விடுதலைப் புலிகளின் உறுப்பினரான குமரன் பத்மநாதனை கைது செய்ய வேண்டுமாயின் இலங்கை, சர்வதேச இன்டர்போல் பொலிஸாரிற்கு சிவப்பு அறிக்கை அனுப்ப தீர்மானிக்க வேண்டும் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் ஆங்கில ஊடகம், இன்டர்போல் அலுவலகத்திடம் தொடர்பு கொண்ட போது, எந்த நாட்டிலும் உள்ள ஒரு தனி நபரை கைது செய்ய வேண்டுமாயின் முதலில் சிவப்பு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கூறியுள்ளது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கு தொடர்பாக இந்தியாவினால் கே.பி தேடப்பட்டு வருகின்றார். ...
Read More »குமரன்
கிளிநொச்சியில் மாபெரும் கூட்டுப் புதைகுழி
கிளிநொச்சியில் மாபெரும் கூட்டுப் புதைகுழியொன்றின் அமைவிடம் குறித்த தகவல்களை முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளார். இலங்கையில் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் யாப்பு தொடர்பில் மல்வத்து மகாநாயக்க தேரருக்கு விளக்கமளிப்பதற்காக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச அண்மையில் தலதா மாளிகைக்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது புதிய அரசியலமைப்பின் ஊடாக போர்க்குற்றங்கள் தொடர்பில் தண்டனை வழங்கும் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டு, இராணுவத்தினர் தண்டிக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தார். அத்துடன் அண்மையில் விலக்கிக் கொள்ளப்பட்ட இராணுவ முகாம் ஒன்று அமைந்திருந்த இடத்தில் பாரிய கூட்டுப் புதைகுழியொன்று ...
Read More »உடுவில் மகளிர் கல்லூரியின்அதிபர் மாற்றம் ஒர் அலசல்
உடுவில் மகளிர் கல்லூரியின் அதிபராக கடந்த 12 வருடங்களாகச் பணியாற்றிக்கொண்டிருந்த திருமதி ஷிராணி மில்ஸ்க்கு திடீர் ஒய்வினை வழங்கவதையிட்டு மாணவிகள் ஆர்பாட்டம், உண்ணாநோன்பு ஆகியவற்றில் ஈடுபட்டனர். மாற்றத்திற்க்கு தென்னிந்தியத் திருச்சபையின் பேராயர் டானியல் தியாகராஜாவின் தலையீடு தொடர்பாக ஆசிரியர்கள் , மாணவிகள் ,பெற்றோர், நலன் விரும்பிகள்,ஊடகவியலாளர், பேராயர் …போன்றோரிடம் அலசிய பல்வேறு கருத்துக்களை ஒஸ்ரேலிய வானிசை வானொலியின் செய்தி பெட்டகத்தில் ஒலிபரப்பானது . இதில் இணைக்கபட்டுள்ளது. https://archive.org/details/UduvilProtest
Read More »விஞ்ஞானிக்கு கிடைத்தது ரூ.3.34 கோடி பரிசு!
அமெரிக்காவில் வாழும் இந்திய விஞ்ஞானியான ரமேஷ் ரஸ்காருக்கு, மதிப்புமிக்க, ‘லெமெல்சன்- எம்.ஐ.டி.,’ பரிசு கிடைத்திருக்கிறது. இந்த பரிசுடன், 3.34 கோடி ரூபாய் ரொக்கமும் அவருக்கு வழங்கப்படும். மஹாராஷ்டிராவிலுள்ள நாசிக் நகரை பூர்வீகமாகக் கொண்ட, 46 வயது ரமேஷுக்கு, ‘மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பல கண்டுபிடிப்புகளை’ செய்ததற்காக இந்த விருது கிடைத்துள்ளது.அமெரிக்காவில், இன்று அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஊற்றுக் கண்ணாக கருதப்படும், கல்வி மையமான மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையத்தில் இவர் பேராசிரியராக இருக்கிறார். அதி தீவிர ஆராய்ச்சியாளரான ரமேஷ், புகைப்படக் கருவி, ஒளி, ஊடக சாதனங்கள் ...
Read More »விக்னேஷ் மரணத்திற்கு பிறகாவது காவிரி தாய் எங்கள் பூமியை நனைக்கட்டும்
விக்னேஷ் மரணத்திற்கு பிறகாவது காவிரி தாய் எங்கள் பூமியை நனைக்கட்டும் என பாரதி ராஜா கூறியுள்ளார். கர்நாடக அரசை கண்டித்து சென்னையில் நடந்த கண்டன பேரணியில் மன்னார்குடியை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் தீக்குளித்தார். கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்னேஷ் இறப்பிற்கு இயக்குநர் பாரதி ராஜா இரங்கல் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர் கூறியுள்ளதன் சுருக்கம்:தமிழ் ஈழப் பிரச்னையில் தீக்குளித்த முத்துகுமார் தொடங்கி காஞ்சிபுரத்தில் தீக்குளித்த செங்கொடி, தற்போது காவிரி நிதி நீர் பிரச்னையில் தீக்குளித்த ...
Read More »உங்கள் போனில் சார்ஜ் நீடிக்கவில்லையா?
வாழ்க்கையில் பிரிக்க முடியாத கருவியாகிவிட்ட ஸ்மார்ட்போன்களில் பல நாட்களாக இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக அதன் பேட்டரி பேக்கப் இருக்கின்றது. என்ன செய்தாலும் காலை சார்ஜ் செய்தால் இரவு வரை கூட முழுமையாக நீடிக்கவில்லை என எல்லோரும் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் நாம் தான் என தெரியுமா?… இத்தனை நாட்களாக ஸ்மார்ட்போனினை நாம் அனைவரும் தவறாக சார்ஜ் செய்து வருகின்றோம். பேட்டரி யூனிவர்சிட்டி என அழைக்கப்படும் பேட்டரி நிறுவனமான கேடெக்ஸ், ஸ்மார்ட்போன் கருவிகளில் இருக்கும் லித்தியம் அயன் பேட்டரி மற்றும் அதில் நீண்ட ...
Read More »‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணிக்கு ஈபிடிபி ஆதரவாம்!
‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணிக்கு தமது தார்மீக ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈபிடிபி) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் அண்மையில் நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பாக ஆராயப்பட்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெளியுலகிற்கு தெரியப்படுத்தும் வகையில் இம்மாதம் 24ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானம் வரையில் எழுச்சிப் பேரணி நடைபெறவுள்ளது. இந்த எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தார்மீக ஆதரவை வழங்கி ...
Read More »விலங்குகள் நல வாரிய தூதராக ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா
பிரபல நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா. சினிமா துறையை சேர்ந்த இவர் விலங்குகள் நல வாரிய தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து இந்திய விலங்குகள் நல வாரிய துணைத் தலைவர் எஸ்.சின்னி கிருஷ்ணா கூறும்போது, “நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவை விலங்குகள் நல வாரிய உறுப்பினராக சேர்க்க பிற உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தனர். இதன்படி, அவர் உறுப்பினராக சேர்க்கப்பட்டு, விலங்குகள் துணை குழுவில் உறுப்பினராக செயல்படுவார். இவரை விலங்குகள் நல வாரிய தூதராகவும் நாங்கள் நியமித்துள்ளோம். இவர் சினிமா துறையில் தீவிரமாக ...
Read More »புலிட்சர் பரிசு பெற்ற அமெரிக்க நாடக ஆசிரியர் எட்வர்ட் எல்பி காலமானார்
எழுத்து துறைக்கு வழங்கப்படும் உலகின் மிக உயரிய ‘புலிட்சர்’ பரிசை மூன்றுமுறை பெற்ற ஆங்கில நாடக ஆசிரியரான எட்வர்ட் எல்பி தனது 88-வது வயதில் அமெரிக்காவின் நியூயர்க் நகரில் காலமானார். சிறுவயது முதல் கற்பனை வளம்மிக்கவராக இருந்த எட்வர்ட் எல்பி நாவல் மற்றும் கவிதை துறையில் தன்னால் பெரிதாக ஜொலிக்க இயலாது என்று சுயமதிப்பீடு செய்து பின்னர் 1950-ம் ஆண்டுவாக்கில் அமெரிக்க மேடை நாடகத்துறைக்குள் அடியெடுத்து வைத்தார். ’ஹூ இஸ் அப்ரெய்ட் ஆப் விர்ஜினியா உல்ப்’ (Who’s Afraid of Virginia Woolf?) என்ற ...
Read More »ஒரு டேப்… ஒரு செய்தி
செய்திகளைத் தெரிந்துகொள்ள மேலும் ஒரு புதிய வழியாக ‘தி ஹாஷ் டுடே’ இணையதளம் அறிமுகமாகியுள்ளது. இந்தத் தளத்தில் இப்போதைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ளலாம். ஆனால் வழக்கமான செய்தித் தளங்கள் போல் அல்லாமல் புதுமையான முறையில், தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகளை முன்வைக்கிறது. ‘ஹாஷ் டேப்’ எனும் பெயரில் இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ‘குரோம் பிரவுசர்’ நீட்டிப்புச் சேவையைத் தரவிறக்கம் செய்துகொண்டால் அதன் பிறகு ஒவ்வொரு முறை பிரவுசரில் புதிய ‘டேப்’ஐத் திறக்கும்போது, ஒரு தலைப்புச் செய்தி தோன்றும். ஆர்வம் இருந்தால் அதை கிளிக் செய்து படித்து மேலும் ...
Read More »