முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் போரின் போது கைவிடப்பட்ட வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் (04.07.19) கேப்பாபுலவு படைத்தலைமையகத்துக்கு அருகில் உள்ள பிரம்படி வயல் பகுதியில் பழைய பாரிய குண்டு ஒன்று வெடித்துள்ளது.
இச்சம்பவத்தினை தொடர்ந்து அதனை அண்டிய பகுதியில் காவல் துறை , படையினர் மேற்கொண்ட தேடுதலின் போது நந்திக்கடல் பகுதியில் ஏ.கே 81 வகை துப்பாக்கி ஒன்று இனங்காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட படைத்தலைமையக வாசலின் முன்னால் உள்ள மக்களின் காணி ஒன்றிற்குள் எறிகணை ஒன்றும் மக்களால் இனங்காணப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் கேப்பாபுலவு நிலமீட்பு போராட்ட மக்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளதுடன் காணியின் உரிமையாளர்கள் கிணறு வெட்டியுள்ளார்கள் அப்போதெல்லாம் இல்லாத குண்டு தற்போது வந்துள்ளது இது யாரோ திட்டமிட்டு மக்கள் குடியிருப்புக்கள் கொண்டுவந்து போட்டுள்ளதாக கேப்பாபுலவு மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
 Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				