சிரியாவில் இறக்கும் தருவாயில் கூட தங்கையின் உயிரை காப்பாற்றிய 5 வயது சிறுமியின் செயல் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. சிரியாவில் அரசுப் படைகளும் கிளர்ச்சியாளர்களும் கடும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று இட்லிப் மாகாணத்திலுள்ள அரிஹா என்ற பகுதியில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப்படைகள் வான்வழி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் அரிஹா பகுதியிலிருந்த 5 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது.

ஆனால் உயிருக்குப் போராடிய நேரத்திலும் ரிஹா செய்த செயல் அனைவரையும் கண்கலங்க செய்தது.
இடிபாடுகளில் சிக்கிய தனது 7 மாத தங்கையான துகா கீழே விழுந்துவிடக்கூடாது என்பதற்காக அவரின் சட்டையை இறுக்கமாக பிடித்துக்கொண்டார். இதனால் அந்தக் குழந்தை கீழே விழாமல் காயங்களுடன் உயிர் தப்பியது.
ஆனால், தங்கையை காப்பாற்றிய சிறுமி ரிஹாம் பரிதாபமாக உயிரிழந்தார்.
Eelamurasu Australia Online News Portal