ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் அதிகம் ரீ-ட்வீட் செய்யப்பட்ட ட்வீட்டுக்கான கின்னஸ் சாதனையை 16 வயது இளைஞர் தன்வசப்படுத்தினார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வசிப்பவர் கார்டர் வில்கெர்சன். இவர் ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் எழுதிய வெகுளித்தனமான பதிவு ஒன்று உலக சாதனை படைத்துள்ளது.
கார்டர் உணவு நிறுனவம் ஒன்றிடம் தினசரி இலவசமாக சிக்கன் கிடைப்பதற்கு எவ்வளவு ரீ-ட்வீட் வேண்டும்? என்று கேட்டிருக்கிறார். இதற்கு அந்த நிறுவனமும் விளையாட்டாக 18 மில்லியன் வேண்டும் என்று சொல்லிவிட்டது. ஆனால், உண்மையிலேயே கார்ட்ரின் ட்வீட் கோரிக்கையை 18 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் ரீ-ட்வீட் செய்துவிட்டார்கள்!
இதனால், அந்த உணவு நிறுவனம் வேறு வழியில்லாமல் ஒரு வருஷத்துக்கு கார்டருக்கு தினசரி சிக்கன் கொடுக்க சம்மதித்துவிட்டது. இத்துடன் கார்டரின் அந்த ட்வீட் அதிகம் ரீ-ட்வீட் செய்யப்பட்ட ட்வீட்டுக்கான கின்னஸ் சாதனையையும் முறியடித்துள்ளது.
எலென் டீஜெனெரஸ் என்ற அமெரிக்க தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வில் எடுத்த செல்ஃபி புகைப்படத்தின் ரீ-ட்வீட் சாதனையை கார்டரின் ட்வீட் எளிதில் தாண்டியுள்ளது.