2020 சர்வதேச புக்கர் பரிசு ஆஸ்திரேலிய எழுத்தாளர் ஷோகூஃப் அசார்க்கு …!

இந்தோனேஷியாவிலிருந்து 75 பேருடன் கிறிஸ்மஸ் தீவில் கரைசேர்ந்த சிறிய படகில் ஒரு அரசியல் தஞ்சக்கோரிக்கையளராக  ஆஸ்திரேலியா வந்தடைந்த  அகதி எழுதிய The Enlightenment of The Greengage Tree என்ற நாவல் International Booker Prize எனப்படுகின்ற சர்வதேச விருதுப்பட்டியலுக்கு விருதுப்பட்டியலுக்கு தெரிவாகியுள்ளது.

ஈரானிய அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தமைக்காக ஒரு ஊடகவியலாளராக பல தடவைகள் சிறைவைக்கப்பட்ட Shokoofeh Azar இந்த விருதுப்பட்டியலுக்கு தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார். ஈரானின் பார்ஸி மொழியி ல் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த நாவலுக்கு International Booker Prize விருது கிடைக்குமானால் ஈரானிய நூலொன்றுக்கு கிடைக்கவுள்ள முதலாவது விருது இதுவாகும் என்று Shokoofeh Azar பெருமையுடன் கூறுகிறார்.

ஆதிக்க சக்திகளின் அநியாயங்களுக்கு எதிராக தொடர்ந்து குரல்கொடுத்தவர் Shokoofeh Azar. ஆஸ்திரேலியாவுக்கு வருவதற்காக இந்தோனேஷியாவுக்கு வரமுதல் ஈரானில் கடைசியாக இவர் கைதுசெய்யப்பட்டபோது மூன்று மாதங்கள் தனிமைப்படுத்தப்பட்ட சிறையிலிருந்தவர்.

ஆஸ்திரேலியாவுக்கு வந்த பிறகு ஆறு மாதங்கள் பேர்த்தில் அமைந்துள்ள தடுப்புமுகாமில் அகதியாக தடுத்துவைக்கப்பட்டிருந்தவர். தற்போது விக்டோரியாவில் வசிக்கிறார்.

தனது நாவல் விருதுக்காக தெரிவுசெய்யப்பட்ட செய்தியை விருதுக்குழு லண்டனிலிருந்து மின்னஞ்சல் வழியாக அறிவித்தபோது அதனை தனது எட்டு வயது மகளுடன்தான் முதலில் பகிர்ந்துகொண்டதாக கூறியுள்ளார்.

அமெரிக்காவிலுள்ள – அச்சம் காரணமாக பெயர் குறிப்பிட விரும்பாத – மொழிபெயர்ப்பாளரின் ஊடாக ஆங்கிலத்தில் கொண்டுவரப்பட்ட The Enlightenment of The Greengage Tree நாவல் லண்டனில் வழங்கப்படுகின்ற்து

எதிர்வரும் மே 19 ஆம் திகதி இறுதி வெற்றியாளர் அறிவிக்கப்படவுள்ள International Booker Prize நிகழ்வு இந்தத்தடவை – கொரோனா அச்சம் காரணமாக – இணைய வழியாகவே இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.