யுனெஸ்கோ அமைப்பு சார்பில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட புராதன நகரங்களின் பட்டியலில் ஜெய்ப்பூரும் இணைந்துள்ளது.
ஐ.நா. சபைக்கான கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான ‘யுனெஸ்கோ’ உலகின் மிகவும் பழமையான நகரங்கள் மற்றும் பாரம்பரிய சின்னங்களையும் புராதன பட்டியலில் இணைத்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியல் இன்று மதியம் அறிவிக்கப்பட்டது.
அதில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் நகரம் புராதன சிறப்பு மிக்க நகராக தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

யுனெஸ்கோ அமைப்பின் புராதன நகரங்கள் பட்டியலில் ஜெய்ப்பூர் தேர்வு செய்யப்பட்டு உள்ளதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஜெய்ப்பூர் கலாச்சாரம் மற்றும் வீரம் சம்பந்தப்பட்ட நகரம். ஜெய்ப்பூரின் விருந்தோம்பல் எல்லா இடங்களிலிருந்தும் மக்களை ஈர்க்கிறது. இந்த நகரம் புராதன நகரங்கள் பட்டியலில் தேர்வானது மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு யுனெஸ்கோ சார்பில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் புராதன நகரம் என்ற அந்தஸ்தை ஆமதாபாத் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal