5 ஜி வலையமைப்பு தொடர்பான உண்மை நிலை என்ன?

யாழ். மாவடடத்தில் ஸ்மாட் கோபுரங்கள், பல இடங்களில் அமைக்கப்பட்டு வருகின்ற போதிலும் யாழ் மாநகர சபையின் எல்லைக்குள் மட்டும் நடப்படுவதாகவும் அதில் 5 ஜி அலைக்கற்றை பொறுத்தப்படவுள்ளதாக சில நபர்கள் அரசியல் போராட்ட்ங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆனால் எமது மக்கள் முட்டாள்கள் இல்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவடட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத்தலைவர்களான கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் நாடாளுமனற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையில் இன்று யாழ் மாவடட செயலகத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்து முன்வைக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு தெரிவித்ததாவது,

யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் ஸ்மாட் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் மாநகர சபையின் எல்லைக்குள் மட்டும்தான் இவை அமைக்கப்பட்டு வருகின்றது.என்ற தோற்றப்பாட்டினை இங்குள்ள சிலர் அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றனர்.இலங்கையிலேயே இல்லாத  5ஜி தொழில்நுட்பம் யாழ்ப்பாணத்தில் மட்டும் வரப்போகின்றது என போராடடம் நடத்துகின்றனர்.இவர்கள் எமது மக்களை முட்டாள்கள் என்று நினைத்தனர் போல உள்ளது. ஆனால் எமது மக்கள் அனைத்தையும் நன்கு அறிவார்கள் என்றார்.

இதனபோது கருத்து தெரிவித்த யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இ.ஆர்னோல்ட், யாழ்ப்பாண மாநகர சபையினால் 5 ஜி வலையமைப்பு அமைப்பது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது.நாம் அவ்வாறான உடன்படிக்கை எவற்றையும் செய்யவில்லை.

நாம் ஸ்மாட் கோபுரத்தின் ஊடாக மின்விளக்கு,கண்காணிப்புக் கேமரா போன்ற சில அத்தியாவசிய விடயங்கள் தொடர்பிலேயே ஏற்றநடவடிக்கை எடுத்துள்ளோம்.வெளியில் உள்ள சிலர் கூறுவது போன்று நாம் 5ஜி வலையமைப்பு பொருத்த எந்த உடன்படிக்கையும் செய்யவில்லை.என்றார்.