சர்வதேச நீதிபதிகளுக்கே நாட்டில் எதிர்ப்பு காணப்படுகின்றதே தவிர சர்வதேச விசாரணையாளர்களுக்கு அல்லவென தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளுக்கு சர்வதேச விசாரணையாளர்களை கொண்டுவருவோம் என உறுதியாக தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்களை முல்லைத்தீவில் சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அத்தோடு, சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு தொடர்பாக கதைப்பதற்கு இன்னும் காலம் உள்ளதென்றும், தற்போது அது தொடர்பாக கதைத்து வரவிருக்கும் சர்வதேச விசாரணையாளர்களையும் இல்லாமல் செய்ய முடியாதென இதன்போது சுட்டிக்காட்டினார்.
Read More »குமரன்
மிட்செல் ஸ்டார்க் , டேல் ஸ்டெயின் உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் – அவுஸ்திரேலியாவின் முன்னாள் அதிரடிவீரர் கில்கிறிஸ்ட்
மிட்செல் ஸ்டார்க் மற்றும் டேல் ஸ்டெயின் ஆகியோர்கள் தான் உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் என்று அவுஸ்திரேலியாவின் முன்னாள் அதிரடிவீரர் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார். அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும், தொடக்க ஆட்டக்காரராகவும் விளங்கிய கில்கிறிஸ்ட், அவர் விளையாடும் போது அதிரடியால் எதிரணிக்கு பயம் காட்டுவார். இவருக்கு பந்துவீச வேண்டும் என்றால் உலக பந்துவீச்சாளர்கள் அனைவருக்கும் சற்று நடுக்கம் ஏற்பட தான் செய்யும். இந்நிலையில் கிரிக்கெட்டில் அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், நீண்ட வருடங்களாக தொடர்ச்சியாக சிறந்த வகையில் பந்து வீசி வரும் டேல் ஸ்டெயின் ...
Read More »முதலமைச்சருக்கு எதிராக மீண்டும் சதித்திட்டம் போடும் சிவமோகன்!
வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக சதித்திட்ட நடவடிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் ஈடுபட்டுள்ளார். முல்லைத்தீவு மாற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகங்களுக்கு சில மக்களை அழைத்து வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக போராட்டம் ஒன்றினை நடத்தை முடிவு செய்துள்ளார்.
Read More »விஞ்ஞானியாக விரும்பும் யுவலட்சுமி
அப்பா, அம்மா கணக்கு படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் யுவலட்சுமி. அதன் பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தும் தற்போது படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். தற்போது பிளஸ் 1 படித்து வரும் யுவலட்சுமிக்கு ஒரு விஞ்ஞானியாகி மக்களுக்கு பயன்படும் ஒரு அறிவியல் கண்டுபிடிப்பை நிகழ்த்த வேண்டும் என்பதுதான் லட்சியமாம். காரைக்கால் தான் யுவலட்சுமியின் சொந்த ஊர். அப்பா பாண்டிச்சேரி அரசு பணியில் இருக்கிறார். 6 வயதிலிருந்து பரதநாட்டியம் கற்று வருகிறார். அதில் திறமையை காட்டி பல பரத நாட்டிய போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை ...
Read More »ஆரோக்கியத்தை காக்கும் சிரிப்பு பயிற்சி
வயதானவர்களின் ஆரோக்கிய வாழ்வுக்கு சிரிப்பு பயிற்சி மருந்தாக இருக்கும் என அமெரிக்காவின் ஜியோர்கியா மாகாண பல்கலை மருத்துவர்கள் தங்களது ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். பொதுவாக மனிதர்கள் 50 வயதினை தாண்டும் போது அவர்களது ஆரோக்கியம் பல வகையான நோய்களால் பாதிக்கப்பட ஆரம்பிக்கிறது. நீரிழிவு, ஆஸ்துமா, நரம்புதளர்ச்சி, மூட்டுவலி போன்ற நோய்கள் வயதான காலத்தில் வருகின்றன. இந்த நோய்களின் தாக்கத்திலிருந்து தங்களை காத்துக் கொள்ள வயதானவர்கள் உட்பட எந்த வயதினராக இருந்தாலும் மருத்துகளை மட்டும் நம்பாமல் சில இயற்கையான வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ...
Read More »ரஷ்யா பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு
ரஷ்யாவில் பாராளுமன்ற கீழ் சபை தேர்தல் வாக்குப் பதிவு முடிவடைந்துள்ளது. இந்த தேர்தலில் அதிபர் விளாதிமிர் புதின் ஆதரவு கட்சி வெற்றி பெறும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. ரஷியா நாட்டில் 450 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்ற கீழ்சபை இயங்கி வருகிறது. ‘டுமா’ என்றழைக்கப்படும் இந்த கீழ்சபைக்கு நேற்று(18-ம் தேதி) தேர்தல் நடைபெற்றது. 2011-ம் ஆண்டு புதினுக்கு எதிராக தலைநகர் மாஸ்கோவில் மாபெரும் போராட்டங்கள் நடைபெற்ற பிறகு நடைபெற்ற முதல் சுதந்திரமான தேர்தல் இது தான். சனிக்கிழமை இரவு 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை ...
Read More »தமிழீழம்- அவுஸ்திரேலிய புள்ளி விபரத்திணைக்களம் நீக்கியது சட்டவிரோதமானது
தமிழீழம் என்ற தனியான பிரிவு நீக்கப்பட்டமை சட்டவிரோதமானது என தெரிவித்து தமிழரல்லாத சாரா றோஸ் என்ற பெண் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் கடிதம் ஒன்றை எழுதியுள்ள அவர் இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இலத்திரனியல் கருத்துக் கணிப்பில் தமிழ் ஈழம் பற்றிய விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. பிறந்தநாடு என்ற கேள்விக்கு தமிழீழம் என குறிப்பிடுவதற்கு அவுஸ்திரேலிய புள்ளி விபரத்திணைக்களம் வழிவகை செய்திருந்தது. எனினும், இலங்கை அரசாங்கத்தின் நேரடி தலையீட்டை அடுத்து தமிழீழம் என்ற அந்த ...
Read More »ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனை-காணொளி எடுக்க ஏற்பாடு
புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்ட ராம்குமாரின் உடல் சென்னை ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இன்று(19) நடைபெறும் பிரேத பரிசோதனையை காணொளி எடுக்க ஏற்பாடு நடந்து வருகிறது. சுவாதி கொலை வழக்கு தொடர்பாக, நெல்லை மாவட்டம், செங்கோட்டையை அடுத்த மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டு சென்னை, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் நேற்று(18) சிறையில் உள்ள மின்சார வயரை கடித்ததால் மின்சாரம் தாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த வைத்தியர்கள், ராம்குமார் ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே ...
Read More »சூர்யா-ஜோதிகாவின் செல்ல மகள் நாயகியானாள்
என்னது, சூர்யா-ஜோதிகாவின் செல்ல மகள் தியா அதற்குள் நாயகிஆகிவிட்டாரா என்று நினைக்க வேண்டாம். இது அவர்களின்சொந்த மகள் அல்ல திரைபடத்தில் மகள். சில்லுன்னு ஒரு காதல் படத்தில் சூர்யா-ஜோதிகாவின் மகளாக நடித்த ஸ்ரியா சர்மாவை நினைவிருக்கிறதா? ஆம், அதே குட்டிப் பொண்ணு தான். அவர் தெலுங்கில் நாயகியாகிவிட்டார்.அவர் நடித்த நிர்மலா கான்வென்ட் என்ற படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.
Read More »கண்பார்வையற்ற தாயால் தன் சிசுவை ‘காண’ முடியும்
கருவறையில் வளரும் தங்கள் சிசுவின், ‘ஸ்கேன்’ படத்தை முதல் முறையாகப் பார்ப்பது, பெற்றோருக்கு ஒரு உணர்ச்சிகரமான அனுபவம். ஆனால், பெற்றோரில் ஒருவருக்கு அல்லது இருவருக்குமே பார்வை இல்லாவிட்டால், அந்த அற்புத அனுபவம் அவர்களுக்கு கிடைக்காமலே போய்விடும். ஆனால், அவர்களுக்கும் தங்கள் சிசுவை பார்க்க வழி செய்திருக்கிறது, போலந்திலுள்ள, ‘இன் யுடெரோ 3டி’ என்ற ஒரு நிறுவனம். மருத்துவர் எடுக்கும் அல்ட்ரா ஸ்கேன் கோப்பினை, 3டி பிரின்டர் எனப்படும் முப்பரிமாண அச்சியந்திரம் புரிந்துகொள்ளும் கோப்பாக, இன் யுடெரோ நிறுவனம் மாற்றுகிறது. இதற்கென சொந்தமாக ஒரு மென்பொருளை ...
Read More » Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				 
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			