அவுஸ்ரேலியாவில் மதுபான பாவனைக்கு தடை?

அவுஸ்ரேலியாவின் பிரபலமான சிட்னி கடற்கரைப் பகுதியில் கோடை காலம் முழுவதும், மதுபான பாவனை தடை செய்யப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களின் போது மட்டும் சிட்னி கடற்கரைப் பகுதியில் சுமார் 15 தொன்னுக்கும் மேற்பட்ட குப்பைகூழங்கள் குவிந்தமையை அடுத்தே, இந்த தடை விதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

கிறிஸ்மஸ் அன்று மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குறித்த கடற்கரைப் பகுதியில் தமது நேரத்தை செலவழித்ததோடு மட்டுமல்லாது, பெருந்திரளான போத்தல்கள், சிகரெட் பக்கற்றுக்கள் மற்றும் ஏனைய கழிவுப் பொருட்களை விட்டுச் சென்றுள்ளனர்.

இந்நடவடிக்கையை ‘இழிவான செயல்’ என வர்ணித்துள்ள ரன்விக் (Randwick) நகரபை, இதன் காரணமாக குறித்த பகுதியில் மதுபான பாவனையை தடை செய்யவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.