புது வருடத்தில் அவுஸ்ரேலியாவில் தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாக தெரிவித்து லண்டனில் இருந்து சிட்னி சென்ற ஒருவரை விமானநிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட குறித்த நபர் 40 வயதுடையவர் என வெளிநாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கைது செய்யப்பட்ட குறித்த நபர் சிட்னி நகரப்பகுதியில் வசித்து வருவதாகவும், புதுவருட தினம் அன்று மாலை வேளையிலேயே தாக்குதல் மேற்கொள்ள இருப்பதாக இணையத்தில் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவருடைய வீட்டை சோதனையிட்டு ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal