பெர்த் மற்றும் கோல்ட் கோஸ்ட் என்ற ஆஸ்திரேலிய நகரங்களில் திறன்வாய்ந்த வெளிநாட்டு குடியேறிகள் குடியேறுவதை அந்நாட்டு அரசு ஊக்குவிக்கத் தொடங்கியுள்ளது. பிராந்திய விசாவின் கீழ் குடியேறுபவர்களுக்கான இடப்பட்டியலில் இந்நகரங்கள் முதல் முறையாக சேர்க்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் சுமார் 70 சதவீத மக்கள் தொகை சிட்னி, மெல்பேர்ன் மற்றும் பிரிஸ்பேன் உள்ளிட்ட நகரங்களிலேயே மையம் கொண்டிருக்கும் சூழலில், பிராந்திய விசாவுக்கான பட்டியலில் பெர்த் மற்றும் கோல்ட் கோஸ்ட் சேர்க்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய குடியேற்றத்துறை அமைச்சர் டேவிட் கோலிமன். பிராந்திய ஆஸ்திரேலியாவில் மேலும் 2000 திறன்வாய்ந்த வெளிநாட்டுத் ...
Read More »குமரன்
ஜனாதிபதித் தேர்தல்; முதற் கோணல்!
நம்மவர்களின் புதிய புதிய நம்பிக்கைகள்தான், வரலாற்று முரண்நகைகளை உருவாக்கிவிடுகின்றன என்பது, காலங்காலமாக நிரூபிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கின்றது. சிறுவன் சுர்ஜித், நம்போன்ற பெற்றோர்களின் கவனக்குறைவால் பலியாகி விட்டான். கவனக்குறைவுக்குப் பின்னரான செயற்பாடுகளில் காணப்பட்ட குறைபாடுகளால், அவன் பலியானதாகப் பலர் குறைப்படுகிறார்கள். அதுவும் தவறுதான். இவ்வாறுதான், நம்மிடமே முதற் பிழையை, பிழைகளை வைத்துக் கொண்டு, அதை ஏற்றுக் கொள்ளாமலேயே நாம் எவ்வளவு தூரம்தான் பயணித்துவிட முடியும்; எதைத்தான் சாதித்துவிடமுடியும்; எதிர்த்தரப்பிடமிருந்து எவற்றை எதிர்பார்க்க முடியும்? இந்த வகையில், பெறுமதியான மிகப்பெரிய பிரச்சினை / கேள்வி ஒன்றுக்கான தீர்மானகரமான ...
Read More »டுவிட்டரில் அரசியல் விளம்பரங்களுக்கு தடை!
சமூக வலைதளங்களில் அரசியல்வாதிகள் மூலம் தவறான தகவல்கள் பரவி வருவதை தடுக்கும் வகையில், உலக அளவில் அரசியல் விளம்பரங்களை தடை செய்ய டுவிட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. பேஸ்புக், டுவிட்டர் மிக முக்கியமான சமூக வலைத்தளங்கள் ஆகும். உலகில் கோடிக்கணக்கான மக்கள் இந்த வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் சிலர் தவறான தகவல்கள் பரப்புவதற்கு வலைத்தளங்களை பயன்படுத்துவதால் பொது மக்களுக்கும் அரசுக்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. இதை தடுக்க பல்வேறு நாடுகளில் சைபர் கிரைம் போலீசார் முயன்று வருகின்றனர். இந்நிலையில் டுவிட்டர் பக்கத்தில் அரசியல் விளம்பரங்கள் ...
Read More »திகில் திரைப்படத்தை ஒத்த பாக்தாதி மீதான தாக்குதல்!
வடமேற்கு சிரியாவில் அமெரிக்க இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையின் போது ஐ.எஸ். தீவிரவாதக் குழுவின் தலைவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். ஐ.எஸ். தீவிரவாத குழுத் தலைவர் அமெரிக்க இராணுவ மோப்ப நாயால் துரத்தப்பட்ட நிலையில் சுரங்கப் பாதையொன்றுக்குள் பிரவேசித்து தான் அணிந்திருந்த குண்டுகள் பொருத்தப்பட்ட தற்கொலை மேலங்கியை வெடிக்க வைத்து உயிரிழந்துள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து ஆற்றிய உரையில் குறிப்பிட்டுள்ளார். டொனால்ட் ட்ரம்ப் பக்தாதியை இலக்குவைத்துத் தாக்குதல் நடத்தப்படுவதையும் அவர் தனது 3 பிள்ளைகளையும் இழுத்துக் ...
Read More »சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோருக்கு சிறை!
தபால்மூல வாக்களிப்பின் பின் அது குறித்த விபரங்களையோ அல்லது படங்களையோ பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோருக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நாடு முழுவதிலும் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், இன்றும் நாளையம் நாடு முழுவதும் தபால்மூல வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் வாக்களித்த பின் அது குறித்த விபரங்களையோ அல்லது புகைப்படங்களையோ பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ...
Read More »ஜனாதிபதி தேர்தலில் பிரதமரை தெரிவு செய்ய இயலாது!
தனது அரசாங்கத்தில் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகாவிற்கு பாதுகாப்பு அமைச்சுப் பொறுப்பு வழங்கப்படும் என்பதைத் தவிர சஜித் பிரேமதாச வேறு பதவிகள் தொடர்பில் இதுவரை எதுவும் கூறவில்லை. அதேபோன்று எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவிருப்பது நாட்டின் ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் மாத்திரமேயாகும். இதனூடாக பிரதமர் ஒருவர் நியமனம் செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். வசந்த ...
Read More »அவுஸ்திரேலியாவில் சுறாவின் தாக்குதலில் காலை இழந்த சுற்றுலாவாசி!
அவுஸ்திரேலியாவில் நீருக்கடியில் நீந்தி கொண்டிருந்த வேளை பிரித்தாணியாவை சேர்ந்த இரண்டு சுற்றுலாவாசிகள் சுறாக்களின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்கள். அதில் ஒருவர் சுறாவினால் பலத்த தாக்குதலுக்குட்பட்டு ஒரு காலை இழந்துள்ளார். அவுஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள ஏர்லி பீச் அருகே 22 மற்றும் 28 வயதுடைய இருவர் ஸ்நோர்கெலிங் சுற்றுலா படகில் இருந்துள்ளார்கள். அவ்வேளை நீருக்கடியில் நீந்திய போது 22 வயதுடைய நபர் முதலில் சுறாவினால் தாக்கப்பட்டார், அவரது கீழ் காலில் சிதைவுகள் ஏற்பட்டது. பின்னர் சுறா மற்ற 28 வயதுடைய நபரைத் தாக்கி, காலை கடித்ததாக கூறப்படுகிறது. கப்பலில் இருந்த துணை மருத்துவர்களான ...
Read More »திரவுபதி கதையை படமாக்கும் தீபிகா படுகோனே!
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோனே, திரவுபதி கதையை படமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்டு மீண்டெழுந்து வந்து சாதித்த லக்ஷ்மி அகர்வால் என்பவரின் உண்மைக் கதை ‘சப்பாக்’ என்ற பெயரில் தயாராகிறது. இந்தப் படத்தில் லக்ஷ்மி கதாபாத்திரத்தில் நடித்ததோடு முதல் முறையாக தயாரிப்பாளராகவும் தீபிகா படுகோன் மாறியுள்ளார். இதைத் தொடர்ந்து மகாபாரதக் கதையைப் புதுவிதமாகச் சொல்லும் நோக்கில், பாண்டவர்களின் மனைவியான திரவுபதி கதாபாத்திரத்தின் பார்வையில் ஒரு திரைப்படத்தை தீபிகா தயாரிக்கவுள்ளார். 2021 தீபாவளிக்கு இந்தப் படம் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. ...
Read More »தாக்குதலுக்கு முன் டிஎன்ஏ சோதனை நடத்தி பாக்தாதி அடையாளத்தை உறுதி செய்த அமெரிக்க படை!
ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி மீதான தாக்குதலுக்கு முன்னதாகவே அவரது உள்ளாடையைக் கொண்டு மரபணு (டிஎன்ஏ) சோதனை நடத்தி அவரது அடையாளத்தை அமெரிக்க ராணுவம் உறுதி செய்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திவந்த ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி அமெரிக்கப் படைகளால் கடந்த சனிக்கிழமை கொல்லப்பட்டார். இதை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதி காரப்பூர்வமாக அறிவித்தார். மேற்கு ஆசிய நாடுகளுள் ஒன்றான இராக்கை சேர்ந்தவர் அபுபக்கர் அல் பாக்தாதி (வயது 48). சிரியா மற்றும் ...
Read More »ஸ்ரீலங்கா ஈழம் சோசலிச குடியரசு என்னும் பெயரில் ஆட்சிமுறை!
சர்வதேச சோஷலிசத்தை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை,காணிவிடுவிப்பு மற்றும் இனப்பிரச்சினை என்பற்றிற்கு தீர்வினை பெற்றுத்தர எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்திருக்கும் சோஷலிச சமத்துவ கட்சி இதற்கு தகுந்த தீர்வினை பெற்றுத்தரும் வகையிலான செயற்பாடுகளை உலக அளவில் முன்னெடுத்து வருவதாகவும்,முதலாளித்துவத்தின் காரணமாகவே இந்த பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. சோஷலிச சமத்துவ கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பொரளை கலாநிதி என்.எம். பெரேரா நிலையத்தில் இடம் பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த அந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ...
Read More »