குமரன்

‘மெர்சல்’ குறித்து கருத்து தெரிவித்த தணிக்கை குழு உறுப்பினரும், நடிகையுமான கௌதமி!

தரமான மருத்துவ தேவையை வலியுறுத்துவதால் ‘மெர்சல்’ படம் தன்னை கவர்ந்ததாக மத்திய தணிக்கை குழு உறுப்பினரும், நடிகையுமான கௌதமி கருத்து தெரிவித்துள்ளார். ‘மெர்சல்’ படத்துக்கு நடிகையும், மத்திய திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர்களில் ஒருவருமான நடிகை கௌதமி ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- மெர்சல் படத்தை நான் பார்த்தேன். ஜி.எஸ்.டி., டிஜிட்டல் இந்தியா உள்ளிட்ட சில வி‌ஷயங்களை தப்பாக எடுத்துக்கொள்ள எனக்கு அவ்வளவு பெரிய காரணம் எதுவும் தெரியவில்லை. எனக்கு இந்த படத்தில் அடிப்படையான ஒரு வி‌ஷயம் மட்டும் அல்லாமல், ரொம்ப ...

Read More »

இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டோரின் 30வது ஆண்டு நினைவு!

யாழ் போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் 30வது ஆண்டு நினைவுநாள் தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். போதனா வைத்தியசாலையில் 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21, 22 ஆம் திகதிகளில் வைத்தியசாலை வளாகத்துக்குள் நுழைந்த இந்திய படையினரால் சுட்டுப்படுகொலை செய்ய்பட்ட 21 பேரின் நினைவு தினம் இன்று நினைவு கூரப்பட்டது. 30வது ஆண்டு நினைவுநாள் நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் யாழ் போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது. அகவணக்கத்துடன் ஆரம்பமான நினைவு நிகழ்வில் உயிழந்தவர்களின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் ...

Read More »

மூடப்படும் தொழிற்சாலையால் 955 தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை!

அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரிலுள்ள ஹோல்டன் மோட்டார் வாகன உற்பத்தி நிலையம் மூடப்படுகிறது. இதனால் 955 தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இந்த வாகன உற்பத்தி ஆலைக்கு வாகன உபகரணங்களை வழங்கும் தொழிற்சாலைகளையும் சேர்த்தால், சுமார் 2,500 பேர் வேலை இழக்கும் நிலை உள்ளது என கூறப்படுகிறது. வேலை இழந்தவர்கள் புதிய வேலை தேடவும், இயல்பு வாழ்க்கை நடத்தவும் தெற்கு அவுஸ்திரேலிய அரசு வழங்கும் ஆதரவு தொடரும் என்று அந்த மாநில Premier Jay Weatherill தெரிவித்துள்ளார்.

Read More »

இனிமேல் சினிமா, இசை கச்சேரிகளில் பாட மாட்டேன்: பிரபல பாடகி ஜானகி

மைசூரில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமா, இசை மேடைகளில் தான் பாடப் போவதில்லை என்று பிரபல பின்னணி பாடகி ஜானகி மீண்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். தமிழ் திரையுலகில் நெஞ்சை விட்டு அகலாத பல இனிமையான பாடல்களை பாடியவர், எஸ். ஜானகி. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரை இசை பாடல்கள் பாடி பிரபலமானவர். இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே திரையுலகில் இருந்து விடைபெறுவதாக அறிவித்தார். ஆனால் நெருங்கியவர்களின் வற்புறுத்தல் காரணமாக மீண்டும் ...

Read More »

ஃபுல்-ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்ட ரெட்மி நோட் 5

சியோமி நிறுவனத்தின் MET7 என்ற குறியீட்டு பெயர் கொண்ட ஸ்மார்ட்போன் சீன வலைதளத்தில் கசிந்துள்ளது. இது ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 5A ஸ்மார்ட்போனினை ஆகஸ்டு மாத வாக்கில் அறிமுகம் செய்தது. தற்சமயம் சீனாவின் TENAA தளத்தில் MET7 என்ற குறியீட்டு பெயரில் சியோமி ஸ்மார்ட்போன் பட்டியலிடப்பட்டுள்ளது. இது ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனாக இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் ஃபுல் ஸ்கிரீன் 18:9 டிஸ்ப்ளே, மெட்டல் யுனிபாடி ...

Read More »

அவுஸ்ரேலிய குடியுரிமைச் சட்டத்தில் மாற்றம்!

அவுஸ்ரேலிய குடியுரிமைச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவதற்கென, முன்னெடுப்புகள் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் நாடாளுமன்றில் அரசு முன்வைத்த சட்டமுன்வடிவு, எதிர்கட்சிகளின் தந்திரோபாயமான நகர்வு மூலம் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ஒக்டோபர் 18 புதன்கிழமைக்கு முன்னர், தேவைப்படும் மாற்றங்களுடனான சட்டமுன்வடிவை தம்முன் சமர்ப்பிக்க வேண்டுமென, எதிர்கட்சிகளின் செனட்டர்களால் அரசுக்கு காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது. எனினும் அரச தரப்பினரால் இதனை நிறைவேற்றமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து நேற்றிரவு குறித்த சட்டமுன்வடிவு Senate Notice Board-இலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இதேவேளை இச்சட்டமுன்வடிவு மீண்டும் செனட் அவையில் கலந்துரையாடலுக்கு எடுக்கப்படுவதும் அதற்கான ஒப்புதலைப் பெறுவதும் மிகக்கடினம் என ...

Read More »

அதிக வேகம் கொண்ட தொழில்நுட்பமே 5G

தற்போது காணப்படும் இணைய வேகத்தினை காட்டினும் சில மடங்கு அதிக வேகம் கொண்ட தொழில்நுட்பமே 5G ஆகும். இத் தொழில்நுட்பம் முழுமையாக அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னர் MIMO எனப்படும் சாதனத்தினை பயன்படுத்தி 4G தொழில்நுட்பத்தினை 5G ஆக மாற்றும் தொழில்நுட்பம் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது. MIMO எனப்படுவது Multiple Inpur Multiple Output என்பதாகும்.இது 4G இணைய வேகத்தினை 50Mbbs அதிகரிக்க செய்கின்றது. 5G தொழில்நுட்பம் 2020ம் ஆண்டளவிலேயே நிறுவப்படும் என தெரிகின்றது. இதற்கிடையில் மேற்கண்ட முயற்சியினை ரிலையன்ஸ் நிறுவனம் உட்பட வொடாபோன் மற்றும் ...

Read More »

அமெரிக்காவுடனான உடன்பாடுகளை அவுஸ்ரேலியா நீக்கவேண்டும்!

அமெரிக்காவுடனான உடன்பாடுகளை அவுஸ்ரேலியா நீக்கவேண்டும் என வடகொரிய கடிதம் அனுப்பியுள்ளது. உலக சமாதானத்தை நிலைநாட்டவும், போரைத் தவிர்ப்பதற்காகவும் அமெரிக்காவுடனான உடன்பாடுகளை நீக்கவேண்டுமென மேலும் குறித்த கடித்ததில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் உறுதி செய்துள்ளார்.இந்தோனேஸியாவிலுள்ள வடகொரிய தூதரகமூடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில், குறிப்பிடப்பட்டுள்ளதாவது; அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அணுகுண்டு அச்சுறுத்தல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. முழு உலகின் இழப்பில் அமெரிக்கா நன்மையடையும் என்ற அமெரிக்க சிந்தனையையே டிரம்பின் வார்த்தைகள் பிரதிபலிக்கிறது என வடகொரியா சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் அணு ஆயுதப் போர் என்று ...

Read More »

கருணைக் கொலையை சட்டமாக்குவதற்கான வாக்கெடுப்பு!

விக்டோரிய மாநிலத்தில் Euthanasia எனப்படும் கருணைக் கொலையை சட்டமாக்குவதற்கு நாடாளுமன்றம் வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது. சர்ச்சைக்குரிய கருணைக் கொலையை ஆதரிக்கும் சட்டம், 24 மணிநேரத்திற்கும் மேலாக நீடித்த விவாதத்திற்குப் பின்னர் விக்டோரிய நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் நிறைவேற்றப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் 47 பேர் ஆதரவு தெரிவித்தும் 37 பேர் எதிர்ப்புத் தெரிவித்து வாக்களித்துள்ளதாக தெரியவருகிறது. பெரும்பான்மையான Labor கட்சி உறுப்பினர்கள், இரு Greens கட்சியினர், இரண்டு சுயேச்சைகள் மற்றும் சில Coalition நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த சட்டமூலத்திற்கு ஆதரவு தெரிவத்துள்ளதாக தெரியவருகிறது. இந்த சட்டமூலம் தற்போது 40 ...

Read More »

முதல் நாள் வசூலில் ‘கபாலி’ சாதனையை முறியடித்த ‘மெர்சல்’

விஜய் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் ‘மெர்சல்’ படம் முதல் நாளில் ரூ.24 கோடி வசூல் செய்து ரஜினியின் ‘கபாலி’ படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. நடிகர் விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் பல்வேறு இடையூறுகளை கடந்து நேற்று தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளா உள்பட உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. முதலில் ‘மெர்சல்’ பட தலைப்புக்கு பிரச்சினை ஏற்பட்டது. அதன் பிறகு மத்திய-மாநில அரசுகளை தாக்கும் வசனங்கள் இருப்பதாக புகார் எழுந்தது. படத்தில் பறவைகள் இடம் பெற்றதற்காக விலங்குகள் நலவாரியம் எதிர்ப்பு தெரிவித்தது. ...

Read More »