அவுஸ்ரேலிய அணியின் துணை பயிற்சியாளராக கில்லெஸ்பி நியமனம்

இலங்கை தொடருக்கான அவுஸ்ரேலிய அணியின் துணை பயிற்சியாளராக ஜேசன் கில்லெஸ்பி நியமிக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முந்தைய நாள் வரை அவுஸ்ரேலிய டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது.

டி20 தொடரை முடித்துக்கொண்டு இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்வது சாத்தியமில்லை. இதனால் அவுஸ்ரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் டேரன் லீமேன் உடன் முதன்மை அணி இந்தியாவிற்கு வந்துவிடும்.

இலங்கை அணிக்கெதிரான ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளரா ஜஸ்டின் லாங்கர் இருப்பார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பி துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவுஸ்ரேலியவில் பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பெர்த் ஸ்கார்ச்செர்ஸ் அணியின் பயிற்சியாளராக லாங்கரும், அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் கேப்டனாக கில்லெஸ்பியும் செயல்பட்டு வருகிறார்.