அவுஸ்ரேலியாவில் சீன வங்கிகள் தம் வங்கியாளருக்குப் பயிற்றுவிக்க, போலியான 100 டொலர் அவுஸ்திரேலிய நோட்டுகளைப் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. குறத்த தாள்களின் நடுவில் “பயிற்றுவதற்கு மட்டும்” என்று சீன எழுத்தகளில் பொறிக்கப்பட்டிருக்கும். இவை eBay எனப்படும் இணைய வியாபார சந்தையில் விற்பனையாகி, அவுஸ்திரேலியாவின் மேற்கு மாநிலத்திற்கு வந்துள்ளதாக தெரியவருகிறது. இந்த நோட்டுக்கள் மதுபானம், சிகரெட் போன்றவை வாங்குவதற்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனாலும் இந்தவகையான நோட்டுக்கள் கள்ள நோட்டுகள் இல்லை. என்றாலும் அவை போலியான நோட்டுகள் தான் என்று கூறப்படுகிறது. எது எப்படியிருப்பினும் இந்தவகையான நோட்டுக்கள் ...
Read More »குமரன்
சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்ரேலியாவுக்குள் நுழைந்தவர்களுக்கு நிதி உதவிகள் ரத்து!
சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்தவர்களுக்கு நிதி உதவிகள் ரத்தாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறு அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்தவர்கள் தங்களது விசா நிலைமை குறித்து அவ்வப்போது குடிவரவுத்துறையை அணுகாமல் இருப்பவர்களுக்கே Centre link நிதி உதவி, மற்றும் வீட்டுவாடகை உதவிகளை ரத்து செய்ய அவுஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது. இதேவேளை இந்த நிதி உதவி ரத்து செய்யப்பட்டாலும், அவர்களுக்கான மருத்துவ உதவிகள் கிடைக்கும் என்று அரசு உறுதியளித்துள்ளது. இதன்மூலம் 2,000 க்கும் அதிகமான புகலிடம் கோருவோர் பாதிக்கப்படுவர் என்று கூறப்படுகிறது.
Read More »கொலை முயற்சி- அவுஸ்ரேலியாவில் தேடப்படும் சிங்கப்பூரர்!
அவுஸ்ரேலிய காவல் துறை, கொலை முயற்சியில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில், 30 வயது சிங்கப்பூரரைத் தேடி வருகின்றனர். 08 ஆம்திகதி இரவு பிரிஸ்பன் நகரில், பெயர் வெளியிடப்படாத அந்த நபர், 20-வயது சிங்கப்பூர் மாதை சுத்தியலால் தாக்கியதாகவும், பல முறை கத்தியால் குத்தியதாகவும் குவீன்ஸ்லந்துப் காவல் துறையிகர் கூறினர். மண்டையோட்டு எலும்பு பாதிக்கப்பட்ட நிலையில் அந்தப் பெண், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரின் உயிருக்கு ஆபத்தில்லை என்றும், அவர் சீரான உடல்நிலையில் இருப்பதாகவும் காவல்துறை கூறியுள்ளனர். மெலிந்த உடல்வாகு கொண்ட சந்தேக நபர், இரண்டு நாட்களுக்கு முன் பிரிஸ்பனுக்குச் ...
Read More »உலகில் அதிகம் ரீ-ட்வீட் செய்யப்பட்ட ட்வீட்!
ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் அதிகம் ரீ-ட்வீட் செய்யப்பட்ட ட்வீட்டுக்கான கின்னஸ் சாதனையை 16 வயது இளைஞர் தன்வசப்படுத்தினார். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வசிப்பவர் கார்டர் வில்கெர்சன். இவர் ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் எழுதிய வெகுளித்தனமான பதிவு ஒன்று உலக சாதனை படைத்துள்ளது. கார்டர் உணவு நிறுனவம் ஒன்றிடம் தினசரி இலவசமாக சிக்கன் கிடைப்பதற்கு எவ்வளவு ரீ-ட்வீட் வேண்டும்? என்று கேட்டிருக்கிறார். இதற்கு அந்த நிறுவனமும் விளையாட்டாக 18 மில்லியன் வேண்டும் என்று சொல்லிவிட்டது. ஆனால், உண்மையிலேயே கார்ட்ரின் ட்வீட் கோரிக்கையை 18 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் ...
Read More »அதர்வாவுடன் இணைந்த அட்டு நடிகர்
நல்ல கதாபாத்திரத்திற்காக காத்துக் கொண்டிருந்த `அட்டு’ நடிகர் தற்போது அதர்வாவுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். அண்மையில் வெளிவந்துள்ள படம் ‘அட்டு’. இது வடசென்னை குப்பைமேட்டு பின்னணி கதை. இந்த படத்தில் நாயகனின் நண்பனாக நடித்திருப்பவர் நடிகர் பிரபாகர். படத்தில் நடித்த அனுபவம் பற்றி கூறிய அவர்… “சினிமா ஆர்வம் என்னைப் பாடாய் படுத்தியதால் சினிமாவுக்கு வந்தேன். தெலுங்கில் சில படங்களில் நடித்தேன். பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் கூட நடித்து இருக்கிறேன். அது மறக்க முடியாத அனுபவம் என்றாலும், ...
Read More »வரவுசெலவுத் திட்டம் 2017/18 – குடிவரவு பற்றிய மாற்றங்கள்!
அவுஸ்ரேலிய வரவு செலவுத் திட்டத்தை, கருவூலக்காப்பாளர் Scot Morrison நேற்றிரவு (9) 7:30 மணிக்கு, நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். பெற்றோர்களுக்கான புதிய விசா அறிமுகம் – new temporary sponsored parent visa வருடத்துக்கு சுமார் 15,000 பேர் தலா $20,000 டொலர்கள் செலுத்தித் தமது பெற்றோர்களை new temporary sponsored parent visa திட்டத்தின் கீழ் இங்கு அழைத்துவந்து மூன்று தொடக்கம் ஐந்து வருடங்கள் வரை தம்முடன் தங்கவைக்கலாம். இதன்மூலம் அரசுக்கு $99 மில்லியன் டொலர்கள் வரை கிடைக்கவுள்ளது. ஆண்டுதோறும் 15000 விசாக்கள் வழங்கும் ...
Read More »விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் பாகங்கள் மீட்பு!
தமிழீழ விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்ட, சிறீலங்கா விமானப்படையின் வை-8 ரக விமானத்தின் பாகங்கள் யாழ். ஆணையிறவு இயக்கச்சி பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட விமான பாகங்களானது, கடந்த 1992ஆம் ஆண்டு சுட்டுவீழ்த்தப்பட்ட பலாலி விமானப்படையினருக்குச் சொந்தமான விமானத்தின் பாகங்கள் என தெரிவிக்கப்படுகிறது. விமானப்படையினரின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், விமானப்படையினரின் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விமானத்தின் பாகங்களையும் மீட்டுள்ளனர். சுமார் 25 வருடங்களின் பின்னர் குறித்த விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »நாடாளுமன்றத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டி வரலாற்றில் இடம்பிடித்த அவுஸ்ரேலிய எம்.பி.
அவுஸ்ரேலிய நாடாளுமன்ற அவைக்குள் பெண் உறுப்பினர் ஒருவர் தனது குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டியதன் மூலம் பாராளுமன்ற வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். அவுஸ்ரேலியா வில் பசுமைக் கட்சி தலைவர்களில் ஒருவர் லாரிசா வாட்டர்ஸ். குயீன்ஸ்லேண்ட் செனட்டரான (பாராளுமன்ற மேல்சபை எம்.பி.) இவர், சமீபத்தில் இரண்டாவது பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதற்காக மகப்பேறு விடுப்பில் சென்றிருந்த அவர், விடுப்பு முடிந்து, 2 மாத பெண் குழந்தையுடன் நேற்று நாடாளுமன்றத்திற்கு வந்து, முக்கிய வாக்கெடுப்பில் பங்கேற்றார். வாக்கெடுப்பின்போது, தனது இருக்கையில் அமர்ந்தபடி, குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டினார். இதன்மூலம், ஆஸ்திரேலிய நாடாளுமன்ற ...
Read More »மின்சார ஜெட் விமானம்!
மின்சாரத்தைக் கொண்டு பறக்கும் ஜெட் விமானத்தை, ஜெர்மனியிலுள்ள லிலியம் என்ற நிறுவனம் அண்மையில் வெற்றிகரமாக வெள்ளோட்டம் பார்த்துள்ளது.இரண்டு பேர் அமரும் வசதி கொண்ட, ‘ஈகிள்’ என்ற அந்த விமானத்திற்கு, வழக்கமாக விமானங்களுக்குத் தேவைப்படும் ஓடு பாதை தேவையில்லை. ஏனெனில், ஹெலிகாப்டரைப் போல தரையிலிருந்து நேரடியாக மேலே கிளம்பவும், மேலிருந்து கீழே இறங்கவும் உதவும், ‘வீடோல்’ தொழில்நுட்பத்தை ஈகிள் பயன்படுத்துகிறது. இறக்கைகளில் வேகமாக இயங்கும் மின் விசிறிகள் பல உள்ளன. விசிறிகளை தரையை நோக்கித் திருப்பினால், விமானம் மேலே உயரும். மேலே சென்றதும், விசிறிகளை குறுக்குவாக்கில் ...
Read More »அர்ஜுனின் 150-வது படம் குறித்த புதிய தகவல்
ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் உருவாகி இருக்கும் அவரது 150-வது படமான நிபுணன் குறித்த அடுத்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. சமீபத்தில் வெளி வந்து மாபெரும் வெற்றி பெற்ற படங்களின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக சொல்லப்படுவது, அந்த படங்களின் கதை அம்சமும், படமாக்கப்பட்ட விதமும் தான். அந்த அடிப்படையில் தாயராகி விரைவில் வெளி வரவிருக்கும் படம் `நிபுணன்’. ஆக்ஷன் கிங் அர்ஜுன் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்களுடன் வெளியாக உள்ள இப்படம் அர்ஜுனுக்கு 150-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. `நிபுணன்’ என்பது படத்தின் கதாநாயகனான ...
Read More »