குமரன்

24 மணி நேரத்துக்குள் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்படும்

அமெரிக்காவில் முதல் கொரோனா தடுப்பூசி 24 மணி நேரத்துக்குள் வழங்கப்படும் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தற்போது தினமும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதேபோல் பலியானவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி இருக்கிறது. நேற்று ஒரே நாளில் 3 ஆயிரம் பேர் உயரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த மாதத்தில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் ...

Read More »

பிக்பாஸ் பிரபலத்துடன் பாம்பாட்டம் ஆடும் ஜீவன்

நான் அவன் இல்லை படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த ஜீவன் இரண்டு வேடங்களில் பாம்பாட்டம் ஆட இருக்கிறார். ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் ‘பாம்பாட்டம்’. நான் அவன் இல்லை படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த ஜீவன் இதில் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் இவருக்கு இரட்டை வேடம். கதாநாயகிகளாக டகால்டி படத்தில் ...

Read More »

சவுதியின் மதபோதகர்கள் இலங்கை முஸ்லீம்களின் மனதை மாற்றும் போதனைகளில்

சவுதிஅரேபியாவிற்கு செல்லும் இலங்கை முஸ்லீம்கள் அங்குள்ள மதபோதகர்ளால் மூளைச்சலவை செய்யப்படுகின்றனர் என உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சவுதிஅரேபிய போதகர் ஒருவர் இலங்கை முஸ்லீம் ஒருவருக்கு போதிக்கும் காணொளி குறித்து ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பிட்ட காணொளியில் காணப்படும் விடயங்கள் குறித்து ஏசிஜேயூ அமைப்பின் தலைவரிடம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் விசாரித்துள்ளனர். குறிப்பிட்ட காணொளியில் சவுதிஅரேபிய மதகுரு இஸ்லாமை கைவிடுதல் கொலை செய்தல் போன்ற விடயங்கள் குறித்துகருத்து வெளியிட்டுள்ளார் என ஏசிஜேயூ அமைப்பின் தெரிவித்துள்ளார். இவ்வாறான சந்தர்ப்பங்களில் ...

Read More »

39 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன

இலங்கை முழுவதும் 10 காவல் துறை பிரிவுகள், 39 கிராம சேவகர் பிரிவுள் மற்றும் 04 தொடர்மாடி குடியிருப்புகள் முடக்கப்பட்ட நிலையிலுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் மொத்தம் 09 காவல் துறை பிரிவுகள் முடக்கப்பட்ட நிலையிலுள்ளன. அவையாவன: முகத்துவாரம்(மோதர), கிராண்ட்பாஸ், ஆட்டுப்பட்டித்தெரு, டாம் வீதி, வாழைத்தோட்டம், மாளிகாவத்தை, மருதானை, தெமட்டகொட மற்றும் கொட்டாஞ்சேனை ஆகும். வேகந்த, வனாத்தமுல்ல, சாலமுல்ல, ஹுனுப்பிட்டி,60ஆம் தோட்டம் மற்றும் கோகிலா வீதி ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் முடக்கப்பட்டுள்ளன. மேலும் தொடர் மாடிகளில் ரன்திய உயன, ...

Read More »

ஆப்கானிஸ்தானில் பெண் நிருபர் சுட்டுக்கொலை

ஆப்கானிஸ்தானில் தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றிய பெண் நிருபர் மலாலா மைவாண்ட் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் பெண் நிருபராக வேலைபார்த்தவர் மலாலா மைவாண்ட். இவர் பணி வி‌ஷயமாக ஜலாலாபாத் நகருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். காரை டிரைவர் முகமது தாகிர் ஓட்டிச்சென்றார். அப்போது காரை மறித்த மர்மநபர்கள் துப்பாக்கியால் பெண் நிருபரை சரமாரியாக சுட்டனர். மேலும் கார் டிரைவரையும் சுட்டனர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடனே மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். சுட்டுக்கொல்லப்பட்ட பெண் நிருபர் ...

Read More »

சித்ரா தற்கொலைக்கு யார் காரணம்?

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலைக்கு யார் காரணம் என்பது குறித்து காவல்துறையினர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர். சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று முன்தினம் நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டு வந்தநிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் நடிகை சித்ராவின் மரணம் தற்கொலை தான் என போலீசார் உறுதிப்படுத்தினர். இதையடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டியது யார் என்ற கோணத்தில் போலீசார் அடுத்தகட்ட விசாரணையை நடத்தி வந்தனர். இந்நிலையில், நடிகை சித்ராவின் தற்கொலைக்கு அவரது ...

Read More »

நடிகை சித்ராவின் மரணம் தற்கொலையே – பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்

பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் நடிகை சித்ராவின் மரணம் தற்கொலை தான் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலை சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் நடிகை சித்ராவின் மரணம் தற்கொலை தான் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அவரது கன்னத்தில் ...

Read More »

கொவிட்-19: பிளாஸ்டிக் முகக்கவசங்கள் பாதுகாப்பற்றவை என ஆய்வில் தகவல்

கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக  அணியும் பிளாஸ்டிக் முகக் கவசங்கள் பாதுகாப்பற்றவை என ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணமாக துணி மற்றும் பிளாஸ்டிக்கால் ஆன முகக்கவசங்களை அணிந்து வருகின்றனர். இந்நிலையில் பிளாஸ்டிக் முகக்கவசம் அணிந்தவர்களுக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டதால், அதுகுறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது ஒரு மீற்றர் தொலைவில் ஒரு நபர் தும்மும்போது அதிலிருந்து வெளியாகும் கொரோனா கிருமிகள் பிளாஸ்டிக் முகக்கவசத்தின் அடிப்பகுதியில் தங்கிவிடுவது தெரியவந்துள்ளது. எனவே துணியால் ஆன முகக்கவசங்களே பாதுகாப்பானவை என ஆய்வில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

கொரோனாவைரசினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் போது மனிதஉரிமைகளிற்கு முக்கியத்தும் வழங்குங்கள்

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் போது மனித உரிமைக்கு முன்னுரிமை வழங்குங்கள் என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோகுடரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மனித உரிமைகள் தினத்தை குறிக்குமுகமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை மற்றும் அதிலிருந்து மீள்வதற்கான முயற்சிகளின் போது மக்களிற்கும் மனித உரிமைகளிற்கும் முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரசினை தோற்கடித்து அனைவரையும் காப்பாற்றுவதற்கு உலகளாவிய உரிமைiயை அடிப்படையாக கொண்ட கட்டமைப்பு அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மனித ...

Read More »

குற்றவியல் நீதிமன்றுக்கு சிறிலங்கா பரிந்துரை செய்ய வேண்டும்

சிறிலங்கா அரசின் போர்க்குற்றவாளிகள் நாட்டிற்குள் நுழைவதைத் தடை செய்வது, மற்றும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றிற்கு பரிந்துரைத்தல் தொடர்பாகவும் ஐ.நா.அங்கீகாரம் பெற்ற அமைப்பான “அலையன்ஸ் கிரியேட்டிவ் கம்யூனிட்டி ப்ராஜெக்ட்” (The “Alliance Creative Community Project) கனடாவின் வெளியுறவு அமைச்சருக்கு ஒரு கோரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. உலகம் முழுவதும் டிசம்பர் 10 கொண்டாடப்படும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தையும், டிசம்பர் 9 ஆம் தேதி நிகழும் சர்வதேச இனப்படுகொலை தினத்தையும் முன்னிட்டே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும் போர் குற்றச் சட்டத்தின் கீழ், நாட்டிற்குள் நுழையும் ...

Read More »