ஜோக்கர் திரைப்படத்தை தமிழ் தவிர மற்ற மொழிகளிலும் படமாக்கபட உள்ளது

சிறந்த தமிழ்படத்திற்கான தேசிய விருது பெற்ற ஜோக்கர் திரைப்படத்தை மற்ற மொழிகளிலும் படமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய திரைப்படங்களுக்கான 64வது தேசிய விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் ஜோக்கர் திரைப்படத்திற்கு 2 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.. சிறந்த தமிழ்படத்திற்கான தேசிய விருதையும், இந்த படத்திற்கு பாடிய சுந்தர ஐயர், சிறந்த ஆண் பின்னனி பாடகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார்.

இந்த படத்தை ராஜூ முருகன் இயக்கி உள்ளார். சிறந்த கதையம்சம், தேசிய கருத்தும் நிறைந்து இருந்ததால் இந்த படம் தேசிய விருது பெற்றுள்ளது என்றும் பலர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஜோக்கர் திரைப்படத்தை தமிழ் தவிர மற்ற மொழிகளிலும் படமாக்கபட உள்ளதாக தகவல் தெரிய வந்து உள்ளது.