இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை நடைமுறைக்கு வந்த பிறகு நான்கு தசாப்தகாலத்தில் 7 ஜனாதிபதி தேர்தல்களை நாடு சந்தித்திருக்கிறது.இவ்வருட இறுதியில் நடைபெறவிருப்பது 8 வது ஜனாதிபதி தேர்தலாகும். ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக்காலத்திலேயே ஜனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை காலமும் ஜனாதிபதி தேர்தல்களுக்கு (போட்டியிடுவதை தவிர்த்த இரு சந்தர்ப்பங்களை தவிர)அதன் வேட்பாளரைத் தெரிவுசெய்வதில் ஐக்கிய தேசிய கட்சி பிரச்சினைகளை எதிர்நோக்கியதில்லை. 1977 ஜூலை பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றிபெற்று ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை அமைத்தபோது பிரதமராக பதவியேற்ற ஜே.ஆர்.ஜெயவர்தன இருமாத காலத்தில் 1972 ...
Read More »குமரன்
தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்க நானும் தயார் – சாகல
தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையாத எந்தவொரு விடயத்திற்கும் ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளதாக கப்பற்துறை மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார். அத்துடன் தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்குமாறு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டால் சாட்சியமளிக்கத் தயாராகவுள்ளதாகவும் அவர் கூறினார். மாத்தறை – வெலிகம , வரக்கப்பிட்டிய மற்றும் மீருப்ப பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட மக்கள் சேவை நிலையமான ‘ சேவாபியச ‘ கட்டடத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
Read More »5 ஜி வலையமைப்பு தொடர்பான உண்மை நிலை என்ன?
யாழ். மாவடடத்தில் ஸ்மாட் கோபுரங்கள், பல இடங்களில் அமைக்கப்பட்டு வருகின்ற போதிலும் யாழ் மாநகர சபையின் எல்லைக்குள் மட்டும் நடப்படுவதாகவும் அதில் 5 ஜி அலைக்கற்றை பொறுத்தப்படவுள்ளதாக சில நபர்கள் அரசியல் போராட்ட்ங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால் எமது மக்கள் முட்டாள்கள் இல்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவடட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத்தலைவர்களான கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் நாடாளுமனற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ...
Read More »அமெரிக்கா: அகதிகள் சிறையில் 3 இந்தியர்கள் 20 நாட்களாக உண்ணாவிரதம்!
அமெரிக்காவுக்கு அகதிகளாக சென்று டெக்சாஸ் எல்லையில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள இந்தியர்களில் 3 பேர் 20 நாட்களாக உண்ணாவிரதம் இருந்ததால் அவர்களுக்கு பலவந்தமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் தஞ்சமடைய செல்லும் மக்களை அந்நாட்டின் சில மாநிலங்களில் உள்ள எல்லைப்பகுதியில் குடியுரிமைத்துறை அதிகாரிகள் கைது செய்து தற்காலிக சிறைகளில் அடைத்து வைத்துள்ளனர். அவ்வகையில், டெக்சாஸ் மாநில எல்லையில் கைது செய்யப்பட்டு எல் பாசோ பகுதியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் இந்தியாவை சேர்ந்த சிலர் ஓராண்டுக்கு மேலாகியும் விடுதலை செய்யப்படாமல் ...
Read More »ஷாகித் அப்ரிடியால் எட்ட முடியாமல் போன சாதனையை எட்டினார்!
ஆஸ்திரேலிய வீராங்கனை எலிஸ் பெர்ரி டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுக்களுடன் 1000 ரன்களை கடந்த முதல் நபர் என்ற பெருமையை பெற்றார். இங்கிலாந்து – ஆஸ்திரேலிய பெண்கள் அணிகளுக்கு இடையில் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 2-வது டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் அடித்தது. பின்னர் 122 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. கேப்டன் லேனிங் ...
Read More »ஜோ தான் என்னோட ஜாக்பாட் – சூர்யா
ஜாக்பாட் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட நடிகர் சூர்யா, ஜோதிகா தான் என்னோட ஜாக்பாட் என்று கூறியிருக்கிறார். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா, ரேவதி நடித்துள்ள படம் ஜாக்பாட். கல்யாண் எழுதி இயக்கியுள்ள இப்படம் ஆகஸ்ட் 2-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் நடிகர் சூர்யா பேசியதாவது:- “என்னோட ஜோ (ஜோதிகா) தான் என்னோட ஜாக்பாட். அவர் தேர்ந்தெடுக்கிற படங்கள் எல்லாவற்றையும் மிகவும் யோசித்து யோசித்து தான் செய்வார். தமிழ்நாட்டுப் பெண்கள் ஒவ்வொருவரும் அவர்களைப் ...
Read More »இறக்கும் தருவாயில் தங்கையின் உயிரை காப்பாற்றிய 5 வயது சிறுமி!
சிரியாவில் இறக்கும் தருவாயில் கூட தங்கையின் உயிரை காப்பாற்றிய 5 வயது சிறுமியின் செயல் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. சிரியாவில் அரசுப் படைகளும் கிளர்ச்சியாளர்களும் கடும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று இட்லிப் மாகாணத்திலுள்ள அரிஹா என்ற பகுதியில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப்படைகள் வான்வழி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் அரிஹா பகுதியிலிருந்த 5 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. அப்போது, அம்ஜத்அல் அப்துல்லா என்பவரது வீடும் நொறுங்கியது. இதில் வீட்டில் இருந்த அப்துல்லா மற்றும் அவரது மனைவி ஆஸ்மா ...
Read More »மஹிந்த அணியிலிருந்து வெளியேறினார் வெல்கம..!
மஹிந்தவுடன் இணைந்து செயற்பட்டு வந்த குமார வெல்கம அவ்வணியிலிருந்து விலகி சுதந்திரக்கட்சியின் நிகழ்வுகளில் பங்கேற்க ஆரம்பித்துள்ளார். நேற்று கொலன்னாவையில் நடைபெற்ற சுதந்திரக்கட்சியின் கிளை திறப்பு விழாவிலும் அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து பங்கேற்றிருந்தார். இதேநேரம், பொதுஜன முன்னணியின் முதலாவது தேசிய மாநாடு எதிர்வரும் மாதம் 11ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதில் பங்கேற்கப்போவதில்லை என்று களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்த பின்னர் நடைபெற்ற முதலாவது சுதந்திரக்கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் ஐக்கிய ...
Read More »பொருளியல் பேராசிரியர் மு.சின்னத்தம்பி காலமானார்!
பொருளியல் பேராசிரியர் மு.சின்னத்தம்பி தனது 79 ஆவது வயதில் நேற்று கொழும்பில் காலமானார். கண்டி மாவட்டம் ரங்கல எனும் பிரதேசத்தில் முத்துசாமி –முத்துவடிவு தம்பதிகளுக்கு பிறந்த இவர், அங்குள்ள தோட்டப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்தார். இவரது தந்தை தோட்ட வெளிக்கள உத்தியோகத்தராவார். 1948 ஆம் ஆண்டு இவரது குடும்பம் தலவாக்கலை கல்கந்த எனும் பிரதேசத்துக்கு இடம்பெயர்ந்தது. பின்னர் தலவாக்கலை அரச சிரேஷ்ட பாடசாலையில் சாதாரண தரம் வரை பயின்றார். பின்னர் 1959 இல் தெல்லிப்பளை மகஜனா கல்லூரியில் உயர்தரம் பயின்று 1961 இல் ...
Read More »பொன்னியின் செல்வன் படத்தில் தனுஷ் பட நடிகை!
மணிரத்னம் அடுத்ததாக இயக்க உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் தனுஷ் பட நடிகை நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செக்கச் சிவந்த வானம் படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்க உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்துள்ளனர். இந்தப் படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், அமலா பால், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், தற்போது பிரபல மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பொன்னியின் செல்வன் படத்தில் ...
Read More »