோர் அலுவலகம் செல்லும் சபாநாயகர் தலைமையிலான குழு!

காணமல்போனோர் பற்றி அலுவலகத்திற்கு நாளை திங்கட்கிழமை சபாநாயகர் கருஜயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர் குழுவொன்று செல்லவுள்ளது.

காணமல்போனோர் பற்றி அலுவலகத்தின் தலைமையகம் சிராவஸ்தி மாளிகையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இயங்கி வருகின்றது. இந்நிலையில் கடந்த முதலாம் திகதி தினேஸ் குணவர்த்தன, பந்துல குணவர்த்தன தலைமையிலான குழுவொன்று மேற்பார்வை விஜயமொன்றைச்செய்திருந்தது.

இவ்வாறான நிலையிலேயே தற்போது சபாநாயகர் தலைமையிலான குழுவினர் அங்கு செல்லவுள்ளனர். சிராவஸ்தி மாளிகையானது பிரேமதாஸவின் ஆட்சிக்காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகமாகவும், ஓய்வு விடுதியாகவும் இருந்தது. பின்னர், மேல்மாகாண முதலமைச்சரின் அலுவலகமும் அங்கு செயற்பட்டு வந்திருந்தது. அதன்பின்னரே காணமல்போனோர் பற்றிய அலுவலகம் அங்கு இயங்க ஆரம்பித்துள்ளது.

குறித்த மாளிகையானது, வரலாற்றுப் பாரம்பரிய சொத்தாக பயன்படுத்தப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ள நிலையில் தற்போது அம் மாளிகையின் நிலைமைகள் மற்றும் பாரிமரிப்பு விடயங்களை நேரில் பார்வை இடுவதற்காக சபாநாயகர் தலைமையிலான குழு அங்கு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.