குமரன்

கொள்ளையடித்த பணத்தை தந்துவிட்டு பாகிஸ்தானை விட்டு வெளியேறுங்கள்!

பாகிஸ்தான் முன்னாள் அதிபரும் முன்னாள் பிரதமரும் மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை திருப்பித் தந்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறுவதில் எனக்கு ஆட்சேபணை இல்லை என இம்ரான் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் ஆகியோருக்கு எதிராக பல்வேறு ஊழல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவர்கள் சில வழக்குகளில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அடைப்பட்டிருக்கும் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி நேற்று மற்றொரு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை திருப்பித் ...

Read More »

அரசியல் சகதிக்குள் சிக்கித் தத்தளிக்கும் நிலை !

கல்­முனை வடக்கு உப­பி­ர­தேச செய­ல­கத்தைத் தர­மு­யர்த்­தக்­கோரி நடத்­தப்­பட்ட  உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்டம் கடந்­த­ வாரம் அனை­வ­ரது கவ­னத்­தையும் ஈர்த்­தி­ருந்­தது. கடந்த திங்கள்(17) முதல் ஞாயிறு (23) ஏழு தினங்கள் சாகும்­வரை உண்­ணா­வி­ர­த­மி­ருந்த கல்­முனை சுபத்ரா ராமய விகா­ரா­தி­பதி வண.ரண்­முத்­து­கல சங்­க­ரத்ன தேரர் கிழக்­கி­லங்கை இந்­து ­கு­ருமார் ஒன்­றியத் தலை­வரும் கல்­முனை முருகன் ஆலய பிர­தம குரு­வு­மான சிவஸ்ரீ க.கு.சச்­சி­தா­னந்த சிவக்­கு­ருக்கள் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் கல்­முனை மாந­க­ர­சபை உறுப்­பி­னர்­க­ளான சந்­தி­ர­சே­கரம் ராஜன், அழ­கக்கோன் விஜ­ய­ரெத்­தினம் அனைத்து இந்து ஆல­யங்­களின் ஒன்­றி­யத்­த­லை­வரும் தொழி­ல­தி­ப­ரு­மான  கிருஸ்­ண­பிள்ளை லிங்­கேஸ்­வரன் ஆகியோர் இதில் ...

Read More »

கடமைகளை பொறுப்பேற்ற ஆஸ்திரியாவுக்கான சிறிலங்கா தூதுவர்!

ஆஸ்திரியாவுக்கான  சிறிலங்கா  தூதுவராக நியமனம் பெற்றுள்ள சரோஜா சிறிசேன நேற்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து உரையாற்றிய அவர், ஆஸ்திரியாவுடனான அரசியல் மற்றும் பொருளாதாரத் தொடர்புகளை மேலும் விரிவுபடுத்துவதன் ஊடாக ஆஸ்திரிய – சிறிலங்கா நாடுகளுக்கு இடையிலான நெருக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அத்தோடு ஆஸ்திரியாவின் ஒத்துழைப்புடன் இலங்கையில் சுற்றுலாத்துறையை மீண்டும் வலுப்படுத்துவது குறித்தும் அவர் கருத்து வெளியிட்டார். தூதுவர் சரோஜா சிறிசேன கடந்த 1998 ஆம் ஆண்டில் சிறிலங்காவின் வெளிவிவகார சேவையில் இணைந்து கொண்டார். ஆரம்பத்தில் பொருளாதார விவகாரங்களுக்கான பணிப்பாளர் ...

Read More »

பேராசிரியர் விக்னேஸ்வரனின் மனுவை ஒத்திவைத்த உயர் நீதிமன்றம்!

யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன், தன்னைப் பதவியிலிருந்து நீக்கயமையை எதிர்த்து தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையை எதிர்வரும் 26ஆம் திகதிவரை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான மூத்த அரச சட்டவாதி, மனுவின் அறிவித்தல் நீதிமன்றின் ஊடாகக் கிடைக்கப்பெறவில்லை என மன்றுரைத்ததையடுத்தே விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. தனது துணைவேந்தர் பதவியை நீக்கி ஜனாதிபதி வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்தவும் தற்போது தகுதிவாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் கந்தசாமியின் நியமனத்தை இடைநிறுத்தி வைக்கவும் இடைக்காலக் கட்டளை ஒன்றை ...

Read More »

ஹேமசிறி, பூஜித்தவுக்கு நாளை வரை விளக்கமறியல்!

குற்றப்புலனாய்வுபிரிவினரால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் உள்ள  காவல் துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். குற்றப்புலனாய்வுபிரிவினரால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் உள்ள  காவல் துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். 21/4 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களை  தடுப்­ப­தற்கு அல்­லது அதன் தாக்­கங்­களை குறைத்­துக்­கொள்­வ­தற்கு ...

Read More »

ஆசிய சாதனை படைத்த ராஜேஷ் வைத்யா!

வீணை வாசிப்பில் மேஸ்ட்ரோ பட்டம் பெற்ற ராஜேஷ் வைத்யா, தற்போது தனது குழுவினருடன் ஆசிய அளவில் ஒரு புதிய சாதனை படைத்திருக்கிறார். வீணை வாசிப்பில் மேஸ்ட்ரோ பட்டம் பெற்றவர் ராஜேஷ் வைத்யா. பிரபல இசையமைப்பாளரான ஜி.ராமநாதன் இவரது பெரியப்பா ஆவார். ராஜேஷ் வைத்யா, தனது குழுவினருடன் 60 நிமிடங்களில் 60 பாடல் துணுக்குகளை வாசித்து, ஆசிய அளவில் ஒரு புதிய சாதனை படைத்திருக்கிறார். தனியார் விடுதியில்  நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. ‘ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ ஆசிய நாடுகளின் தேசிய ...

Read More »

அவுஸ்திரேலியாவில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கி சூடு!

நபர் ஒருவரின் தலையில் துப்பாக்கியால் சுட்டமையினால் பதற்றமான நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது. சிட்னி புறநகர் பகுதியில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் குறித்து காவல் துறைக்குக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட தகவலை அடுத்து இன்று மாலை 5.30 மணியளவில் Bonnyrigg உள்ள அவசர பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். 32 வயதான நபரின் தலையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரத்த வெள்ளத்தில் காயத்துடன் அவர் மீட்கப்பட்டிருந்தார். காயமடைந்தவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் ...

Read More »

மரண தண்டனைக்கு எதிராக உயர் நீதிமன்றில் 12 மனுத் தாக்கல்!

தூக்கிலிட்டு மரணதண்டனையை அமுல் செய்வதை தடுத்து உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு உயர் நீதிமன்றத்தில் 12 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இன்று மாத்திரம் 11 மனுக்களும் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஒரு மனுவுமாக இந்த 12 மனுக்களும் தக்கல் செய்யப்பட்டுள்ளன. மரண தண்டனை விதிக்கப்பட்டுள கைதிகள் சிலரும், சிவில் சமூக பிரதிநிதிகள் சிலரும் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளில், ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய நால்வரை தேர்ந்தெடுத்து தூக்கிலிட்டு தண்டனையை நிறைவேற்றுவது சட்டத்துக்கு முரணானது எனவும், அதனூடாக சிறைக் கைதிகளின் அடிப்படை ...

Read More »

பூஜித்த, ஹேமசிறியை நீதிமன்றில் ஆஜர்செய்ய சட்டமா அதிபர் ஆலோசனை!

காவல் துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் சந்தேக நபர்களாக பெயரிட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு சட்டமா அதிபர் வழங்கிய ஆலோசனையை பதில் காவல் துறை மா அதிபர் இதுவரையில் செயற்படுத்தவில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. சட்டமா அதிபர் கடந்த ஜூன் மாதம் 27 ஆம் திகதி இதற்கான ஆலோசனையை பதில் காவல் துறை மா அதிபருக்கு வழங்கியுள்ளார். இந் நிலையில் அது தொடர்பில் இன்று வரை ...

Read More »

சிறிலங்காவில் இராணுவத்தளம் அமைக்கும் நோக்கம் எதுவும் இல்லை!

சிறிலங்காவில் இராணுவத்தளம் எதனையும் அமைக்கும் திட்டம் அமெரிக்காவுக்கு இல்லை. சிறிலங்காவுடன் எந்தவொரு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டாலும் அதுசிறிலங்காவின் இறையாண்மைக்கு முழுமையான மதிப்பை வழங்கும் வகையிலேயே மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்கா ‘படைகளின் நிலைப்பாடு’ தொடர்பான உடன்படிக்கையின் கீழ் சிறிலங்காவிடமிருந்து பெருமளவு இராணுவ சலுகைகளை நாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன என்று ஆங்கில பத்திரிகையொன்று வெளியிட்டிருந்த செய்தி தொடர்பில் சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிஸ்ட் மறுப்பு வெளியிட்டுள்ளார். குறித்த பத்திரிகைச் செய்தியை மேற்கோள் காட்டி அமெரிக்க தூதுவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளதோடு சிறிலங்காவில் ...

Read More »