தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காரணமாக ‘சீனா டெலிகாம்’ நிறுவனத்துக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்படும் என ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசு எச்சரித்துள்ளது.
சீனாவின் அரசுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான ‘சீனா டெலிகாம்’ அமெரிக்காவிலும் தொலைத்தொடர்பு சேவை அளிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் ‘சீனா டெலிகாம்’, ‘சீனா யூனிகாம்’ ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்களால் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாக குடியரசு மற்றும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 2 எம்.பி.க்கள் குற்றம் சாட்டினார்.
இதையடுத்து இது பற்றி ஆராய்வதற்காக தொலைத்தொடர்பு ஆணையம், பாதுகாப்பு, வெளியுறவு, உள்துறை, நீதித்துறை, வணிகத்துறை ஆகியவற்றைச் சேர்ந்த வல்லுநர் குழுவை அமெரிக்க பாராளுமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமைத்தது.
6 மாத கால தீவிர விசாரணைக்கு பிறகு, இந்த வல்லுநர் குழு நேற்று முன்தினம் தனது அறிக்கையை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் ‘சீனா டெலிகாம்’ நிறுவனத்தால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதால், அதற்கு வழங்கப்பட்டுள்ள உரிமத்தை பறிக்க வேண்டும் என அவர்கள் பரிந்துரைத்துள்ளனர். எனவே ‘சீனா டெலிகாம்’ நிறுவனத்துக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்படும் என ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசு எச்சரித்துள்ளது.
Eelamurasu Australia Online News Portal