கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் போது மனித உரிமைக்கு முன்னுரிமை வழங்குங்கள் என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோகுடரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மனித உரிமைகள் தினத்தை குறிக்குமுகமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை மற்றும் அதிலிருந்து மீள்வதற்கான முயற்சிகளின் போது மக்களிற்கும் மனித உரிமைகளிற்கும் முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வைரசினை தோற்கடித்து அனைவரையும் காப்பாற்றுவதற்கு உலகளாவிய உரிமைiயை அடிப்படையாக கொண்ட கட்டமைப்பு அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் பற்றிய இரு அடிப்படை உண்மைகளை மீண்டும் வலுவூட்டியுள்ளது என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மனிதஉரிமை மீறல்கள் எங்கள் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பலவீனமான நிலையில் மக்கள் குழுக்கள் மீது கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை செலுத்தியுள்ளது என ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
முன்னிலைபணியாளர்கள் மாற்றுதிறனாளிகள் முதியவர்கள் பெண்கள் சிறுவர்களை அளவுக்கதிகமாக கொரோனா வைரஸ் பாதித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
வறுமை சமத்துவமின்மை பாகுபாடு எங்கள் இயற்கை அழிக்கப்படுதல் ஆகியவற்றினால் கொரோனா வைரஸ் செழித்து வளர்ந்துள்ளது என தெரிவித்துள்ள ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் ஏனைய மனித உரிமை தோல்விகள் எங்கள் சமூகங்களில் மகத்தான பலவீனங்களை உருவாக்கியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஊடக சுதந்திரம்; குடிமை சுதந்திரம் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் மிகக்கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கான சாக்குபோக்கினை வழங்குவதன் மூலம் கொரோனா வைரஸ் மனித உரிமைகளை பாதிக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் உலகளாவியவை அனைவரையும் அவை பாதுகாக்கின்றன என தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் கொரோனாவிற்கு எதிரான நடவடிக்கை ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை அடிப்படையாக கொண்டிருக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.