கொவிட்-19: பிளாஸ்டிக் முகக்கவசங்கள் பாதுகாப்பற்றவை என ஆய்வில் தகவல்

கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக  அணியும் பிளாஸ்டிக் முகக் கவசங்கள் பாதுகாப்பற்றவை என ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணமாக துணி மற்றும் பிளாஸ்டிக்கால் ஆன முகக்கவசங்களை அணிந்து வருகின்றனர்.

இந்நிலையில் பிளாஸ்டிக் முகக்கவசம் அணிந்தவர்களுக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டதால், அதுகுறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

அப்போது ஒரு மீற்றர் தொலைவில் ஒரு நபர் தும்மும்போது அதிலிருந்து வெளியாகும் கொரோனா கிருமிகள் பிளாஸ்டிக் முகக்கவசத்தின் அடிப்பகுதியில் தங்கிவிடுவது தெரியவந்துள்ளது.

எனவே துணியால் ஆன முகக்கவசங்களே பாதுகாப்பானவை என ஆய்வில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.