குமரன்

கொரோனாவின் தாக்கத்திற்கு பின் இலங்கை எப்படியிருக்கும்?

இலங்கையானது கொரோனாவின் தாக்கத்திலிருந்து மீண்டாலும் அதன் பின்னர் ஏற்படப்போகும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முங்கொடுக்கும் சக்தியைக் கொண்டிருக்கவில்லை என்று பொருளாதார துறைசார் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இலங்கைக்கு வருமானம் கிடைக்கும் அனைத்து வழிகளும் மூடப்பட்டுள்ள நிலையிலும் உள்நாட்டு உற்பத்திகளை தவிர்த்து வெளிநாடுகளில் தங்கியிருக்கும் பொருளாதார கொள்கைகளை பின்பற்றி வந்தமையால் அடுத்துவரும் காலப்பகுதியில் ஏற்படப்போகும் மோசனமான நிலைமைகளை தவிர்க்கவே முடியாதென்றும் அவர்கள் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளனர். முழு உலகுமே கொரோனா தொற்றுக்குக்கு இலக்காகி நெருக்கடிகளை சந்தித்துள்ள நிலையில் மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை அனைத்து நாடுகளுமே சந்திக்கவுள்ளதாக சர்வதேச பொருளாதார ஆய்வாளர்கள் ...

Read More »

கொவிட் -19 கொரோனா வைரஸின் தாக்கமும் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணமும்!

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாடாக அனைவரும் நெருக்கடிகளை சந்திக்கும் இந்நேரத்தில் கொரோன வைரஸில் இருந்து விடுபடுவதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவது குறித்தும் பாராளுமன்ற மக்கள் பிரதிநிதிகள் தமது நிலைப்பாடுகளை முன்வைக்கும் விதத்தில் பாராளுமன்ற பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாக கலந்துகொண்ட விவாதம்   வியாழக்கிழமை “மந்திரி.எல்கே” வின் முகப்புத்தக பக்கத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் தத்தமது கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். அரசாங்கம் அவசியமில்லை இராணுவம் போதும் என்ற கருத்துக்களை ஏற்றுகொள்ள முடியாது – முன்னாள் பாராளுமன்ற ...

Read More »

சீன தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு தடை- அமெரிக்கா எச்சரிக்கை

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காரணமாக ‘சீனா டெலிகாம்’ நிறுவனத்துக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்படும் என ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசு எச்சரித்துள்ளது. சீனாவின் அரசுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான ‘சீனா டெலிகாம்’ அமெரிக்காவிலும் தொலைத்தொடர்பு சேவை அளிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் ‘சீனா டெலிகாம்’, ‘சீனா யூனிகாம்’ ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்களால் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாக குடியரசு மற்றும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 2 எம்.பி.க்கள் குற்றம் சாட்டினார். இதையடுத்து இது பற்றி ஆராய்வதற்காக தொலைத்தொடர்பு ஆணையம், பாதுகாப்பு, வெளியுறவு, ...

Read More »

2020 சர்வதேச புக்கர் பரிசு ஆஸ்திரேலிய எழுத்தாளர் ஷோகூஃப் அசார்க்கு …!

இந்தோனேஷியாவிலிருந்து 75 பேருடன் கிறிஸ்மஸ் தீவில் கரைசேர்ந்த சிறிய படகில் ஒரு அரசியல் தஞ்சக்கோரிக்கையளராக  ஆஸ்திரேலியா வந்தடைந்த  அகதி எழுதிய The Enlightenment of The Greengage Tree என்ற நாவல் International Booker Prize எனப்படுகின்ற சர்வதேச விருதுப்பட்டியலுக்கு விருதுப்பட்டியலுக்கு தெரிவாகியுள்ளது. ஈரானிய அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தமைக்காக ஒரு ஊடகவியலாளராக பல தடவைகள் சிறைவைக்கப்பட்ட Shokoofeh Azar இந்த விருதுப்பட்டியலுக்கு தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார். ஈரானின் பார்ஸி மொழியி ல் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த நாவலுக்கு International Booker Prize விருது கிடைக்குமானால் ஈரானிய ...

Read More »

முன்னாள் பேராயர் டி. நீக்ளஸ் ஆண்டகை காலமானார்!

கொழும்பு மறை மாவட்டத்தின் முன்னாள் பேராயர் டி. நீக்ளஸ் மார்க்கஸ் பெர்னாண்டோ ஆண்டகை  காலமானதாக பேராயர் இல்லம் அறிவித்துள்ளது. இவர் சிறப்பான எடுத்துக்காட்டான பல்வேறு சேவைகளை செய்துள்ளதோடு, அனைவரிடத்திலும் அன்பும், கருணையும் கொண்டவராக இருந்துள்ளார்.  

Read More »

இரு சகோதரிகளின் உடல்களும் நல்லடக்கம்!

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,பரப்பாங்கண்டன் பகுதியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (09.04.2020) மதியம் 2.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சகோதரிகளான இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மன்னாரில் இருந்து சென்ற மோட்டார் சைக்கிலும், முருங்கன் பிரதான வீதியாக மன்னார் நோக்கி வந்த பிக்கப் ரக வாகனமும் மோதியதில் மோட்டார் சைக்கிலில் பயணித்த குறித்த இரு பெண்களும் உயிரிழந்துள்ளதாக  தெரியவந்துள்ளது. குறித்த இரு பெண்களும் உடன் பிறந்த சகோதரிகளான சந்தியோகு லிண்டா(வயது 40), மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றியவர் என்பதோடு, ;மற்றையவர் சந்தியோகு ...

Read More »

ஊரடங்கை மீறினாரா பார்வதி

தமிழில் பூ, மரியான், உத்தம வில்லன், பெங்களூரு நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்த பார்வதி ஊரடங்கை மீறியதாக கூறப்படுகிறது. தமிழில் பூ, மரியான், உத்தம வில்லன், பெங்களூரு நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்த மலையாள நடிகை பார்வதி, கடந்த செவ்வாய்கிழமை தனது 32வது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்தநாளையொட்டி நண்பர்களுடன் அவர் காரில் ஊர் சுற்றிய படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. அதில் என்னை அறிந்தால் படத்தில் இடம்பெற்ற அதாறு அதாறு பாடலுக்கு அவரும், அவரது நண்பர்களும் காருக்குள்ளேயே நடனமாடுகின்றனர். போதிய சமூக இடைவெளியையும் ...

Read More »

வித்தியாசமான முயற்சியில் களமிறங்கிய ரகுல் பிரீத் சிங்

தமிழ் தெலுங்கில் பிரபலமான நடிகை ரகுல் பிரீத் சிங் வித்தியாசமான முயற்சியில் கொரோனா நிதி திரட்ட முடிவு செய்துள்ளார். நடிகர்கள் நடிகைகள் பலரும் கொரோனா நிவாரண நிதி திரட்டி வருகிறார்கள். ஆனால் நடிகை ரகுல் பிரீத் சிங் வித்தியாசமான முறையில் கொரோனா நிவாரண நிதி திரட்ட முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் ஒரு யூ-டியூப் சேனலை ஆரம்பித்துள்ளார். அதில் கிடைக்கும் தொகையை அப்படியே பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்க அவர் முடிவு செய்துள்ளார். தனது இந்த முயற்சிக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் ...

Read More »

அத்தியாவசிய பொருட்களை பதுக்காதீர்கள் – அமிதாப்பச்சன் வேண்டுகோள்

அத்தியாவசிய பொருட்களை பதுக்காதீர்கள் என்று நடிகர் அமிதாப்பச்சன் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா ஊரடங்கால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப் பாடுகள் ஏற்படக்கூடாது என்பதில் மத்திய, மாநில அரசுகள் கவனமாக இருக்கின்றன. அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளன. இந்த நிலையில் பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பதுக்காதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது:- பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவை ஏற்று நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு ...

Read More »

யாழ் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

யாழ்.மாவட்டத்தில் 6வது நாளாகவும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காண ப்படவில்லை. இன்றைய தினம் 10 பேருக்கு பரிசோதனை நடாத்தப்பட்ட நிலையில் 10 பேருக்கும் தொற்றில்லை. என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கண்டவாறு கூறியிருக்கும் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் யாழ்.மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 7 பே ரும் தற்போது நலமாக உள்ளதாகவும் பணிப்பாளர் கூறியுள்ளார். இந்நிலையில் வெற்றிகரமாக 6வது நாளில் யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை.

Read More »