குமரன்

‘தர்மதுரை’ திரைப்படத்துக்கு ஆசியா விஷன் விருதுகள்

நல்ல நோக்கத்திற்காகவும், மனித உணர்வுகளின் மேம்பாட்டுக்காகவும் எடுக்கப்பட்ட ‘தர்மதுரை’ திரைப்படத்துக்கு 4 ஆசியா விஷன் திரைப்பட விருதுகள் கிடைத்தது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக இத்திரைப்படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். திரைப்படங்களுக்கு வழங்கப்படும் ஆசியா விஷன் திரைப்பட விருதுகளில் தமிழ் திரைப்பட பிரிவு சார்பாக தர்மதுரை திரைப்படம் 4 விருதுகளை வென்றுள்ளது. ஸ்டுடியோ 9 ஆர்.கே. சுரேஷ் தயாரிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, தமன்னா நடிப்பில் வெளியான ’தர்மதுரை’வணிக ரீதியாக வெற்றி பெற்ற ஒரு படம். நவம்பர் 18-ஆம் தேதி, ஷார்ஜா கிரிக்கெட் ...

Read More »

புதிய 4 இந்திய மொழிகள் உட்பட மேலும் 11 உலக மொழிகளில் பிபிசி உலக சேவை

இந்தியாவில் தெலுங்கு, மராத்தி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி உட்பட மேலும் 11 உலக மொழிகளில் பிபிசி உலக சேவை தனது சேவைகளைத் தொடங்குகிறது. 1940 ஆம் ஆண்டுக்குப் பிறகான தனது மிகப்பெரிய விரிவாக்கத்தை பிபிசி உலகசேவை அறிவித்துள்ளது. இந்தியாவில் நான்கு புதிய மொழிச்சேவைகளை பிபிசி துவக்கப்போகிறது. 1940 ஆம் ஆண்டுக்குப்பிறகான தனது மிகப்பெரிய விரிவாக்கத்தை பிபிசி உலக சேவை அறிவித்துள்ளது. ஊடக சுதந்திரம் அச்சுறுத்தலுக்குள்ளாகும் இடங்கள் உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோடிக்கணக்கான மக்களுக்கு தனது சுயாதீன ஊடகசெயற்பாட்டை பிபிசி கொண்டு செல்லும் ...

Read More »

சிறீலங்காவில் வெள்ளைவான் கடத்தல்கள் தொடர்கின்றன! -ஐ.நா

சிறீலங்காவில் கடந்த ஆண்டு புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தாலும், இன்னமும் அங்கே வெள்ளைவான் கடத்தல்கள் தொடர்கின்றன என சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் துணைத் தலைவர் பெலிஸ் காயர் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நடைபெற்றுவரும் சித்திரவதைகளுக்கெதிரான ஐநாவின் 59ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ‘கடந்த ஆண்டிலும் வெள்ளை வான் கடத்தல்கள் இடம்பெற்றிருப்பதாக அரசசார்பற்ற நிறுவனங்கள், சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவுக்கு முறையிட்டுள்ளன. 2012இலிருந்து 2016ஒக்ரோபர் வரையான காலப்பகதியில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டோர் கடுமையான சித்திரவதைகளுக்குட்படுத்தப்பட்டமை தொடர்பாக காவல்துறையினருக்கு எதிராக 100 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் ...

Read More »

குறியீடுகளைத் தேட உதவும் தளம்

இணையத்தில் தகவல்களை எளிதாகத் தேடி விடலாம். ஆனால் சில நேரங்களில் சிறப்பு எழுத்துக்கள் அல்லது குறியீடுகளைத் தேடுவது சிக்கலாக இருக்கும். பரவலாகப் பயன்படுத்தப்படும் ‘@’ மற்றும் ‘&’ போன்ற குறியீடுகளை விசைப் பலைகையில் பார்க்க முடிந்தாலும், மற்ற குறியீடுகளைத் தேடிப் பயன்படுத்துவது கடினமாக இருக்கும். ‘மவுஸர்’ இணையதளம் இந்தச் சிக்கலைப் போக்குகிறது. இந்த இணையதளத்தில் குறியீடுகளை எளிதாகத் தேடலாம். குறியீடுகளை எப்படி டைப் செய்வது என குழம்ப வேண்டாம். அவற்றை வரைந்து காட்டினாலே அதற்குப் பொருத்தமான குறியீட்டை இந்தத் தளம் அடையாளம் காட்டுகிறது. அதற்கான ...

Read More »

இசையமைப்பாளர் அரோல் கொரேலி திருமணம்

‘பிசாசு’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி, ‘பசங்க-2’, ‘சவரக்கத்தி’ என தொடர்ந்து தற்போது விஷால் நடித்துவரும் ‘துப்பறிவாளன்’, ‘அட்டக்கத்தி’ தினேஷ் நடித்துவரும் ‘அண்ணனுக்கு ஜே‘, ‘இணையதளம்‘ போன்ற பல படங்களுக்கு இசையமைத்து வரும் அரோல் கொரேலி, நவம்பர் 2ஆம் திகதி ரீத்தா தேவியை மணம் முடித்தார். எந்த அறிவிப்பும் இன்றி திடீரென நடந்த இந்த திருமணம் காதல் திருமணமா..? அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமா..? “கடந்த அஞ்சு வருஷமா எங்க வீட்டுல தீவிரமா எனக்கு பொண்ணு பார்த்துட்டு இருந்தாங்க. அப்படி சமீபத்தில் பார்த்த பொண்ணு தான் ...

Read More »

நெல்சிப் ஊழல் அறிக்கை முடக்கி வைக்கப்பட்டிருந்ததா?

வடமாகாணசபையில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடியான நெல்சிப் ஊழல் அறிக்கையினை சுமார் ஒருவருட காலம் மறைத்து வைத்திருந்து தற்போதே அதனை வெளியிட்டமை அம்பலமாகியுள்ளது. நெல்சிப் ஊழல் தொடர்பில் வடமாகாணசபை உறுப்பினர்கள் மூவரை கொண்ட குழுவொன்று 2015ம் ஆண்டின் பெப்ரவரி நியமிக்கப்பட்டிருந்த போதும் அதன் அறிக்கை அதே ஆண்டின் நவம்பர் மாதம் வடமாகாணசபை வசம் கையளிக்கப்பட்டிருந்ததாகத் தெரியவருகின்றது. இந்நிலையில் நெல்சிப் ஊழல்கள் தொடர்பில் வடமாகாண பிரதம செயலாளரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவும் தனது அறிக்கையினை ஆளுநரிற்கு அனுப்பியுள்ளது. இதனிடையே வடமாகாணசபையால் நியமிக்கப்பட்ட குழுவினது அறிக்கையும் கிடைக்கப்பெற்று ஒருவருடம் ...

Read More »

இடம் நகர்கின்றது அவுஸ்திரேலியக் கண்டம்

தற்போது உள்ள ஏழு கண்டங்களும் ஒரு காலத்தில் ஒன்றாக இணைந்து காணப்பட்டன என்பது புவியியலாளர்களின் கருத்து. எனினும் காலநிலை மாற்றங்கள் காரணமாக பின்னர் அவை தனித்தனியாக பிரிந்ததாக கருதப்படுகின்றது. இப்படியிருக்கையில் அவுஸ்திரேலியக் கண்டம் தொடர்ந்தும் தனது இடத்தை விட்டு நகர்ந்து வருவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இக் கண்டமானது ஆண்டு தோறும் பல மில்லி மீற்றர்கள் வரை புவியின் மத்திய பகுதியில் இருந்து நகர்வது நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஓர் ஆண்டு இரண்டு தடவைகள் இவ்வாறு நகர்வை மேற்கொள்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவேளை கடந்த 22 ...

Read More »

அவுஸ்திரேலியாவில் 100 டொலர் நோட்டுகளை திரும்ப பெற முடிவு?

இந்தியாவை போன்று அவுஸ்திரேலியாவிலும் 100 டொலர் நோட்டுகளை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்தியாவில் அதிரடி நடவடிக்கையாக ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதனை அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் வரவேற்றாலும் மக்கள் பணத்தை மாற்ற திண்டாடுகின்றனர். இதேபோன்று அவுஸ்திரேலியாவில் 100 டொலர் நோட்டை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக அவுஸ்திரேலியாவில் முதலீட்டு வங்கியான யுபிஎஸ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், டிஜிட்டல் மற்றும் பணமில்லா பரிமாற்றத்தை அதிகரிக்கவும், வங்கிகளில் மக்கள் காத்து கிடப்பதை ...

Read More »

அவுஸ்ரேலியான்னா ‘பயம்’… அது இப்போ இல்லையா?

“ஸ்விங் பந்துகளையும் சரி, ஸ்பின் பந்துகளையும் சரி, ஸீம் பவுலிங்கையும் சரி எங்களால் எதையுமே  சரியாக எதிர்கொள்ள முடியவில்லை. தன்னம்பிக்கை அடியோடு உடைந்து போயிருக்கிறது” –  வருத்தம் தோய்ந்த முகத்தோடு வார்த்தைகள் உலர பொறுமையாகச் சொல்லியிருக்கிறார் ஆஸியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். இதுவரை எந்த ஆஸி கப்டனும் இப்படித் தேம்பியதில்லை, கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஆண்டில் இப்படிச் சரிந்ததும் இல்லை. டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி20 என அத்தனையிலும் மண்ணை கவ்வி, நிலைகுலைந்து போயிருக்கிறது ஆஸ்திரேலியா. கிரிக்கெட் வரலாற்றில் அவுஸ்ரேலியா ஒரு சிறந்த அணி என்பதில் எந்த ...

Read More »

சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற 8 வயது காஷ்மீர் சிறுமி

இத்தாலியில் நடைபெற்ற உலக கிக்பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் காஷ்மீரைச் சேர்ந்த 8 வயது சிறுமி தஜாமுல் இஸ்லாம் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 8 வயதுக்குட்பட்டோருக்கான உலக கிக்பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் உள்ள அண்ட்ரியா நகரில் நடைபெற்றது. இதில் ஜம்மு-காஷ்மீரின் பண்டிபோரா மாவட்டத்தை சேர்ந்த தஜாமுல் இஸ்லாம் என்ற சிறுமி தங்கம் வென்று சாதனை படைத்தார். 5 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் உலகம் முழுவதும் 90 நாடுகளைச் சேர்ந்த சிறுமிகள் கலந்து கொண்டனர். இதில் 6 போட்டிகளில் வென்ற தஜாமுல் இறுதியாக ...

Read More »