அவுஸ்ரேலியாவிலுள்ள குவீன்ஸ்லாந்து பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஒரே கடியில் மூன்று வகை விஷங்களை செலுத்தும் குட்டி மீன் இனத்தை கண்டறிந்துள்ளனர். மிகச் சிறிய மீனான இதன் விஷம், பெரிய மீன்களைக் கொல்லாமல், தற்காலிகமாக செயலிழக்கச் செய்கிறது. இந்த விஷம், மனிதர்களுக்கு வலி நிவாரணியாகவும், நரம்பியல் நோய்களுக்கு மருந்தாகவும் பயன்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
Read More »குமரன்
இந்தி பட உலகை நம்பி நான் இல்லை! –
இந்த பட உலகை நம்பி நான் இல்லை என்று கமல் பட நாயகி அதிரடியாக அறிவித்துள்ளார். இந்தி படஉலகில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் ரவீணா தண்டன். இவர் தமிழில் கமல் நடிப்பில் வெளிவந்த ‘ஆளவந்தான்’ படத்திலும் நடித்துள்ளார். சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கிஇருந்த ரவீணா, ‘மாத்தர்’ என்ற படத்தின் மூலம் மீண்டும் இந்தி படங்களில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். இந்த படத்தை பிரபலப்படுத்துவதில் தீவிரமாக இருக்கிறார். இந்நிலையில் படங்களில் நடிப்பது பற்றி கூறிய ரவீணா தண்டன், “இந்தி பட உலகை மட்டும் நம்பி ...
Read More »மோடியுடன் செல்பி எடுத்த அவுஸ்ரேலிய பிரதமர்!
மோடி, மால்கம் ஆகியோர் டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர். அப்போது இருவரும் மாறி மாறி செல்ஃபி எடுத்துக் கொண்ட சம்பவம் அனைவரையும் கலகலப்பாக்கியது. அவுஸ்ரேலிய பிரதமர் உடனான சந்திப்பு குறித்து மோடி கூறியபோது, “சமீபகாலமாக இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான உறவுகளுக்கு முக்கியத்துவம் கிடைத்துள்ளது. மால்கம் வருகையால் அது தற்போது மேலும் பலப்படுத்தப்பட்டு, புதிய மைல்கற்களை தொட்டுள்ளது” என்று கூறினார். அவுஸ்ரேலிய பிரதமர் மால்கம் பேசுகையில், “இந்திய மாணவர்களுக்கு அவுஸ்ரேலியாவில் சிறப்பான வாய்ப்புகளை உருவாக்கி தருவதில் தொடர்ந்து முன்னுரிமை அளிப்போம்” என்று கூறினார். ...
Read More »இந்தியா அவுஸ்ரேலியா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!
தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது உள்ளிட்ட 6 முக்கிய ஒப்பந்தங்கள் இந்தியா அவுஸ்ரேலியா இடையே கையெழுத்தாகின. அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அவுஸ்ரேலியா பிரதமர் மால்கம் டர்ன்புல் டெல்லியில் பிரதமர் மோடியை நேற்று (10) சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது பல்வேறு துறைகளில் இருநாடுகளுக்கிடையேயான நட்புறவை மேம்படுத்துவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அவர்கள் விவாதித்தனர். இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தாகின. தீவிரவாதம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குற்றச்செயல்களை ஒழிக்க இருநாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது, பயணிகள் ...
Read More »22 மேஜர் ஜெனரல்களின் கனவைப் பொசுக்கிய சிறீலங்கா இராணுவத் தளபதி!
சிறீலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா மூன்றாவது தடவையும் தனது பதவிக்காலத்தை நீடிப்பதற்கான கோரிக்கையை, சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவிடம் விடுத்திருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறீலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவின் பதவிக் காலம் இவ்வருடம் ஓகஸ்ட் மாதத்துடன் நிறைவடைகின்றது. 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 21ஆம் நாள் 55வயதையடைந்த லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவுக்கு முதலில் ஆறு மாதங்களும் பின்னர் ஒன்றரை வருடங்களும் சேவை நீடிப்பு வழங்கப்பட்டது. இவருக்கு மீண்டும் ஆறு மாதகாலம் ...
Read More »வெள்ளி போன்று மற்றொரு புதிய கிரகம் கண்டுபிடிப்பு
விண்வெளியில் வெள்ளி போன்று மற்றொரு புதிய கிரகத்தை அமெரிக்காவின் ‘நாசா’ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் சில சிறிய அளவிலான நட்சத்திரங்களும் இப்புதிய கிரகத்தை சுற்றி உள்ளன. விண்வெளியில் உள்ள கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டுபிடித்து ஆய்வு மேற் கொள்ள அமெரிக்காவின் ‘நாசா’ மையம் கெப்லர் விண்கலத்தை அனுப்பியுள்ளது. அதில் அதி நவீன சக்தி வாய்ந்த டெலஸ்கோப் பொருத்தப்பட்டுள்ளது. அந்த டெலஸ்கோப் சமீபத்தில் ஒரு புதிய கிரகத்தை கண்டுபிடித்து அதை போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பியது. அது ஏற்கனவே உள்ள வெள்ளி (வீனஸ்) கிரகத்தை போன்றே ...
Read More »69 மாடிகளைக் கொண்ட கிரிக்கெட் துடுப்பு வடிவிலான குடியிருப்பு
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களின் நலன்கருதி 69 மாடிகளைக் கொண்ட கிரிக்கெட் துடுப்பு வடிவிலான குடியிருப்பு ஒன்று அமைக்கப்படவுள்ளது. இதனை அமைக்க 1996 ஆம் ஆண்டு அவுஸ்ரேலியாவுக்கு எதிரான உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் வீரர்கள் முன்வந்துள்ளனர். அந்தவகையில், ‘96 வெற்றி நாயகர்கள் சதுக்கம்’ என்ற பெயரில் 69 மாடிகளை கொண்ட பாரிய குடியிருப்பு ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது. இவ்வாறு அமைக்கப்படும் கட்டடத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்படும் 500,000 இலட்சம் ரூபா வருவாயினை அவர்களின் நலனுக்காக வைப்பிலிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ...
Read More »ஜோக்கர் திரைப்படத்தை தமிழ் தவிர மற்ற மொழிகளிலும் படமாக்கபட உள்ளது
சிறந்த தமிழ்படத்திற்கான தேசிய விருது பெற்ற ஜோக்கர் திரைப்படத்தை மற்ற மொழிகளிலும் படமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய திரைப்படங்களுக்கான 64வது தேசிய விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் ஜோக்கர் திரைப்படத்திற்கு 2 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.. சிறந்த தமிழ்படத்திற்கான தேசிய விருதையும், இந்த படத்திற்கு பாடிய சுந்தர ஐயர், சிறந்த ஆண் பின்னனி பாடகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். இந்த படத்தை ராஜூ முருகன் இயக்கி உள்ளார். சிறந்த கதையம்சம், தேசிய கருத்தும் நிறைந்து இருந்ததால் இந்த படம் தேசிய விருது பெற்றுள்ளது என்றும் ...
Read More »மோடியுடன் அவுஸ்ரேலிய பிரதமர் மால்கோம் டர்ன்புல் சந்திப்பு
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பு ஏற்று அரசு முறைப் பயணமாக டெல்லி வந்துள்ள அவுஸ்ரேலிய பிரதமர் மால்கோம் டர்ன்புல் முன்னிலையில் இன்று இந்தியா- அவுஸ்ரேலியா இடையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. சீனாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு ஆஸ்திரேலிய பிரதமர் மால்கோம் டர்ன்புல்-ஐ சந்தித்தார். இந்தியா – அவுஸ்ரேலிய இடையிலான உறவுகளை பலப்படுத்தும் வகையில் புதுடெல்லிக்கு வருமாறு மோடி அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்று மால்கோம் டர்ன்புல் அரசு முறைப் பயணமாக ...
Read More »தமிழ் அரசியல் கைதிகளது போராட்டம் மே முதல்!
தமிழ் அரசியல் கைதிகளது விடுதலையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படவுள்ள வெகுஜனப்போராட்டங்களிற்கு அனைத்து தமிழ அரசியல் தலைவர்களது ஆதரவையும் கைதிகளது குடும்பங்கள் நேரினில் சந்தித்து கோரிவருகின்றன. எதிர்வரும் மே மாதம் முதல் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளது போராட்டத்திற்கு ஆதரவு கோரி இச்சந்திப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதனிடையே தமிழ்-சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை ஜனாதிபதியும் பிரதமரும் எடுக்க வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மாரிமுத்து. ...
Read More »