குமரன்

2017 புத்தாண்டை வரவேற்ற அவுஸ்ரேலியா

உலக நாடுகளில் அவுஸ்ரேலியா மற்றும் நியூசிலாந்து முதன்முதலில் புத்தாண்டை வரவேற்பது வழக்கம். அதன்படி 2017 புத்தாண்டை கண்கவர் வாணவேடிக்கையுடன் வரவேற்றுள்ளனர். 2016-ம் ஆண்டு இன்றுடன் முடிவடைகிறது. இதனால் உலக மக்கள் அனைவரும் 2017-ஐ மகிழ்ச்சியுடன் வரவேற்க தயாராக இருக்கிறார்கள். அந்தந்த நாட்டு மக்கள் அவர்களின் தலைநகரில் கண்கவர் வாணவேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்பது வழக்கம். இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணியாகும்போது அவுஸ்ரேலியாவின் மெல்போர்னில் சரியாக நள்ளிரவு 12.00 மணியாகும். இந்த நேரத்தில் அங்குள்ள மக்கள் கண்கவர் வாணவேடிக்கையுடன் 2017 புத்தாண்டை வரவேற்றனர். இதேபோல் ...

Read More »

கச்சதீவில் மிதக்கும் துறைமுகம் ஒன்று அமைக்க நடவடிக்கை!

இந்திய இலங்கை மீனவர்கள் தொழிலின் போது வலைகளை உலர்த்தவும் ஓய்வெடுக்கவும் அனுமதிக்கப்பட்ட கச்சதீவில் இலங்கை கடற்படை அமைத்துள்ள தளத்தை பாதுகாக்க நடவடிக்கைகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அவ்வகையில் வருடாந்த திருவிழாவுக்கு பக்தர்கள் வந்து செல்ல வசதியாக கச்சதீவில் மிதக்கும் துறைமுகம் ஒன்று அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. சுற்றுலாதுறை அமைச்சின் நிதியுதவியுடன் 7 மில்லியன் ரூபாய் செலவில் மிதக்கும் துறைமுகம் அமைக்க உத்திதேசிக்கப்பட்டுள்ளது. இங்கு துறைமுகம் இன்மையினால் கடற்படையினரின் பாரிய மிதவை படகு மூலம் பக்தர்கள் ஏற்றி இறக்கப்படுவது சிரமமான ஒன்றாக காணப்படுகிறது. இதனையடுத்து, ...

Read More »

அவுஸ்ரேலியாவில் மதுபான பாவனைக்கு தடை?

அவுஸ்ரேலியாவின் பிரபலமான சிட்னி கடற்கரைப் பகுதியில் கோடை காலம் முழுவதும், மதுபான பாவனை தடை செய்யப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களின் போது மட்டும் சிட்னி கடற்கரைப் பகுதியில் சுமார் 15 தொன்னுக்கும் மேற்பட்ட குப்பைகூழங்கள் குவிந்தமையை அடுத்தே, இந்த தடை விதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. கிறிஸ்மஸ் அன்று மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குறித்த கடற்கரைப் பகுதியில் தமது நேரத்தை செலவழித்ததோடு மட்டுமல்லாது, பெருந்திரளான போத்தல்கள், சிகரெட் பக்கற்றுக்கள் மற்றும் ஏனைய கழிவுப் பொருட்களை விட்டுச் சென்றுள்ளனர். இந்நடவடிக்கையை ‘இழிவான செயல்’ என வர்ணித்துள்ள ரன்விக் (Randwick) நகரபை, இதன் ...

Read More »

புதுவருடத்தில் அவுஸ்ரேலியாவில் தாக்குதல் நடத்த திட்டம்!

புது வருடத்தில் அவுஸ்ரேலியாவில் தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாக தெரிவித்து லண்டனில் இருந்து சிட்னி சென்ற ஒருவரை விமானநிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட குறித்த நபர் 40 வயதுடையவர் என வெளிநாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கைது செய்யப்பட்ட குறித்த நபர் சிட்னி நகரப்பகுதியில் வசித்து வருவதாகவும், புதுவருட தினம் அன்று மாலை வேளையிலேயே தாக்குதல் மேற்கொள்ள இருப்பதாக இணையத்தில் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவருடைய ...

Read More »

எரிபொருள் இல்லா ‘ராக்கெட்’ சாத்தியமா?

அமெரிக்க விண்வெளி அமைப்பான, ‘நாசா’வின் ஒரு பிரிவான, ‘ஈகிள் வொர்க்ஸ் லேபரட்டரீஸ்’ என்ற நிறுவனம், அண்மையில், மின் காந்தவிசை மூலம் உந்து சக்தி தரும் இயந்திரம் பற்றிய ஒரு ஆய்வின் முடிவை வெளியிட்டுள்ளது. ‘எம் டிரைவ்’ என்று அழைக்கப்படும் அந்த இயந்திரம், கூம்பு வடிவில் உள்ள ஒரு தாமிர கலனைக் கொண்டது. வெற்றிடத்தில் இந்தக் கலனை வைத்து, அதனுள் நுண்ணலைகளை மோத விடுவதால், மிகச் சிறிய அளவில் உந்து சக்தி கிடைப்பதாக ஈகிள் வொர்க்சின் ஆய்வு தெரிவித்துள்ளது.பிரிட்டனைச் சேர்ந்த ரோஜர் சாயர் என்ற பொறியாளர், ...

Read More »

ஜேசுதாசுக்கு பாத பூஜை செய்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

பின்னணி பாடகர் ஜேசுதாசுக்கு, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாத பூஜை செய்தார். அப்போது அவர் தனது குருவுக்கு காணிக்கை செலுத்துவதாக கூறினார். சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாட ஆரம்பித்து 50 வருடங்கள் ஆகின்றன. இதையொட்டி, அவர் உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்தார். கனடா, மலேசியா, ரஷியா, இலங்கை, துபாய், அமெரிக்கா ஆகிய நாடுகளில் அவர் இசை நிகழ்ச்சிகள் நடத்திவிட்டு சென்னை திரும்பினார். நேற்று சென்னையில் அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பின்னணி பாடகர் ஜேசுதாசையும், அவரது மனைவி பிரபாவையும் மேடைக்கு ...

Read More »

மெல்போர்னில்அவுஸ்ரேலிய அணியின் அதிகபட்சம்

மெல்போர்ன் டெஸ்டில் கடைசி நாளில் அதிரடி திருப்பமாக பாகிஸ்தானை 163 ரன்களில் சுருட்டி அவுஸ்ரேலியா இன்னிங்ஸ் வெற்றியை ருசித்தது. அவுஸ்ரேலியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் கடந்த 26-ந்திகதி தொடங்கியது. ‘பாக்சிங் டே’ என்று அழைக்கப்பட்ட இந்த டெஸ்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 443 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது. அவுஸ்ரேலிய அணி புத்தாண்டு பரிசாக இன்னிங்ஸ் மற்றும் 18 ரன்கள் வித்தியாசத்தில் ‘மெகா’ வெற்றியை பெற்றது. ஏற்கனவே முதலாவது டெஸ்டிலும் அவுஸ்ரேலியா வெற்றி ...

Read More »

காணாமல் போனோரின் உறவினர்கள் உண்ணாவிரத போராட்டம்

வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வவுனியா மாவட்ட செயலகம் அருகில் உள்ள பண்டார வன்னியன் சிலைக்கு முன்பாக இன்று(30) இந்த ஆர்ப்பாட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். கடந்த யுத்த காலத்தின் போது காணாமல் போன தமது உறவுகள் குறித்து அரசாங்கம் உரிய பதிலை அளிக்க வேண்டும், மற்றும் சிறையில் விசாரணைகள் இன்றி நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை விடுதலை செய்யவேண்டும் எனத் தெரிவித்தே இவர்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். மேலும் குறித்த போராட்டமானது இன்று பிற்பகல் 4 மணி வரை முன்னெடுக்கப்பட உள்ளதாக ...

Read More »

அவுஸ்ரேலிய அணியின் துணை பயிற்சியாளராக கில்லெஸ்பி நியமனம்

இலங்கை தொடருக்கான அவுஸ்ரேலிய அணியின் துணை பயிற்சியாளராக ஜேசன் கில்லெஸ்பி நியமிக்கப்பட்டுள்ளார். அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முந்தைய நாள் வரை அவுஸ்ரேலிய டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. டி20 தொடரை முடித்துக்கொண்டு இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்வது சாத்தியமில்லை. இதனால் அவுஸ்ரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் டேரன் லீமேன் உடன் முதன்மை அணி இந்தியாவிற்கு வந்துவிடும். இலங்கை ...

Read More »

லயனுக்கு சிட்னி டெஸ்டில் இடம் கிடைக்குமா?

அவுஸ்ரேலியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான லயனுக்கு சிட்னி டெஸ்டில் உறுதியாக இடம் கிடைக்குமா என்பது உறுதியாக தெரியவில்லை. அவுஸ்ரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 2-வது டெஸ்ட் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அவுஸ்ரேலிய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 23 ஓவர்கள் வீசி 115 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டு மட்டுமே எடுத்துள்ளது. நாதன் லயனின் ...

Read More »