மணிரத்னம் அடுத்ததாக இயக்க உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் தனுஷ் பட நடிகை நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செக்கச் சிவந்த வானம் படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்க உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்துள்ளனர். இந்தப் படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், அமலா பால், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், தற்போது பிரபல மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி, தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் இணையும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் லண்டனில் தொடங்கவுள்ளது.
Eelamurasu Australia Online News Portal